Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, October 14, 2010

தலைவர்கள் மீது பொய் வழக்கு

0 comments

புதுச்சேரி அக் 11
புதுச்சேரி காங்கிர° அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் போராட கூடிய ஜனநாயக இயக்க தலைவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வதை கண்டித்தும் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வை கட்டுபடுத்தி நியாயவிலைகடைகளில் மாண்ய விலையில் அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். இரவு நேர டிபன் கடைகளை இரவு 2 மணி வரை நடத்தி கொள்ள அனுமதி வழங்கவேண்டும். என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.
காந்தி வீதியில் துவங்கிய பிரச்சார நடைபயணத்திற்கு சிபிஎம் நகரகமிட்டி பொறுப்பு செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், முருகன், பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ், நகரகமிட்டி, கிளை செயலாளர்கள் மது, ரமேஷ், கலியமூர்த்தி, சரவணன், சிவசோலை, ராமலிங்கம், மணவாளன், உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக அண்ணாசாலை, நேரு வீதி, முத்தியாள்பேட்டை அகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.
படம் உள்ளது

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com