Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, October 30, 2010

ஒபாமா வருகைக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு நவ.8 - நாடு தழுவிய எதிர்ப்பு நாள் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் அணிதிரள அழைப்பு

1 comments

இந்திய மக்களின் அனைத்து நலன்களையும் சீர்குலைக்கும் விதத்தில், தனது ராணுவ வளை யத்திற்குள் கொண்டுவர நிர்ப்பந்தங்களைச் செலுத் தும் அமெரிக்க அரசின் ஜனாதிபதி பாரக் ஒபாமா வின் வருகையை எதிர்த்து நாடு முழுவதும் அணி திர ளுமாறு இடதுசாரி கட்சி கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரி கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

அமெரிக்க நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா, இந் தியாவிற்கு வருகிறார். முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அதி பர் என்ற முறையிலும், நவீன பிற்போக்கு புஷ் ஆட்சி அகற்றப்பட்ட சூழ்நிலையி லும், ஆக்கபூர்வமான மாற் றங்கள் ஏற்படும் என்று எதிர் பார்ப்புகள் நிலவின. ஆனால் அது நடக்கவில்லை.

அவரது வருகையின் போது 2010 நவம்பர் 8 அன்று நாடு தழுவிய அள வில் எதிர்ப்புநாள் கடைப் பிடிக்க இடதுசாரிக் கட்சி கள் தீர்மானித்திருக்கின்றன. அமெரிக்கா, உலகளாவிய மேலாதிக்க வல்லமையை நிறுவுவதின் ஒரு பகுதியாக, நாடுகளின் உயர் தன்னா ளுமை மற்றும் பல்வேறு நாட்டு மக்களின் நலன்கள் பாதிக்கக்கூடிய வகையில் கொள்கைகளைப் பின் பற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை,இந்தியாவுடன் ராணு வத்தந்திரக் கூட்டணி வைத் திருக்கிறோம் என்ற பெய ரில் மக்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கை களை இந்தியா கடைப் பிடித்திட வேண்டும் என்று அரக்கத்தனமான முறையில் நிர்ப்பந்தித்துக் கொண்டி ருக்கிறது.

உலக அளவிலும், இந் தியாவிற்கு எதிராகவும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் செயல்கள் குறித்து, இந்திய ஆட்சியாளர்கள் கொண்டிருக்கும் கருத்துக் களுக்கு முரணாக, இடது சாரிக் கட்சிகள் நாட்டு மக் களில் பெரும்பான்மையோ ரின் கருத்துக்களை முன் வைத்திட விரும்புகிறோம்.

நவம்பர் 8 அன்று நடை பெறும் எதிர்ப்பு நாளன்று, இடதுசாரிக் கட்சிகள் கீழ்க் கண்ட பிரச்சனைகளைப் பிரதானமாக முன்வைக்கின் றன:

1. போபால் நச்சுவாயு விபத்தில் பலியானவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் உரிய இழப்பீட்டை அளித்திட வும், தொழிற்சாலை வளா கத்தைச் சுத்தப்படுத்தித்தர வும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அமெரிக்கா, விசாரணையை எதிர்கொள் வதற்காக வாரன் ஆண்டர் சனை அனுப்பி வைத்திட வேண்டும்.

2. இந்தியாவின் அயல் துறைக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்க மூலத னம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளைய டிப்பதற்காக வேளாண்மை, சில்லரை வர்த்தகம், கல்வி மற்றும் இதர சேவைகளைத் திறந்துவிட நிர்ப்பந்தம் அளிப் பதை நிறுத்த வேண்டும்.

3. இந்தியாவை, அமெ ரிக்காவின் ராணுவப் பங்கா ளியாக மாற்ற வகை செய் யும் இந்திய - அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். அமெ ரிக்க அணு உலை விநியோ கஸ்தர்கள் மீதான பொறுப் புக்களைக் கைவிட வேண் டும் என்று இந்தியாவை நிர்ப்பந்திப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

4. இராக்கில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மீத முள்ள 50 ஆயிரம் படை யினரையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஆப்கானிஸ்தானத்தில் ஒரு சுயேச்சையான மற்றும் நடுநிலை அரசு அமையக் கூடிய விதத்தில் அரசியல் தீர்வு காண வேண்டும். அமெரிக்க - நேட்டோ படையினரை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

5. கியூபா மீதான பொரு ளாதாரத் தடையை நீக்க வேண்டும். பாலஸ்தீனம் மற் றும் அரபு நிலப்பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஆக்கிர மிப்புகளை விட்டு வெளியே றும் வரை இஸ்ரேலுக்கு அளித்திடும் அனைத்து உத விகளையும் நிறுத்தவேண்டும்.

நவம்பர் 8 அன்று மேற் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும், ஆர்ப்பாட்டங்கள் - பேரணி கள் நடத்திடுமாறு அனைத் துக் கிளைகளையும் இடது சாரிக் கட்சிகள் அறைகூவி அழைக்கின்றன. (ந.நி.)
Read more...
Saturday, October 23, 2010

திமுக அரசின் அடக்குமுறை தர்பாருக்கு கண்டனம் தமிழகம் முழுவதும் தொழிலாளர் தர்ணா

0 comments

தொழிலாளர்களின் உரிமைகளுக் காக போராடும் சிஐடியு தலைவர் களை கைவிலங்கிட்டு கைது செய்து சிறையில் அடைப்பதும், பொய் வழக்கு புனைவதுமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல் படும் தமிழக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித் தும், தொழிற்சங்க தலைவர்களை விடு தலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அக்டோபர் 23 சனிக் கிழமை பெருந்திரள் தர்ணா போராட் டம் நடைபெற்றன.

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அழைப்பை ஏற்று நடை பெற்ற இந்த மாபெரும் போராட்டத் தில் மாநிலம் முழுவதும் பல்லாயிரக் கணக்கானோர் ஆவேசத்துடன் பங் கேற்று முழக்கமிட்டனர்.

திருப்பெரும்புதூரில் உள்ள பாக்ஸ் கான் ஆலையில் நியாயமான கோரிக் கைகளுக்காக போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்ட தமிழக அரசு, போராட்டத்திற்கு தலைமை யேற்று வழிகாட்டிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் மற்றும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து சிறையிலடைத்தது.

சிறையிலிருந்து ஜாமீனில் விடு தலையான மறுநிமிடமே, அ.சவுந்தர ராசன், இ.முத்துக்குமார் மற்றும் 10 தொழிலாளர்கள் உட்பட 12 பேர் மீது மேலும் பொய்வழக்கு புனைந்து மீண் டும் சிறையில்தள்ளியது தமிழக அரசு. அதுமட்டுமின்றி, தொழிலாளர்களின் தலைவர்களான இவர்களை கை விலங்கு பூட்டி, உச்சநீதிமன்ற வழிகாட் டுதல்களை மீறி அப்பட்டமான மனித உரிமை மீறலை அரங்கேற்றியது.

தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறை அடக்குமுறையை ஏவி யுள்ள தமிழக அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்து மாநிலம் முழுவதும் சனிக்கிழமை மாபெரும் பெருந்திரள் தர்ணா நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன இயக்கத்திற்கு சிஐடியு மாவட்டத்தலை வர் ஏ.வாசுதேவன் தலைமையேற்றார். மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தர ராசன், மாநிலச் செயலாளர் க.திருச் செல்வன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், வாலிபர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.கண் ணன், மாநிலச் செயலாளர் ஆர்.வேல் முருகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சிஐடியு மாநிலச்செயலா ளர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்றி னார். எஸ்.வாசுதேவன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரையில் நடைபெற்ற கண்டன இயக்கத்தில் மதுரை கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் என்.நன்மாறன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் பா.விக்ர மன், ஏஐடியுசி சார்பில் தினகரமோ கன், எம்எல்எப் சார்பில் மகபூப்ஜான் உள்ளிட்டோர் பேசினர். ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் ஆவேச முழக்க மிட்டனர்.

சென்னையில் நடைபெற்ற பெரும் இயக்கத்தில் சிஐடியு தலைவர்கள் மாலதி சிட்டிபாபு, ஏ.பி.அன்பழகன், வி.குமார், எம்.சந்திரன், எல்.சுந்தரரா ஜன், அப்புனு உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

நாகர்கோவிலில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம் மது, சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஜாண் ஜோசப், சிஐடியு தலைவர்கள் கே.செல் லப்பன், பி.இந்திரா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர். நாகப்பட்டினத்தில் சட்டமன்ற உறுப் பினர் வி.மாரிமுத்து, சிஐடியு நிர்வாகி கள் நாகை மாலி, ஆர்.ராமானுஜம், புவ னேஸ்வரி, சிவக்குமார், வெற்றி வேல் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.

கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருப்பூர் உட்பட தமி ழகத்தின் அனைத்து மாவட்டங்களி லும் எழுச்சியுடன் நடைபெற்ற இவ் வியக்கத்தில் ஏராளமான பெண்கள் செங்கொடி ஏந்தி பங்கேற்றனர் என் பது குறிப்பிடத்தக்கது. சிஐடியு மாநில பொருளாளர் பி.எம்.குமார் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் இவ் வியக்கத்தில் பங்கேற் றனர்.
Read more...
Thursday, October 14, 2010

Land Protection Struggle @ Boomaiyarpalayam

0 comments





Read more...

பேரணி ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி அக் 12
உடல் உழைப்போர், கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட முறைச்சார தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்க தொகை ருபாய் 2000 வழங்க கோரி சிஐடியூசார்பில் தலைமை தபால் நிலையம் எதிரில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வு ஏற்ப முறைச்சாராதொழிலாளர்களுக்கு ரூ.500ல் இருந்து ரூ.2000 மாக உயர்த்தி வழங்க வேண்டும். விட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினரகளாக சேர்க்க வேண்டும். நலச்சங்கத்திற்கு ரூ.10 கோடி ஓதுக்க வேண்டும். நலவாரிகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி =இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமைதாங்கினார், முறைச்சார தொழிலாளர்கள் ஊர்வலத்தை சிஐடியூ ஆட்டோ சங்க கவுரவ தலைவர் தா.முருகன் துவக்கிவைத்து பேசினார். சிஐடியூ மாவட்டசெயலாளர் கே.முருகன், நிர்வாகிகள் ராஜாங்கம் ,நிலவழகன், , குணசேகரன்,சிவக்குமார், கலியன், மதி, ராமசாமி, குப்புசாமி, சேகர், மது, காந்தி உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில்லிருந்து துவங்கிய ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி யை கடந்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read more...

தலைவர்கள் மீது பொய் வழக்கு

0 comments

புதுச்சேரி அக் 11
புதுச்சேரி காங்கிர° அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் போராட கூடிய ஜனநாயக இயக்க தலைவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வதை கண்டித்தும் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வை கட்டுபடுத்தி நியாயவிலைகடைகளில் மாண்ய விலையில் அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். இரவு நேர டிபன் கடைகளை இரவு 2 மணி வரை நடத்தி கொள்ள அனுமதி வழங்கவேண்டும். என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.
காந்தி வீதியில் துவங்கிய பிரச்சார நடைபயணத்திற்கு சிபிஎம் நகரகமிட்டி பொறுப்பு செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், முருகன், பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ், நகரகமிட்டி, கிளை செயலாளர்கள் மது, ரமேஷ், கலியமூர்த்தி, சரவணன், சிவசோலை, ராமலிங்கம், மணவாளன், உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக அண்ணாசாலை, நேரு வீதி, முத்தியாள்பேட்டை அகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.
படம் உள்ளது
Read more...
Monday, October 11, 2010

உலக வெப்பமயமாதல் புதுவையில் விழிப்புணர்வு பேரணி

0 comments


புதுச்சேரி, அக். 10 -

புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் புதுச்சேரி அறிவி யல் இயக்கம் சார்பில் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி முல்லை நகரில் துவங்கிய பேரணிக்கு அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராஜன் தலைமை தாங்கினார். அறி வியல் இயக்க பொதுச்செய லாளர் சேகர் முன்னிலை வகித்தார். புதுச்சேரி நகர மன்ற உறுப்பினர் சக்திவேல் மரக்கன்றுகளை நட்டார். சம்மேளன கவுரவத் தலை வர் பாலமோகனன் சைக் கிள் பேரணியை துவக்கி வைத்தார். சம்மேளன பொதுச் செயலாளர் புகழேந்தி, மற்றும் சம்மேளன நிர்வாகி கள் கீதா, இளங்கோ, கிரிஸ் டோபர், கலைச்செல்வன், பாலு, நமச்சிவாயம், அறிவி யல் இயக்க நிர்வாகிகள் ரகுநாத், பரசுராமன், சுதர் சனன், விஜயமுர்த்தி, முஎகச மாநில துணைபொதுச் செயலாளர் ராமச்சந்திரன் எல்ஐசி ஊழியர் சங்க புதுவை தலைவர் ராம்ஜி உள்ளிட்ட திரளான அரசு ஊழியர்கள் மற்றும் மாண வர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.

முன்னதாக உருளையன் பேட்டையில் துவங்கிய சைக்கிள் பேரணி, மறை மலைஅடிகள் சாலை, அண்ணாசாலை, பட்டேல் சாலை வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை எதிரே விழிப்புணர்வு பேரணி முடிவடைந்தது
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com