Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, November 29, 2010

இலவச லுங்கி – சேலை மற்றும் சைக்கிள் கொள்முதல் செய்திருப்பதில் ஊழல் - கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி நவ 29
இலவச லுங்கி – சேலை மற்றும் சைக்கிள் கொள்முதல் செய்திருப்பதில் ஊழல் முறைகேடு குறித்து, புதுவை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் சார்பில் நான்கு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி இலவச லுங்கி சேலை கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் தரமற்றதை கொள்முதல் செய்திருப்பதில் முறைகேடுகள் குறித்து சமூகநலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கூட்டுறவுத்துறை மூலமே இலவச திட்டங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி ஆம்ப+ர் சாலை சம்பா கோவில் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர கமிட்டி பொறுப்பு செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின் துறை முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். பிரதேச குழு உறுப்பினர் பிரபுராஜ், கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன், ரமே~;, ராமசாமி, சேகர், மணவாளன், சரவணன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
கரிக்கலாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கொம்ய+ன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ராமசாமி, பிரதேச குழு உறுப்பினர் மணிபாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கமிட்டி உறுப்பினர்கள் ஐயப்பன், நமச்சிவாயம் மற்றும் ரத்தினவேல், பத்மநாபன், சண்முகம், இன்னரசு, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருபுவனை கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்க சிபிஎம் கொம்ய+ன் செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் எல். கலிவரதன், பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன், கமிட்டி உறுப்பினர்கள் ஆவணியப்பன், ராமமூர்த்தி, பெரியசாமி, அன்புமணி, ஆனந்தன், வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு கொம்ய+ன் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் நிலவழகன், பிரதேசக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், கமிட்டி உறுப்பினர்கள் வடிவேல், கலியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
புதுச்சேரியின் நான்கு மையங்களில் இப்போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...
Sunday, November 28, 2010

வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாமல் காலனி மற்றும் ஊர் மக்கள்

0 comments

புதுச்சேரி நவ 26
புதுச்சேரி திருக்காஞசி கிராமத்தில் சுடுகாடு கேட்டு சவப்பாடை ஊர்வலம் தீண்டாமை ஓழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 1ல் நடைபெறுகிறது.
தீண்டாமை ஓழிப்பு முன்னணியின் புதுவை அமைப்பாளர் ஜி.ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு.
வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாமல் காலனி மற்றும் ஊர் மக்கள், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனபின்பும அவதியுறும் நிலை மாறவில்லை. சங்கராபரணி ஆற்றின் ஓரு கரையில் ஊர் குடியிருப்புகளும் அடுத்தகரையில் சுடுகாடும் இருந்தது. பல ஆண்டுகளாக மணல் கொள்ளைக்கூட்டம் சுரண்டிவிட்டதால் சுடுகாடு இருந்த இடம் நீர்ப்பிடிப்பு இடமாக மாறிவிட்டது. மேலும் ஆற்றின் குறுக்கே நீர்த்தடுப்பு அணை கட்டியுள்ளதால் வருடம் முழுவதும் ஆற்றின் நீர்ப்பிடிப்பு குறையாமல் உள்ளது. மழைக்காலம் வந்தால் வெள்ளம் கரைபுறண்டு ஓடும். இந்த நேரங்களில் இறந்தவர்களின் சடலங்களை டயர்(அ) வாழைமரத்தில் நீண்ட கயிற்றில் கட்டி, நீச்சல்தெரிந்த சிலர் மட்டும் இழுத்துச்சென்று அடக்கம் செய்கின்றனர். நலவசதிபடைதத சிலர் தங்கள் நிலத்தில் அடக்கம் செய்கின்றனர். வசதி படைத்ததவர்கள் நீர்படகுமூலம் கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர். இதனால் ஓட்டுமொத்த
ஊர்மக்கள் பாதிக்கப்பட்டாலும் மிகவும் வறிய நிலையில் உள்ள தலித்மற்றும பிற்படுத்தப்பட்டோர் கடுமையான துன்பத்தை அனுபவிக்கின்றனர். எனவே மக்கள் வாழும் பகுதியிலேயே சுடுகாடு ஏற்பாடு செய்துதரக்கோறுகின்றோம்.
மேலும் பொது மக்கள் கழிப்பிட வசதியின்றி க~;டப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகாலை விடிவதற்குள் (அ) மாலை இருட்டியபிறகுதான் காலைக்கடன்களைக் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதோடு அங்கு வசிக்கும் தலித் குடும்பங்களுக்கு குடிமனை கொடுக்கப்பட்டும் பட்டா கிடைக்கவில்லை. மேலும் தேவைக்கேற்ப புதிய குடிமனை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்து பேசியும் எந்தப்பயனும் இல்லை.
எனவே மேற்கண்ட கோரிக்கைகளை தீர்த்திடக் கோரி தீண்டாமை ஓழிப்பு முன்னணி சார்பாக சவப்பாடை ஊர்வலம் திருக்காஞ்சியில் துவங்கி வில்லியனுர் வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐp.லதா தலைமை ஏற்க உள்ளார். இவ்வாறு ராமசாமி கூறினார். முன்னணி நிர்வாகிகள் கலிவரதன், தலித்சுப்பையா, தவமனி, மணிபாலன், ஜானகி ஆகியோர் உடனிருந்தனர்.
Read more...
Saturday, November 27, 2010

இலவச வேட்டி சேலை திட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும்

0 comments


புதுச்சேரி நவ 23
இலவச வேட்டி சேலை திட்டத்தில் முறைகேடு செய்த புதுச்சேரி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ. பெருமாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும்; தாண்டவமாடுகிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் விதிமுறைகளை மீறி வருகிறது. இதனால் ஒரு திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை வேறொன்றுக்கு திருப்பி விடுவது பல்லாங்குழி ஆட்டம் போல் உள்ளது.
மாநில துணை நிலை ஆளநர் ஜூலை 29, 2010ல் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சமூக நலத்துறையில் திட்டமதிப்பீட்டுத் தொகைக்கு மேல் ரூ. 1.74 கோடி கூடுதலாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. நிதித்துறைக்கு தெரியாமல் 2009-2010 நிதியாண்டின் முடிவில் கடைசி தேதியில் பணம் பெறப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விதி மீறல்கள் என எச்சரித்துள்ளார்.
இலவச வேட்டி சேலைத்திட்டத்திற்கு தேவையான துணிகள் கூட்டுறவு நெசவாலை கழகங்களிடம் இருந்து கடந்த காலங்களில் பெறப்பட்டது. தற்போது சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து துணிகளை கொள்முதல் செய்வதை ரத்து செய்து வெளிச் சந்தையில் வாங்கிட முடிவெடுத்து, நடப்பு ஆண்டிற்கு ரூ. 3.50 லட்சம் குடும்பங்களுக்கும், மாற்றுத்; திறனாளிகளுக்கும் ரூ. 480 வீதம் இலவச வேட்டி சேலை வாங்க தீர்மானிக்கப்பட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 10 நிறுவனங்களிடம் இருந்து ஏல ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு இருந்தது. இதில் இரண்டு நிறுவனங்களுக்கு உரிய சீல் இடப்பட்ட ஏல அறிவிப்பு ஒப்பந்தங்கள் ஏற்கப்பட்டுள்ளது. மற்றநிறுவனங்களின் சீலிடப்பட்ட ஓப்பந்த அறிவிப்புகளை பிரித்துக் கூடபார்க்க வில்லை. தலைமைச் செயலாளருக்கு வந்தபுகாரின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரமற்ற துணி என கண்டறியப்பட்டுள்ளது.
அதேப் போல் இலவச சைக்கிள்திட்;டத்திற்க்கு தனியார் ஏஜன்சியிடம் கொள்முதல் செய்த சைக்கிளின் தரம் குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்படி இரண்டு திட்டங்களிலும் மிகப்பெறும் ஊழல் நடந்திருப்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சர் கந்தசாமி மற்றும அதிகாரிகள் ஆகியோர மீது துணை நிலைஆளுநர் சிபிஐ விசாராணைக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை அமல் படுத்துவதில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து நவம்பர் 29 துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பும் மற்றும் பாகூர்,மதகடிப்பட்டு, வில்லியனுர், காரைக்கால் ஆகிய மையங்களில் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு பெருமாள் கூறினார்.
Read more...
Monday, November 22, 2010

ரத்தக்களறிக்கு முடிவு கட்டுவோம் : புத்ததேவ் அறைகூவல்

1 comments

லங்கல்போடா (மே.வங்கம்), நவ.22-

மாவோயிஸ்ட்களின் துணையோடு மாநிலத்தின் பல பகுதிகளில் வெறியாட் டம் ஆடி வரும் திரிணா முல் காங்கிரசின் வன்முறை வெறிக்கும், ரத்தக்களறிக் கும் முடிவு கட்டுவோம் என்று மேற்கு வங்க முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யா அறை கூவல் விடுத்துள்ளார்.

வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள லங் கல்போடா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட் டார். இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் திரிணாமுல் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 160 பேர் கொலை செய்யப் பட்டுள்ளனர். இதில் திரி ணாமுல் மற்றும் மாவோ யிஸ்ட் அமைப்பு ஆகிய இரண்டும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன.

முதல்வர் புத்ததேவ் பேச் சின் பகுதிகள் வருமாறு :

வடக்கு 24 பர்கானாவில் சசன், ஹரோவா, ராஜர் ஹாட், மினாகா மற்றும் பங்கோர் ஆகிய இடங் களில் கடந்த சில மாதங் களாகவே வன்முறை சம்பவ ங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் திரிணாமுல் காங்கிர சார் மற்றும் மாவோயிஸ்ட் கள் இணைந்து செயல் படுகின்றனர். சசன் பகுதி யில் உள்ள குண்டர்களின் பட்டியலைத் தயார் செய்யு மாறு மாவட்ட ஆட்சி யருக்கு ஏற்கெனவே உத்தர விட்டுவிட்டேன். சட்ட விரோதமாக குவித்து வைக் கப்பட்டுள்ள அனைத்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள் ளோம்.

ராஜர்ஹாட் திட்டம் தேசத்திற்கே பெருமை சேர்க்கும் திட்டமாகும். மாநிலத்தின் அந்தஸ்தை உயர்த்தியதோடு, மாநிலம் குறித்த கருத்தோட்டத் தையும் மாற்றியுள்ளது. இந் தப்பகுதியில் பத்து லட்சம் பேர் குடியிருப்பார்கள். கணினி நிறுவனங்கள், கல்வி மையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என்று அனைத்து வகையான ஏற்பாடுகள் இருக்கும். பெரிய தொழில் மையமாக ராஜர்ஹாட் உருவாகும் என்று குறிப்பிட்டார்.

கிழக்கு மிட்னாப்பூர் மற்றும் தெற்கு 24 பர்கானா ஆகிய இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகளிலும் திரி ணாமுல் காங்கிரசார்தான் பொறுப்பில் இருக்கிறார் கள். இரண்டு பஞ்சாயத்து களிலும் ஊழல் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதற்கு எதிராக கட்சியின் ஊழியர் கள் மக்களைத்திரட்டி போராட முன்வர வேண் டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
Read more...
Friday, November 19, 2010

புதுச்சேரி மூர்த்திகுப்பம் கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பு

0 comments



புதுச்சேரி நவ 19
புதுச்சேரி மூர்த்திகுப்பம் கிராமத்தில் அமையவுள்ள மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மாரக்சிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர், அரசு சிறப்பு செயலாளர், மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சுற்று சூழல் துறையின் விஞ்ஞானி ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
புதுச்சேரி மாநிலம் மூர்த்திக்குப்பம் கடலோர கிராமத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க 2008 முதல் கட்டுமானப் பணிகள் நடந்துவருகிறது. மேற்படி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவது அரசும் - தனியாரும் சேர்ந்தா (அ) தனியார் நிறுவனமா என்பது தெரியவில்லை. தேங்காய்திட்டு கிராமத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைந்ததால் குருசுகுப்பம், சோலைநகர் உள்ளிட்ட பலப்பகுதிகளில் கடல் நீர்பிடிப்பு அதிகரிப்பும், தமிழகப்பகுதியான கோட்டகுப்பம், முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பும், குடியிருப்புகள் சேதமும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளை தடுத்திட தூண்டில் வளைவு வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். இதையொட்டி பாதிப்புகள் மூர்த்திக்குப்பம் மீன்பிடி துறை முகத்தால் ஏற்படுவதற்கு உள்ளது குறிததும், தேங்காய் திட்டு கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ள போது 15 கி.மீ இடைவெளியில் மற்றொறு துறைமுகம் தேவையா என்பது குறித்து தெளிவுபடுத்தாமல் - வெளிப்படைத் தன்மையில்லாமல் மீன் பிடித் துறைமுகப் பணியை துவக்குவது ஏற்புடையதல்ல. மக்கள் வாழ்வுரிமையை பலவந்தமாக பறிக்கும் அணுகுமுறையாகும்.
மூர்த்திக்குப்பம் மீன்பிடித் துறை முகத்தால் மீனவ மக்கள், விவசாய மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். நிலத்தடி நீர் மாசுபடும், சுற்றுச்சூழல் பெரும் சேதாரத்திற்கும் உள்ளாகம். மீன்பிடித் துறைமுகம் அமையப்போவதால் ஏற்படும் பயனை விடவும் பல மடங்கு ஈடுசெய்ய முடியாத நீடித்த – சரிசெய்ய இயலாத கடும் பாதிப்பு மக்களுக்கு ஏற்படும் என அறிவியல் அமைப்புகள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. இத்தகைய ஆபத்துகள் குறித்து மாநில அரசு உண்மைத் தன்மையை ஓளிவு மறைவு இல்லாமல் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
ஆகவே புதுச்சேரி அரசு மூர்த்திக்குப்பத்தில அமையப்போகும் மீன்பிடித் துறைமுகம் தொடர்பான தொழில் நுட்பசாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்திட வல்லுநர்கள் கொண்ட குழு அமைத்திட வேண்டும். அறிவியல் அமைப்புகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அளித்துள்ள புகார்கள் - பாதிப்புகள்குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிட உண்மை தன்மையை வெளியிடவும் வேண்டும். அதுவரையில் மீன்பிடித்துறைமுக கட்டுமானப் பணியை நிறுத்தி வைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கடசி வலியுறுத்துகிறது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்திடவும் மாநில அரசு முன்வரவேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
Read more...

உண்ணாவிரதப் போராட்டம்

0 comments

புதுச்சேரி நவ 18
திருபுவனை ~ரோன் சொல்யூ~ன்ஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ சார்பில் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
~ரோன் சொல்யூ~ன்ஸ் நிறுவனத்தில் சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்யப்பட்ட 15 தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலையளித்திட வேணடும். தொழிலாளர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். என்பன கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பொருமாள், சிஐடியூ நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன், சிவக்குமார், உடல் உழைப்போர் சங்க செயலர் ராமசாமி ஆகியயோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். பிரேம்குமார், தீர்த்தமலை, பன்னீர்செல்வம், வீரமணி, சசிக்குமார் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Read more...
Tuesday, November 16, 2010

மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானம் குறித்து பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை: தூத்துக்குடியில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

0 comments


தூத்துக்குடி, நவ. 16-

அதிமுக நிலை குறித்த மார்க் சிஸ்ட் கட்சியின் தீர்மானம் குறித்து கருத்துகூறும் தகுதி திமுகவுக்கு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செவ்வா யன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறிய தாவது:-

காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க தயார் என்று அதிமுக கூறியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

இந்தத்தீர்மானம் ஆறுதல் அளிப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இந் தத் தீர்மானத்தில் மத்திய -மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை கூற வேண்டிய கருத்தை கூற வேண்டிய நேரத் தில் எடுத்துரைக்க தயங்க மாட் டோம். அதே நேரத்தில் காங்கி ரசின் அனைத்து மக்கள் விரோ தக் கொள்கைகளையும் ஆதரிக் கும் திமுகவுக்கு இதுகுறித்து பேசும் உரிமை இல்லை.

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசில் அங் கம் வகிக்கும் திமுக, பெட் ரோல், டீசல் விலை உயர்வு, உர விலை உயர்வு, சிமிண்ட் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதியால் நூல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங் களுக்கு அனுமதி அளிக்கும் முயற்சி, அந்நிய பல்கலைக் கழகங்களை அனுமதிக்கும் முடிவு போன்ற அனைத்துக் கும் கண்மூடித்தனமாக ஆதரவு அளிக்கிறது. சில்லரை வர்த்தகத் தில் அந்நிய நிறுவனங்களை அனுமதித்தால் 8 கோடிப் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும். இத்தகைய கொள்கை களுக்கு கை தூக்கி ஆதரவு அளிக் கும் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர் மானம் குறித்து கருத்து கூறும் உரிமை இல்லை. காங்கிரஸ் தலைமையிலான அரசின் மக் கள் விரோத கொள்கைகளில் திமுகவின் நிலை என்ன என் பதை அவர்கள் முதலில் தெளிவு படுத்த வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக் கிய ஆ.ராசா சென்னையிலி ருந்து தில்லிக்கு புறப்படும் வரை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றார். ஆனால் தில்லிக்கு சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். வேறு வழியில்லை என்ற நிலை யில்தான் அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மத்திய புலனாய்வுத்துறையை கேள்வி கேட்கும் அதிகாரம் அந்தக்குழுவுக்கு கிடைக்கும். மேலும் தவறு எங்கு நடந்தது? யாருக்கு பலன் சென்றது என் பதையெல்லாம் வெளியில் கொண்டுவர முடியும்.

தமிழக மீனவர்களின் பிரச் சனைக்கு மத்திய-மாநில அரசு கள் தீர்வுகாண வேண்டும். இலங்கைக் கடற்படையின ரால் மீனவர்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடற்கரை மேலாண்மை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடற்கரை பகுதிகளை சுற்றுலாத்தலமாக் குவதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு ஏற்படுவதோடு மீன் இன வளர்ச்சியும் பாதிக்கும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் முயற்சியின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதி பர் ஒபாமா இந்தியா வந்தார். சில்லரை வர்த்தகம், உயர்கல்வி, நிதி, காப்பீடு போன்ற துறை களை அமெரிக்க நிறுவனங் களுக்கு திறந்துவிட வேண்டும் என்பதே அவரது வருகையின் நோக்கம் என்று அவர் குறிப் பிட்டார்.

தாமிரபரணியை பாதுகாப்போம்

தாமிரபரணி ஆறு குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தொடர்ந்து பயன்படவேண்டுமானால் இந்த ஆற்றில் 5 ஆண்டு காலம் மணல் அள்ளக்கூடாது என்று உயர்நீதிமன் றம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசு கறாராக செயல்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் படிப்படியாக தாமிரபரணி நீருக்கு பதிலாக கடல்நீரை சுத்திகரித்து தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்த முன்வரவேண்டும்.

வரும் டிசம்பர் 12ம் தேதி நதிநீர் பயன்பாடு, பாதுகாப்பு, சுற் றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் நிலைத்த தொழில் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறவுள்ளது. இதில் அறிவியல் அறிஞர் கள், தொழில் வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
Read more...

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடக் கோரி

0 comments

புதுச்சேரி நவ 16
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடக் கோரி, புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கட்டுமானப் பொருட்களை குறைந்த விலையில் கூட்டுறவுத் துறை மூலம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களை முறையாக வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு மாத பென்~ன் தொகையாக ரூபாய் 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு, தனியார் மூலமாக வரவேண்டிய செஸ் வரி வசூல் செய்து, வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது.
பழைய பேருந்து நிலையம் எதிரில் நடந்து ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ கட்டுமானப் தொழிலாளர் சங்க பிரதேச செயலாளர் கலியன் தலைமை தாங்கினார். சிபிம் பிரதேச செயலாளர் வி. பெருமாள், சிஐடியூ மாவட்ட தலைவர் ஜி. ராமசாமி, செயலாளர் கே. முருகன், நிர்வாகிகள் நிலவழகன், குணசேகரன், சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
கொட்டும் மழையில் நடந்த இப்போராட்டத்தில் திரளான கட்டிடத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
படம் குறிப்பு: புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. செவ்வாயன்று மறைமலை அடிகள் சாலையில் பழ வியபாரிகள் குடை பிடித்த வண்ணம் வியாபாரம் செய்கின்றனர்.
Read more...

சிபிஎம் அறிக்கை

0 comments

புதுச்சேரி நவ 12
புதுச்சேரி காங்கிர° ஆட்சியில் விளையாட்டுத்துறை புறக்கனிக்ப்பட்டு வருகிறது என்று மார்க்சி°ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிபிஎம் புதுச்சேர் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- புதுச்சேரி மாநிலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அனுமதியோடு 1994ல் ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி துவங்கப்பட்டது. கால்பந்து, ஹாக்கி, கைபந்து, தடகள விளையாட்டு, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் திறன் உள்ளவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் கடந்த 16 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி வருகிறது. புதுச்சேரியின் 4 பிராந்திய மாணவர்களும் தங்கி பயிற்ச்சி பெற்றுவரும் நிலையில் சுகாதாரமற்ற நிலையிலும் உப்பளம் விளையாட்டு மைதானம் உள்ளது. நாள் ஓன்றுக்கு ரூ.125விதம் உணவுக்காக அரசு ஓதுக்கிறது. ஆனால் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை அனைத்திலும் ஊழல் கேடுகளும் நீடித்து வருகிறது.
இதனால் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதுடன் இந்திய அளவில் புதுச்சேரி மாணவர்களின் விளையாட்டு திறன் குறைந்து வருகிறது.
99ஆம்ஆண்டு கல்வித்துறை +மூலம் காலப்பட்டில் 25 ஏக்கர் நிலம் ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளிக்கு கையக படுத்தப்பட்டது. மேலும் அணைத்து விளையாட்டு வசதிகள் உள்ளடக்யி மாதிரி வரைப்படமும் பொது பணித்துறையினால் வெளியிடப்பட்டது. ஆனால் நிதி ஓதுக்கியும் இது நாள் வரை விளையாட்டு மைதானம் அமைக்கப்படவில்லை மறுபுரம் ஏனாம் பகுதியில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு திட்ட ஓதுக்கீடு ரூ.7.5 கோடி இதற்கு சுமார் 22 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளிக்காக சுற்றுச்சுவர் கட்ட ஓதுக்கப்பட்ட ரூ 1 கோடியையும் ஏனாம் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஏனாம் பகுதியில் அமையஉள்ள விiயாட்டு அரங்கம் நீச்சல் குளம் ஆகியவை மார்க்சி°ட் கட்சி வரவேற்கிறது அதே நேரத்தில் நிலம் கையகப்டுத்தப்பட்டு 11 ஆண்டுகளாகியும் புதுச்சேரி காலப்பட்டில் அமைய உள்ள விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு நிதி ஓதுக்காதது விளையாடு வீரர்களை காங்கிர° அரசு வஞ்சித்து வருகிறது.
எனவே நான்கு பிராந்தியங்களிலும சம வளர்ச்சி ஏற்படுத்தபட வேணடும்.விளையாட்டு துறைக்கு ஓதுக்கப்பட்ட நிதி அந்த நிதியை செலவு செய்தது குறித்து மாநில துணை நிலைஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சி கேட்டுகொள்வதோடு. இதற்கு எதிராக மாணவர்கள் அணைத்து இளைஞர் அமைப்புகளும் ஓன்றுபட்டு போராட முன் வர வேண்டும். இவ்வாறு பெருமாள் கூறியுள்ளார்.
Read more...
Tuesday, November 9, 2010

ஐந்து இடதுசாரி கட்சிகளின் சார்பில புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி நவ 8
இந்திய ஆசிய விவகாரங்களில் அமெரிக்க தலையீட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஐந்து இடதுசாரி கட்சிகளின் சார்பில புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்திய தொழில்துறையை கபலிகரம் செய்;ய வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவை கண்டித்தும், போபால் வி~வாயு விபத்தின் குற்றவாளி ஆன்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்திய- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும். ஈராக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐம்பதாயிரம் படையினரையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும.; என்பன கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணை செயலாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நாரா கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட்(எம்.எல்) கட்சியின் மாநில பொதுசெயலாளர் சோ.பாலசுப்ரமணியன், பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் முத்து, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
இப்போராட்டத்தில் ஐந்து இடதுசாரிகட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com