புதுச்சேரி,மே-3
பாட்டாளி மக்கள் கட்சியை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரிகட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாரக்காணம் கட்டையன் காலணியில் புகுந்து தலித்மக்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும்,தலித் மக்களுக்கு எதிராக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அனைத்து சாதியினரையும் அணி சேர்ப்பதை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுப்பையா சிலை எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் முன்னிலை வகித்தார்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,அகில இந்திய பார்வர்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்து,புரட்சிகர சோஸலிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் இடதுசாரிகட்சிகளின் தலைவர்கள்,நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.முன்னதாக பாமக வை கண்டித்து முழக்கமிட்டனர்.