Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, May 24, 2013

மத்திய மாநில அரசின் மக்கள் விரோதகொள்கைகளை கண்டித்து சிபிஎம் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 460 பேர் கைது.

0 comments

புதுச்சேரி,மே-24
மத்திய மாநில அரசின் மக்கள் விரோதகொள்கைகளை கண்டித்து சிபிஎம் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 460 பேர் கைது.

உங்கள் பணம் உங்கள் கைகளில் என்ற மோசடி திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.மாதம் ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 35கிலோ அரிசி கிலோ ரூ.2க்கு வழங்க வேண்டும்.பிரதமரையும் உட்படுத்தும் வகையில் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.ஆன்லையன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் 6மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


இலாஸ்பேட்டை
இலாஸ்பேட்டை தபால்நிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,உழவர்கரைநகர கமிட்டி செயலாளர் லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட 4பெண்கள் உட்பட 60பேர் கைதானார்கள்.


புதுச்சேரி நகரம்
புதுச்சேரி காமராஐர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிங்காரவேலு,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சுமதி,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர் மதிவானன் உட்பட 90பேர் கைதானார்கள்.முன்னதாக அண்ணாசிலை எதிரில் இருந்து ஊர்வலமாக வந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மதகடிப்பட்டு
மதகடிப்பட்டு கடைதெருவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,மண்ணாடிப்பட்டு கமிட்டி செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,அன்புமணி,சங்கர் உட்பட 85பேர் கைது செய்யப்பட்டனர்.


பாகூர்
பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உட்பட 30பெண்கள் உள்ளிட்ட 75பேர் கைதானர்கள்.


வில்லியனூர்
வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ராமசாமி,கே.முருகன்,கமிட்டி செயலாளர் முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை உள்ளிட்ட40பேர் கைது செய்யப்பட்டனர்.இதேப்போல் காரைக்கால்


காரைக்கால்
காரைக்கால் புதுபஸ்நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கமிட்டி செயலாளர் வின்சென்ட் பிரதேசக்குழு உறுப்பினர் கலியபெருமாள் உள்ளிட்ட 54பெண்கள் உட்பட 110பேர் கைது செய்யப்பட்டனர்.
Read more...
Friday, May 17, 2013

மே 24 மறியல் போராட்டம்

0 comments


                                                                                  16.05.2013
பத்திரிக்கை குறிப்பு
            மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் கடும்வாழ்க்கை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, வறுமை, வேலையின்மை அதிகரித்து வருகிறது.
வசதிபடைத்தவர்கள் மட்டுமே கல்வியும், தரமான மருத்துவமும் பெறமுடியும் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது.

            நாடும், மக்களும் சந்திக்கிற மந்தமான வளர்ச்சி, வறுமை, வேலையின்மைக்கு தீர்வு காணும் வகையில் நடப்பு மத்திய பட்ஜெட் ( 2013 - 2014 ) இல்லை. மாறாக மக்களுக்கு சிலத்துறைகள் மூலம் வழங்கி வந்த மானியத்தில்
26,571 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் இந்திய பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சத்து 73 கோடி ரூபாய் வரிச்சலுகை வழங்கபட்டுள்ளது. இதனால் அரசுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்தியஅரசுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.ஆனால் பொது விநியோகத்திட்டம், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பலத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. கிராமப்புற வேலைத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய 33,000 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகமிகக் குறைவானதாகும்.

            மத்திய காங்கிரஸ் ஆட்சியில் எப்போதுமில்லாத பலலட்சம் கோடி ரூபாய் அளவில் புதிய ஊழல்கள் நடந்தவண்ணம் உள்ளன.
மக்களின் நலனுக்கு எதிரான தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நாடு தழுவிய அளவில்மறியல்  போராட்டம் நடத்திட மார்சிஸ்ட் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.கீழ்கண்ட கோரிக்கைகள் மீது புதுச்சேரியில் மே 18 - 22 தேதிகளில் மக்கள் சந்திப்பு தெருமுனை கூட்டங்களும், மே 24ல்  புதுச்சேரி நகரம் - இலாசுபேட்டை - வில்லியனூர் - மதகடிப்பட்டு - பாகூர் - காரைக்கால்ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

கோரிக்கைகள்:
  • சொந்த வீடில்லாத மக்களுக்கு குடிமனைப்பட்டா மற்றும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கு.
  • விலைவாசி உயர்வை கட்டுபடுத்து. பொது விநியோகத்தின் கீழ் குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ தானியம் 32 விலையில் வழங்கு.
  • உங்கள் பணம் உங்கள் கையில் என்ற மோசடித்தனத்தை கைவிடு
  • முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்ட சமூக நலத்திட்டத்தை வங்கி மூலம் கணக்குடன் கூடிய ஆதார் அட்டை மூலம் செயல்படுத்தும் திட்டத்தை கைவிடு
  • கல்வி நிறுவனங்களையும், பொது சுகாதார சேவைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்து. கல்விக்கும், பொதுசுகாதாரத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து
  • வேலை உரிமையை  அடிப்படை உரிமையாக்கு. சமூக நீதி வழங்கிடு, கிராமப்புற வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்து.
  • பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடிவாளமிடு. சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்.
  • ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு. பிரதமரையும் உள்ளடக்கிய வலுவான லோக்பால் சட்டத்தை இயற்றிடு.  
இங்ஙனம்,

வெ.பெருமாள்,
( செயலாளர் )


Read more...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உரிமையை பெறுவதற்கு அரசு சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்திடவும், கட்சிகள் சார்பில் மக்கள் இயக்கத்தை உருவாக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்.

0 comments

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உரிமையை பெறுவதற்கு அரசு சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்திடவும், கட்சிகள் சார்பில் மக்கள் இயக்கத்தை உருவாக்கவும்
மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்.

                புதுச்சேரி மாநிலம் அதிகாரமற்ற அரசாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ரிமோட் கண்டரோலில் செயல்படும் பொம்மை அரசாக இருக்கிறது. இந்தியாவில் 11 மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பிரெஞ்சு இந்திய விடுதலைப் பிரதேசமான புதுச்சேரி இந்திய ஒன்றியத்தோடு இணைந்து 59 ஆண்டுகளாகியும், சட்டப்பேரவைத் துவங்கி 50ஆண்டுகளாகியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இது மாநில சுயாட்சிக்குஎதிரானது மட்டுமல்ல மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதும், மக்களை வஞ்சிப்பதுமாகும்.    

            புதுச்சேரி சட்டப்பேரவைகளில் 8.5.1987 முதல் 31.07.2012 வரையிலான காலகட்டத்தில் 11 முறைமாநில அந்தஸ்து கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2006 ஆகஸ்ட் 2 ல் மாநிலங்களவை மற்றும் மக்களவைகளில் தாக்கல் செய்த அறிக்கையில்புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளை, மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.  நாட்டில் பல சட்டங்கள் , திட்டங்கள் நிர்வாக நடைமுறைகள், அதிகார பகிர்வு..... உள்ளிட்டபலவற்றில் வரையறைகள் , தேவையையயாட்டி  மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன . ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னாள் மத்திய திட்டக்குழுவால் உருவாக்கப்பட்ட மாநில அந்தஸ்து தொடர்பான வரையறையை மறு மதிப்பீடு செய்ய மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை.
               
                1991 முதல் மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் துவக்கிவைக்கப்பட்ட நவீன தாராளமயக்
கொள்கை கடந்த 22 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையை தலைகீழாகபுரட்டிப் போட்டுள்ளன. ஏழைகள்,பணக்காரர்களுக்கான இடைவெளி மேலும் மேலும் அதிகரித்துள்ளது.  கல்வி, சுகாதாரம், பொது வினியோகத்திட்டம், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறுத் துறைகளில் மானியத்தை குறைத்து வருகிறது. மக்களுக்கான சமூகப்பாதுகாப்பு, அளிக்க வேண்டிய மத்திய அரசு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விலக்கிக்கொண்டுவருகிறது. மறுபுறத்தில் அந்நிய, இந்தியப் பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை மானியம் மற்றும் சலுகைகளாக வாரி வழங்கி வருகிறது.கடந்த (2012-2013) ஆண்டில் மட்டும் 11 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் இருந்தால்
பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை போட்டு மக்களின் சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருக்க முடியும். புதுச்சேரி மாநில அரசின் கடனையும் ரத்து செய்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உதவியிருக்க முடியும்.  நிதி ஆதாரங்களையும், அதிகாரங்களையும் மத்தியில் குவித்து வைத்துக்கொண்டு மாநிலத்தின் சுயாட்சிக்கு எதிராக மத்திய அரச செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதி உதவி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. மாற்றுக்கட்சி ஆட்சி என்பதால் நிதி பகிர்மானத்தில் புதுச்சேரி மாநிலம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத்தரமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலைக்கு முழு முதற்காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கையாகும்.
               
புதுச்சேரி மாநில அரசு மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றி பால்விலை உயர்வு,பஸ்கட்டண உயர்வு, மதிப்பு கூட்டிய வரிஉயர்வு என மக்கள் மீது விலைவாசி மற்றும் வரிச்சுமையை ஏற்றிவருகிறது. மறுபுறத்தில் வேலைத்திணிப்புகள், கூடுதல் வாரியத்தலைவர் நியமனங்களும் ஏற்புடையதல்ல. இவைகள் கட்டுப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட்  கட்சி வலியுறுத்துகிறது.              
                தற்போதுள்ள நிதி நெருக்கடியின் கொடூர விளைவுகளில் இருந்து மாநில மக்களைப் பாதுகாக்கவேண்டியது அவசர அவசியக் கடமையாகும். புதுச்சேரி மாநிலத்தின் முழுக்கடனையும் ரத்து செய்து, மாநில அந்தஸ்து உரிமையைப் பெறுவதாகும். இந்த நோக்கத்திற்காக அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டியுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆட்சியும், கட்சியும் ஒன்றல்ல. இரண்டிற்கும் அதிகார எல்லையும், செயல் தளமும் , தன்மையும் மாறுபட்டதாகும். ஆகவே, மாநில அரசு அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை உடனடியாக நடத்திட முன்வரவேண்டும்.   மறுபுறத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களைஒன்றிணைத்து மாநில சுயாட்சி உரிமையை பெறுவதற்கு மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். 

அரசு சார்பில் நிர்வாக ரீதியான நடவடிக்கைளும் கட்சிகள் சார்பில் ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் புதுச்சேரிக்கு உள்ள கடன்களை ரத்து செய்து மாநில அந்தஸ்து பெற முடியும் என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது. புதுச்சேரியின் வளர்ச்சி மாநில மக்களின் நலன் என்ற பொதுத் தன்மையில் மாநில அந்தஸ்துக்காக மார்க்சிஸ்ட் கட்சி அரசுடனும், மக்கள் இயக்கத்துடன் உறுதியாக இணைந்து போராடும் என மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                                                                                                                                                     

இவண்                                                                                                                                                                     (வெ.பெருமாள்)                                                                                                                                                                         செயலாளர்  



Read more...
Friday, May 3, 2013

தலித்மக்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து இடதுசாரிகட்சிகள் ஆர்ப்பாட்டம்

0 comments
புதுச்சேரி,மே-3
பாட்டாளி மக்கள் கட்சியை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரிகட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாரக்காணம் கட்டையன் காலணியில் புகுந்து தலித்மக்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும்,தலித் மக்களுக்கு எதிராக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அனைத்து சாதியினரையும் அணி சேர்ப்பதை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுப்பையா சிலை எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் முன்னிலை வகித்தார்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,அகில இந்திய பார்வர்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்து,புரட்சிகர சோஸலிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் இடதுசாரிகட்சிகளின் தலைவர்கள்,நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.முன்னதாக பாமக வை கண்டித்து முழக்கமிட்டனர்.
Read more...

சமையல் எரிவாயுவுக்கு மாண்யம் என்பது கன்துடைப்புகான நாடகம் என்று எஸ்.கண்ணன் குற்றச்சாட்டு.

0 comments
புதுச்சேரி,மே-2


இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு வும் ஏஐடியூசியும் இணைந்து 127வது மே தின பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் நடைபெற்ற இப்போதுக்கூட்டத்திற்கு ஏஐடியூசி மாநில தலைவர் நாரா.கலைநாதன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக சிஐடியு வின் தமிழ்மாநில செயலாளர் எஸ்.கண்ணன் பங்கேற்று பேசுகையில்,

மத்திய அரசின் நாசகர பொருளாளதாரகொள்கையை கண்டித்து பிப்ரவரி 20ல் நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றது.15வது முறையாக நடைபெற்ற இவ்வேலைநிறுத்தத்தில் 12கோடி மக்கள் பங்கேற்றனர்.பிரதமர் மன்மோகன்சிங் கேட்டு கொண்ட பிறகும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.வங்குதுறையே முற்றிலும் முடங்கியது.எதற்காக இந்த வேலை நிறுத்தம் நாட்டின் அனைத்து சொத்துகளையும் தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும்,5லட்சம் பென்ஷன் தொகையை பங்குசந்தையில் பொடுவதை எதிர்த்தும்,இன்சூரன்°துறையில் அன்னியரை அனுமதிக்கும் வேலையை எதிர்த்தும் இவ்வேலை நிறுத்தம் என்பது நடைபெற்றது.ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்த்து எப்படி வலுவான இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளதோ அதேப்போல் இந்தியாவிலும் அத்தகைய இயக்கம் வலுவாக வளர்ந்து வருகிறது என்றார்.

இன்றைய மன்மோகன்சிங் அரசு கடைபிடிக்கும் கொள்கையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.இதனால் வீட்டில் 4பேரும் வேலை செய்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் தினம் தினம் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.சராசரி ஒரு மாதத்திற்கு மின்hரக்கட்டணமும்,தொலைப்பேசி கட்டணமும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.எனவேதான் வரும் தேர்தலை கருத்தில் கொண்டு எரிவாயு சிலின்டருக்கான மாண்யம் அளிப்போம் என்ற அறிவிப்பை செய்துள்ளனர்.
8மணி நேர வேலையை 6மணிநேர வேலையாக குறைக்க வேண்டும் என்ற உழைப்பு சுரண்டலை எதிர்த்து போராடுகின்ற வேலையில் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.இந்த மே தினத்தில் வரும் தேர்தலில் நம்மை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு சரியான பாடத்தை நாம் புகட்ட வேண்டும் என்றார்.

சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,சிபிஐ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,சிஐடியு மாவட்ட செயலாளர் நிலவழகன்,ஏஐடியூசி மாநில பொதுச்செலாளர் அபிஷேகம் உள்ளிட்ட சிஐடியு,ஏஐடியூசியை சேர்ந்த தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.இப்பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து துவங்கிய  மே தின பேரணியில் திரளாக தொழிலாளர்கள் பங்கேற்றனர். 
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com