Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, October 14, 2010

பேரணி ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி அக் 12
உடல் உழைப்போர், கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட முறைச்சார தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்க தொகை ருபாய் 2000 வழங்க கோரி சிஐடியூசார்பில் தலைமை தபால் நிலையம் எதிரில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வு ஏற்ப முறைச்சாராதொழிலாளர்களுக்கு ரூ.500ல் இருந்து ரூ.2000 மாக உயர்த்தி வழங்க வேண்டும். விட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினரகளாக சேர்க்க வேண்டும். நலச்சங்கத்திற்கு ரூ.10 கோடி ஓதுக்க வேண்டும். நலவாரிகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி =இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமைதாங்கினார், முறைச்சார தொழிலாளர்கள் ஊர்வலத்தை சிஐடியூ ஆட்டோ சங்க கவுரவ தலைவர் தா.முருகன் துவக்கிவைத்து பேசினார். சிஐடியூ மாவட்டசெயலாளர் கே.முருகன், நிர்வாகிகள் ராஜாங்கம் ,நிலவழகன், , குணசேகரன்,சிவக்குமார், கலியன், மதி, ராமசாமி, குப்புசாமி, சேகர், மது, காந்தி உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில்லிருந்து துவங்கிய ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி யை கடந்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com