புதுச்சேரி,மே-2
இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு வும் ஏஐடியூசியும் இணைந்து 127வது மே தின பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் நடைபெற்ற இப்போதுக்கூட்டத்திற்கு ஏஐடியூசி மாநில தலைவர் நாரா.கலைநாதன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக சிஐடியு வின் தமிழ்மாநில செயலாளர் எஸ்.கண்ணன் பங்கேற்று பேசுகையில்,
மத்திய அரசின் நாசகர பொருளாளதாரகொள்கையை கண்டித்து பிப்ரவரி 20ல் நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றது.15வது முறையாக நடைபெற்ற இவ்வேலைநிறுத்தத்தில் 12கோடி மக்கள் பங்கேற்றனர்.பிரதமர் மன்மோகன்சிங் கேட்டு கொண்ட பிறகும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.வங்குதுறையே முற்றிலும் முடங்கியது.எதற்காக இந்த வேலை நிறுத்தம் நாட்டின் அனைத்து சொத்துகளையும் தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும்,5லட்சம் பென்ஷன் தொகையை பங்குசந்தையில் பொடுவதை எதிர்த்தும்,இன்சூரன்°துறையில் அன்னியரை அனுமதிக்கும் வேலையை எதிர்த்தும் இவ்வேலை நிறுத்தம் என்பது நடைபெற்றது.ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்த்து எப்படி வலுவான இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளதோ அதேப்போல் இந்தியாவிலும் அத்தகைய இயக்கம் வலுவாக வளர்ந்து வருகிறது என்றார்.
இன்றைய மன்மோகன்சிங் அரசு கடைபிடிக்கும் கொள்கையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.இதனால் வீட்டில் 4பேரும் வேலை செய்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் தினம் தினம் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.சராசரி ஒரு மாதத்திற்கு மின்hரக்கட்டணமும்,தொலைப்பேசி கட்டணமும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.எனவேதான் வரும் தேர்தலை கருத்தில் கொண்டு எரிவாயு சிலின்டருக்கான மாண்யம் அளிப்போம் என்ற அறிவிப்பை செய்துள்ளனர்.
8மணி நேர வேலையை 6மணிநேர வேலையாக குறைக்க வேண்டும் என்ற உழைப்பு சுரண்டலை எதிர்த்து போராடுகின்ற வேலையில் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.இந்த மே தினத்தில் வரும் தேர்தலில் நம்மை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு சரியான பாடத்தை நாம் புகட்ட வேண்டும் என்றார்.
சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,சிபிஐ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,சிஐடியு மாவட்ட செயலாளர் நிலவழகன்,ஏஐடியூசி மாநில பொதுச்செலாளர் அபிஷேகம் உள்ளிட்ட சிஐடியு,ஏஐடியூசியை சேர்ந்த தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.இப்பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மே தின பேரணியில் திரளாக தொழிலாளர்கள் பங்கேற்றனர்.