
தொழிலாளர்களின் உரிமைகளுக் காக போராடும் சிஐடியு தலைவர் களை கைவிலங்கிட்டு கைது செய்து சிறையில் அடைப்பதும், பொய் வழக்கு புனைவதுமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல் படும் தமிழக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித் தும், தொழிற்சங்க தலைவர்களை விடு தலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அக்டோபர் 23 சனிக் கிழமை பெருந்திரள் தர்ணா போராட் டம் நடைபெற்றன.
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அழைப்பை ஏற்று நடை பெற்ற இந்த மாபெரும் போராட்டத் தில் மாநிலம் முழுவதும் பல்லாயிரக் கணக்கானோர் ஆவேசத்துடன் பங் கேற்று முழக்கமிட்டனர்.
திருப்பெரும்புதூரில் உள்ள பாக்ஸ் கான் ஆலையில் நியாயமான கோரிக் கைகளுக்காக போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்ட தமிழக அரசு, போராட்டத்திற்கு தலைமை யேற்று வழிகாட்டிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் மற்றும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்து சிறையிலடைத்தது.
சிறையிலிருந்து ஜாமீனில் விடு தலையான மறுநிமிடமே, அ.சவுந்தர ராசன், இ.முத்துக்குமார் மற்றும் 10 தொழிலாளர்கள் உட்பட 12 பேர் மீது மேலும் பொய்வழக்கு புனைந்து மீண் டும் சிறையில்தள்ளியது தமிழக அரசு. அதுமட்டுமின்றி, தொழிலாளர்களின் தலைவர்களான இவர்களை கை விலங்கு பூட்டி, உச்சநீதிமன்ற வழிகாட் டுதல்களை மீறி அப்பட்டமான மனித உரிமை மீறலை அரங்கேற்றியது.
தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறை அடக்குமுறையை ஏவி யுள்ள தமிழக அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்து மாநிலம் முழுவதும் சனிக்கிழமை மாபெரும் பெருந்திரள் தர்ணா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன இயக்கத்திற்கு சிஐடியு மாவட்டத்தலை வர் ஏ.வாசுதேவன் தலைமையேற்றார். மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தர ராசன், மாநிலச் செயலாளர் க.திருச் செல்வன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், வாலிபர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.கண் ணன், மாநிலச் செயலாளர் ஆர்.வேல் முருகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சிஐடியு மாநிலச்செயலா ளர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்றி னார். எஸ்.வாசுதேவன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரையில் நடைபெற்ற கண்டன இயக்கத்தில் மதுரை கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் என்.நன்மாறன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் பா.விக்ர மன், ஏஐடியுசி சார்பில் தினகரமோ கன், எம்எல்எப் சார்பில் மகபூப்ஜான் உள்ளிட்டோர் பேசினர். ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் ஆவேச முழக்க மிட்டனர்.
சென்னையில் நடைபெற்ற பெரும் இயக்கத்தில் சிஐடியு தலைவர்கள் மாலதி சிட்டிபாபு, ஏ.பி.அன்பழகன், வி.குமார், எம்.சந்திரன், எல்.சுந்தரரா ஜன், அப்புனு உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
நாகர்கோவிலில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம் மது, சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஜாண் ஜோசப், சிஐடியு தலைவர்கள் கே.செல் லப்பன், பி.இந்திரா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர். நாகப்பட்டினத்தில் சட்டமன்ற உறுப் பினர் வி.மாரிமுத்து, சிஐடியு நிர்வாகி கள் நாகை மாலி, ஆர்.ராமானுஜம், புவ னேஸ்வரி, சிவக்குமார், வெற்றி வேல் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.
கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருப்பூர் உட்பட தமி ழகத்தின் அனைத்து மாவட்டங்களி லும் எழுச்சியுடன் நடைபெற்ற இவ் வியக்கத்தில் ஏராளமான பெண்கள் செங்கொடி ஏந்தி பங்கேற்றனர் என் பது குறிப்பிடத்தக்கது. சிஐடியு மாநில பொருளாளர் பி.எம்.குமார் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் இவ் வியக்கத்தில் பங்கேற் றனர்.