16.05.2013
பத்திரிக்கை குறிப்பு
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் கடும்வாழ்க்கை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, வறுமை, வேலையின்மை அதிகரித்து வருகிறது.
வசதிபடைத்தவர்கள் மட்டுமே கல்வியும், தரமான மருத்துவமும் பெறமுடியும் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது.
நாடும், மக்களும் சந்திக்கிற மந்தமான வளர்ச்சி, வறுமை, வேலையின்மைக்கு தீர்வு காணும் வகையில் நடப்பு மத்திய பட்ஜெட் ( 2013 - 2014 ) இல்லை. மாறாக மக்களுக்கு சிலத்துறைகள் மூலம் வழங்கி வந்த மானியத்தில்
26,571 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் இந்திய பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சத்து 73 கோடி ரூபாய் வரிச்சலுகை வழங்கபட்டுள்ளது. இதனால் அரசுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்தியஅரசுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.ஆனால் பொது விநியோகத்திட்டம், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பலத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. கிராமப்புற வேலைத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய 33,000 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகமிகக் குறைவானதாகும்.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் எப்போதுமில்லாத பலலட்சம் கோடி ரூபாய் அளவில் புதிய ஊழல்கள் நடந்தவண்ணம் உள்ளன.
மக்களின் நலனுக்கு எதிரான தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நாடு தழுவிய அளவில்மறியல் போராட்டம் நடத்திட மார்சிஸ்ட் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.கீழ்கண்ட கோரிக்கைகள் மீது புதுச்சேரியில் மே 18 - 22 தேதிகளில் மக்கள் சந்திப்பு தெருமுனை கூட்டங்களும், மே 24ல் புதுச்சேரி நகரம் - இலாசுபேட்டை - வில்லியனூர் - மதகடிப்பட்டு - பாகூர் - காரைக்கால்ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
கோரிக்கைகள்:

- சொந்த வீடில்லாத மக்களுக்கு குடிமனைப்பட்டா மற்றும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கு.
- விலைவாசி உயர்வை கட்டுபடுத்து. பொது விநியோகத்தின் கீழ் குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ தானியம் 32 விலையில் வழங்கு.
- உங்கள் பணம் உங்கள் கையில் என்ற மோசடித்தனத்தை கைவிடு
- முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்ட சமூக நலத்திட்டத்தை வங்கி மூலம் கணக்குடன் கூடிய ஆதார் அட்டை மூலம் செயல்படுத்தும் திட்டத்தை கைவிடு
- கல்வி நிறுவனங்களையும், பொது சுகாதார சேவைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்து. கல்விக்கும், பொதுசுகாதாரத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து
- வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்கு. சமூக நீதி வழங்கிடு, கிராமப்புற வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்து.
- பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடிவாளமிடு. சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்.
- ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு. பிரதமரையும் உள்ளடக்கிய வலுவான லோக்பால் சட்டத்தை இயற்றிடு.
இங்ஙனம்,
வெ.பெருமாள்,
( செயலாளர் )