Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, September 30, 2010

மக்கள் கோரிக்கை மாநாடு உழவர்கரை கமிட்டி ,நகர கமிட்டி சார்பில்

0 comments


புதுச்சேரி செப்29
60 ஆண்டு விடுதலை இந்ததியாவில் உழைப்hளி மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்று மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
மார்ச்சி°ட் கட்சியின் புதுச்சேரி உழவர்கரை கமிட்டி ,நகர கமிட்டி சார்பில் லா°பேட்டையில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கட்சியின் உழவர் கரை கமிட்டி செயலாளர் எ°. லெனின் துரை தலைமை தாங்கினார். நகர கமிட்டி பொருப்பு செயலாளர் எம்.பி. மதிவாணன் வரவேற்று பேசினார். மார்க்சி°ட் கட்டசியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மாநாட்டில் பங்கேற்று பேசுகையில்
தமிழக சட்டமன்றத்தில் மே மாதம் நடந்த கூட்டத்தொடரில் தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டு மனைப்பட்டா அறிவிப்பு செய்தது. உடனே மார்க்சி°ட் கட்சியின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பாலபாரதி மார்க்சி°ட் கட்சியின் எதிர்பை பதிவு செய்ததோடு சட்டமன்றத்திற்கு வருவது வீட்டு மனை பெறுவதற்கு அல்ல என்றும் 25 லட்சம் மக்கள் மணைப்பட்டா கேட்டு விண்ணபித்து உள்ளார்களே அம்மக்களுக்கு மணைப்பட்ட வழங்குங்கள் என்று பேசியதோடு வெளிநடப்பும் செய்தார்கள். மார்க்சி°ட் கட்சி சொல்லி கொள்வதெல்லாம் அரசியலில் பங்கேற்ப்பது தொழிற்சங்க ஜனநாயகத்தில் ஈடுபடுவது மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக உள்ளோம்.
மக்கள் மன்றமான நாடாளுமன்ற சட்டமன்றங்களில் மார்க்சி°ட் கட்சியின் குரல் ஓலித்துகொண்டே இருக்கிறது அதற்கு புதுச்சேரி மக்கள் தங்களது ஓத்துழைப்பும் கொடுக்க வேண்டும்.
12லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் கட்டுமானம் சுமைப்பணி, ஆட்டோ, வீட்டு வேலை செய்யும் அமைப்புசாராதொழிலாளர்கள் 2 லட்சம் பேர் உள்ளனர். விவசாய தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேரும் எம்.ஏ. , பி.ஏ போன்றபட்டம் படித்து வேலைக்காக 2 லட்சம்பேர் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 5 லட்சம் பேர்களுக்கான வாழ்வாதரம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
விடுதலை அடைந்து 60 ஆண்டுடை கடந்தும் காங்கிர° கட்சியை பார்த்து கேட்பது உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் உயர்வு ஏற்படுத்தபட்டுள்ளதா?
புதுச்சேரியில் விலைநிலங்கள் குறைந்துகொண்டே வருகிறத ஹிதனை தடுக்க புதுவை அரசு நிலபயன்பாட்டுக்கான கொள்கை வகுக்கபட்டுள்ளதா?
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அரசின் தவறான கொள்கையால் மாதத்திற்கு 50க்கும் மேற்பட்டோர்கள் தற்கொலைகள் நடப்பதாகதகவல் வருகிறது. தமிழகத்தில் கார் தொழிற்சாலை, மொபைல் தொழிற்சாலைகள் வருகிறது என்று கூறும் கலைஞர் இந்த தற்கொலைகளை தடுக்க ஆட்சியின் கொள்கைகளை மாற்ற முன்வந்தாரா?
மத்திய அரசால் அடைக்கப்பட்ட அர்ஜீன் சென்குப்தா குழுவின் பரிந்துறையில் நாள் ஓன்றுக்கு 20 க்கும் குறைவாக சம்பளம் பெறுபவர்கள் எண்ணிக்கை 70 கோடி பேர் என்று கூறியுள்ளனர்.39கோடிபேர் நிரந்தரமற்ற வேலை செய்து வருகிறார்கள் என்பதையும் தெரிவித்துள்ளார்.
காங்கிர°, திமுக ஆட்சியில் பணம் படைத்தவர்கள் மேலும் பண்ம் படைத்தவர்களாகவும் ஏழைகள் மிகவும் ஏம்மைகளாகவும் மாற்றப்பட்டுள்ளார்கள்.
இன்றைக்கு மக்கள்ன் கோரிக்கை வலியுறுத்தி மாநாட்டை நடத்தும் மார்க்சி°ட் கட்சி மக்களுக்காக எத்தகையாக தியாகத்தையும் செய்யும் என்றார்.
என்.குணசேகரன்
மார்க்சி°ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசுகையில் சில்லரை வர்த்தகத்தில் 8கோடிபேர் ஈடுபட்டுள்ளனர் ஓர் ஆண்டுக்கு 13 லட்சம் கோடி கிடைக்கும் சில்லரை வர்த்தகத்தை அன்னிய நாட்டு வால்ரமார்ட் போன்ற பகாசுரா நிறுவணங்களுக்கு மன்மோகன் சிங் அரசு தாரை வார்த்துள்ளது. சாதாரண உழைப்பாலி சிறு வணிகர்களை பற்றி அக்கரை படாத அரசாக தான் மத்திய மாநில் அரசுகள் உள்ளது. மார்க்சி°ட் கட்சி பாதிக்கபட கூடிய மக்களைதிரட்டி புதுச்சேரி ,காரைக்கால் மக்களை திரட்டி கோரிக்கை மாநாட்டை நடத்திவருகிறது.
முன்னதாக பிரதேச செயலாளர் வி.பெருமாள் மாநிலக்குழு உறுப்பினர்தா.முருகன் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம் ,ராமச்சந்திரன் , முருகன், நிலவழகன், ராமசாமி ஆகியோர் பேசினார்கள் . இறுதியாக கமிட்டி உறுப்பினர் நடராஜன் நன்றி கூறி முடித்துவைத்தார். இம்மாநாட்டில் திரளானோர் பங்கேற்றனர்.
படம் உள்ளது
Read more...

மக்கள் கோரிக்கை மாநாடு

0 comments


புதுச்சேரி செப் 30
புதுச்சேரியில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வேண்டும் என்று மார்ச்சி°ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு வலியுருத்தியுள்ளது.
மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு மதகடிப்பட்டுல் நடைபெற்றது.கட்சியின் கொம்யூன் செயாலளர் உலகநாதன் தலைமை தாங்கினார்.மாநாட்டில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவர் பாலபாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பிரதேச செயலாளர் வி.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன், ராமசாமி, ஆகியோர் மாநில காங்கிர° அரசின் செயல்படாத தன்மை விளக்கி பேசினார்கள். பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன், சங்கர் அன்புமணி ,ராமமூர்த்தி, ஆவணியப்பன், பெரியசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் மத்திய மாநில அரசுகளின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் மண்ணாடிப்பட்டு கொம்யூனில் உள்ள அரசு புறம்போக்குநிலத்தில் பல ஆண்டுகளாக வசிபவர்களுக்கு மணைப்பட்டா வழங்கவேண்டும். கிராம விரிவாக்கத்திற்கு தகுந்தாபோல் குடிநீர் தட்டுபாடு இன்றி கிடைத்திட வேண்டும், திருபுவனை மற்றும் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவ =மனைகளை நவீனப்படுத்தி 24மணி நேரமும் செயல்படக்கூடியவையாக மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிரைவேற்றப்பட்டது.
படம்உள்ளது.
Read more...
Thursday, September 23, 2010

கண்காட்சி தெருமுனை

0 comments



புதுச்சேரி செப் 22

மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா அரசுகளின் சாதனைகளை விக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு மார்க்கட் எதிரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
33ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மேற்குவங்க அரசிற்கு மத்திய அரசு பாது உதவிகளை அளிக்க வேண்டும மவேயிஸ்ட் திரினாமுல் காங்கிரஸ் குண்டர்களின் வன்முறையை தடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
நெல்லிததோப்பு
இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு சிபிஎம் நகர கமிட்டி உறுப்பினர் மது தலைமை தாங்கினார் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம், நகர கமிட்டி பொருப்பு செயலாளர் மதிவாணன், பிரதேசக் குழு உறுப்பினர் ராம்ஜி, பிரபுராஜ் கமிட்டி உறுப்பினர்கள் ரமே~; சரவணன், மனவாளன் உள்ளிட்டடோர் பங்கேற்று பேசினார்கள்.
முத்தியாள்பேட்டை
முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில் நடந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், நகர கமிட்டி பொருப்பு செயலாளர் மதிவாணன், பிரதேசக்குழு உறுப்பினர்; பிரபுராஜ் ஆகியோர் மேற்கு வங்க கேரளா திரிபுரா அரசின் சாதனைகளை விலக்கி பேசினார்கள். நகர கமிட்டி உறுப்பினர்கள் ரமே~;, மது, மணவாளன் சேகர் உள்ளிட்ட திரளானோர பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக மணிக்கூண்டு கிழே இடது முன்னனி அரசுகளின் சதனைகளின் திட்டங்களை விளக்கி டிஜிட்டல் பேனர் கண்காட்சி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
படம் உள்ளது
Read more...

கல்விபாதுகாப்பு கருத்தரங்கம்

0 comments





புதுச்சேரி செப் 19



உயர் கல்வியில் பிராந்திய இட ஓதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரியில் நடந்த கல்வி பாதுகாப்பு கருத்தரங்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.



மார்க்சி;ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச க்குழுவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவும் இனைந்து கல்விபாதுகாப்பு கருத்தரங்கம் ஓட்டல் ராம் இன்டர் நே~னலில் நடைபெற்றது.



இக்;கருத்தரங்கத்திற்கு சிபிஐ புதுவை மாநில செயலாளர் நாரா.கலைநாதன் தலமை தாங்கினார். சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் வரவேற்புரையாற்றினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சிபிஐ தேசிய குழு உறுப்பினர் ஆர்.விசுவநாதன் எம்எல்ஏ மதிமுக மாநில அமைப்பாளர் மணிமாறன் பார்வர்டு கட்சி செயலாளர் முத்து ஆர்எஸ்பி மாநில தலைவர் லெனின் இந்திய குடியரசு கட்சி தலைவர் லெயோன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள் சிபிஎம். சிபிஐ கட்சி யின் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன் ராமச்சந்திரன் கலிவரதன் ராமசாமி உலகநாதன் முருகன் கீதநாதன் அபிN~கம் ராமமூர்த்தி சேது செல்வம் உள்ளிட்ட திரளான கல்வி ஆர்வலர்;கள். எழுத்தாளர்கள். மாணவர்கள் கருத்தரங்கத்தில பங்கேற்றனர்.



கருத்தரங்கத்தில்பங்கேற்று பேசிய தலைவர்கள் அரசு மற்றும தனியார் சுயநிதி தொழில் கல்லூரிகளில் சென்டாக் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் . இதனால் கிரமாப்புற பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக இருந்தது. இந்நிலையில் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கவுன்சிலிங் நடைபெற்று கிராமப்புற மணவர்களும் பயன்டைந்து வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசு அரசியல் நோக்கத்திற்காக பிராந்திய இடஓதுக்கீடு கொள்கையை அறிவித்துள்ளது. இதனால்ஓன்றுபட்ட மாநிலத்தில பிராந்தியங்களுக்கு இடையிலான மோதலும் மக்கள் ஓற்றுமையில் பிளவும் ஏற்பட்டுள்ளது.



மேலும் புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளி கல்லூரிகள் மீது சமூக கட்டுப்பாட்டை ஏற்படுத்த சட்டம் இயற்றுவது. பிராந்திய இடஓதுக்கீட்டை ரத்து செய்வது தனியார் பள்ளி மற்றும தொழில் கல்லூரிகளில் அரசு கட்டணத்தை நிர்ணயிக்கவும் கண்காணிக்கவும் குழு அமைக்கவேண்டும என்று கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.



படம் உள்ளது

Read more...
Monday, September 20, 2010

அலிகார் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்த போது நாடாளுமன்றம் கொந்தளித்தது எங்கள் இளைஞர்கள் 80 பேர் பலியான போது என்ன செய்தீர்கள்? காஷ்மீர் மக்கள் கேள

0 comments

புதுதில்லி, செப். 19-அலிகாரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் இறந்து போனபோது இந் திய நாடாளுமன்றமே கொந் தளித்ததே; எங்கள் மாநிலத்தில் தினந்தோறும் காவல்துறை நடத்திவரும் துப்பாக்கிச்சூட் டில் 80க்கும் மேற்பட்ட எங் கள் இளைஞர்களின் உயிர் பறிக்கப்பட்டும் கூட, நாடா ளுமன்றத்தில் எந்தச்சலனமும் ஏற்படவில்லையே ஏன் என்று காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 100 நாட்களாக நீடிக்கும் பதட்டம்-வன்முறை-துப்பாக் கிச் சூடுகளில் மொத்தம் 98 பேர் பலியாகியுள்ளனர். இந் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலை மையில் செப்டம்பர் 20 திங் களன்று அனைத்துக்கட்சி நாடாளுமன்றக்குழு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு செல் கிறது.முன்னதாக, இது தொடர் பாக கடந்த 15ம் தேதி தில்லி யில் பிரதமர் இல்லத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆற்றிய உரையின் முக் கிய அம்சங்கள் வருமாறு:-கடந்த மூன்று மாத கால மாக காஷ்மீர் பள்ளத்தாக்கு கொந்தளித்துப்போயிருக்கிறது. தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவுகள்; போராட்டங்கள். மக்களின் வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துப்போய் நிற்கிறது. 80க்கும் மேற்பட்டோர் மத்திய ரிசர்வ்போலீஸ் படை மற்றும் காவல்துறையினரின் துப்பாக் கிச் சூட்டிற்கு பலியாகியிருக் கிறார்கள். அவர்களில் பெரும் பாலானோர் 9 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட அப்பாவி இளைஞர்கள். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களின் உயிர் பறிக்கப் பட்டிருப்பது குறித்து எங்க ளது அதிர்ச்சியையும் ஆதங் கத்தையும் வெளிப்படுத்துகி றோம். 1947ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து வந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒரே குரலில் எழுந்து நின்று விரட்டியடித்தவர்கள் காஷ்மீர் மக்கள். அவர்கள் இந்திய ஒன்றி யத்தோடு தங்களைப் பிணைத் துக்கொள்ளும் வழியையே தேர்ந்தெடுத்தார்கள். இன் றைக்கு இந்திய அரசின் மீது கடும் ஆத்திரத்திலும், தனி மைப்படுத்தப்பட்ட வேதனை யிலும் இருக்கிறார்கள். இது ஏன் நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதுகுறித்து ஆராய முடியாது என்ற போதி லும் அரசு தனியாக இதை ஆய்வு செய்ய வேண்டிய அவ சியம் உள்ளது. காஷ்மீரில் நடக்கும் பெரு வாரியான மக்கள் பங்கேற்கும் இந்த போராட்டங்களை எப் படிப்பார்க்கவேண்டும் என் பதே முதல் பிரச்சனை. காவல் துறையினருக்கு எதிராக கல் வீச்சில் ஈடுபடும் இளைஞர் களை, பயங்கர வன்முறைகளை நடத்தும் கொடிய பயங்கர வாதிகளோடு ஒப்பிடுவது கூடாது. துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்புப் படையினர் இந்த கண்ணோட்டத்தில் அணு காமல் நடத்திய துப்பாக்கிச் சூடுகளால் ஏராளமான உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது.பாதுகாப்புப்படைகள் அதிகபட்ச நிதானத்தை கடைப் பிடித்ததாக உள்துறை அமைச் சர் கூறுகிறார். ஆனால் தினந் தோறும் துப்பாக்கிச்சூடு தொடர்கிறது. இதில் உயிர்கள் பறிக்கப்படுவதால் நிலைமை மேலும் மேலும் மோசமடைந் துள்ளது. கூட்டத்தினரை கலைப்பதற்காக காவல்துறை யினர் கடுமையான அடக்கு முறையை பிரயோகிப்பதை நியாயப்படுத்துவது எந்தவிதத் திலும் சரியல்ல.அதுமட்டுமின்றி இந்தப் போராட்டங்கள் பயங்கரவாதி களாலும், பாகிஸ்தான் ஆதரவு சக்திகளாலும் தூண்டிவிடப் படுகின்றன என்ற கருத்தும் தவறானது. 20 ஆண்டுகாலமாக பயங்கரவாதத் தாக்குதல் களை யும், அதற்கு பதிலடியாக பாது காப்புப் படையினரின் நட வடிக்கைகளையும் மட்டுமே பார்த்து வளர்ந்த இளைஞர் கள் அவர்கள். எனவே அவர் களது கோபத்தை, மனநிலை யை மேற்கண்ட சில சக்திகள் பயன்படுத்த முயற்சிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.எனவே இவற்றையெல் லாம் கணக்கில் கொண்டு, காஷ் மீர் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவும், அவர்க ளது குறைகளை காது கொடுத்து கேட்கவும் வேண்டும் என்பதே முதல் கோரிக்கை. இதற்கு அடிப்படையானது ஒரு அர சியல் ரீதியான அணுகுமுறை; சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்ற கண்ணோட்டத்துடன் கூடிய அணுகுமுறை அல்ல. அதுமட்டுமின்றி மேலும் மேலும் பாதுகாப்புப் படை யினரை குவிப்பதில் இத்தகைய போராட்டங்களுக்கு எந்த தீர்வும் காண முடியாது. எனவே காஷ்மீர் பள்ளத் தாக்கில் இயல்பு நிலைமையை மீட்க 5 முக்கிய கடமைகளை மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும். 1) கடும் குற்றச்சாட்டு எது வும் இல்லாமல் சிறையில் அடைக் கப்பட்டுள்ள அனைத்து இளம் சிறார்களையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும்.2) பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் காயமடைந் துள்ளனர். சிலர் நிரந்தரமாக ஊனமடைந்துள்ளனர். அவர் களுக்கு உரிய நிவாரணமும், அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்வாதாரமும் ஏற்படுத்தப் படவேண்டும்.3) பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்பு பயங்கரவாதிகளாக இருந்து வன்முறையை கை விட்டு வாழ்வு தேடி வந்தவர் கள் ஆகியோரின் வாழ்வாதா ரத்திற்கு உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத வன்முறையின் அளவு கணிச மாக குறைந்திருப்பதை கணக் கில் கொண்டு, ராணுவம் மற் றும் பாதுகாப்புப் படையின ரின் அளவை படிப்படியாக குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இங் கேதான், ஆயுதப்படையின ரின் சிறப்பு அதிகாரச்சட்டம் தொடர்வதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஸ்ரீநகரிலும் இதர முக்கிய நகரங்களிலும் ராணுவம் நிறுத்தப்பட வில்லை அல்லது பிரயோகிக் கப்படவில்லை. ஆயுதப்படை யினர் சிறப்பு அதிகாரச்சட் டத்தின் எதிர்காலம் குறித்து பேசுவதற்கு முன்பு, ராணுவம் நிறுத்தப்படாத ஸ்ரீநகர் மற் றும் இதர முக்கிய நகரங்களில் இருந்து “பதட்டமான பகுதி கள்” என்ற அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த அறிவிப்பை வெளியிட்டாலே, மேற்கண்ட சட்டம் அந்தப் பகுதிகளில் பிரயோகிக்கப் படாது. மக்கள் குடியிருக்கும் பகுதிகளில், கடுமையான பயங் கரவாத செயல்கள் எதுவும் இல்லை. எனவே ராணுவம் இந்த பகுதிகளில் குவிக்கப் படவேண்டிய அவசியம் இல்லை என்பதையே பாது காப்பு தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. ஆயுதப்படை யினரின் கடினமான பணி என்பது எல்லைக்கட்டுப் பாட்டுக் கோட்டை தாண்டி ஊடுருவும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் அடங்கி யிருக்கிறது.4. மற்றுமொரு முக்கிய அம்சம், பாதுகாப்புப்படை யினரின் பொறுப்பு குறித்த தாகும். மனித உரிமை மீறல் களும் அதீதமான தாக்குதல் களும் அங்கு நடக்கின்றன. இன்றைக்கு நீடிக்கும் இந்தப் பெரும்போராட்டத்திற்கு அடிப்படைக் காரணமே மச் சில் எனும் பகுதியில் ஏதுமறி யாத மூன்று அப்பாவிகளை பாதுகாப்புப் படையினர் என் கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது தான். எனவே இது போன்ற அப்பட்டமான மீறல் களுக்கு எதிராக உறுதியான நடவ டிக்கை எடுக்காமல், மக்களி டையே இந்த அரசால் நம் பிக்கை ஏற்படுத்த முடியாது.இதை அனைத்தையும் மன தில் கொண்டு, உடனடியாக அங்கு அனைத்து தரப்பின ருடனும் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்; ஒரு அர சியல் நடவடிக்கை துவக்கப் படவேண்டும்.அனைத்துக்கட்சி குழு காஷ்மீர் சென்று பல்வேறு தரப்பு மக்கள் பிரதிநிதிகளுட னும் விவாதிக்க வேண்டும். எவ்வித முன்நிபந்தனையும் விதிக்காமல் பேச்சுவார்த் தையை துவக்குவதாக பிரதமர் அறிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை கண்கா ணிக்க ஒரு மூத்த அரசியல் பிரதிநிதியை கூட பிரதமர் நியமிக்கலாம். கடந்த மாதம் நான் ஸ்ரீநகர் சென்றிருந்தேன், ஏராளமான மக்களை சந்தித்தேன். நாடாளு மன்றத்தில் எங்களது பிரச்ச னையை அரசியல் கட்சிகள் எழுப்பாதது ஏன் என்று அவர் கள் கேள்வி எழுப்பினார்கள். எனவே காஷ்மீர் மக்களின் உணர்வுகளையும் அபிலாசை களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்தத்தீர்வும் காண முடியாது என்பதை நாட்டு மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும், அரசும் உணர வேண்டும். (ஐஎன்என்)
Read more...
Sunday, September 12, 2010
Wednesday, September 8, 2010

பொது மக்களுக்கும் பாராட்டு தெரிவிக்கின்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

0 comments



புதுச்சேரி செப் 4
புதுச்சேரியில் நடப்பது மக்களாட்சியா? மன்னர்ஆட்சியா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் பெற போராடிய மர்க்சிஸ்ட் கட்சியின் பிரதேசக் குழுவுக்கும் போராட்டதிதிற்கு ஆதரவலித்த ஜனநாயக இயக்கங்களுக்கும் பொது மக்களுக்கும் பாராட்டு தெரிவிக்கின்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டம் அண்ணாசாலையில் நடைபெற்றது,
சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று பேசுகையில்
மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் நல கோரிக்கையை முன்வைத்து இந்தியா முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்திவருகிறது புதுச்சேரியில் அத்தகைய போராட்டங்களின் ஒரு பகுதியாக சமிபத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவக்குவதற்கு போராட்டம் நடத்தி வெற்றி பெற்று இருக்கிறது. புதுச்சேரியில் ஆளுகின்ற காங்கிரஸ் அமைச்சர் ஒருவருக்கு பிறந்தநாள் தட்டியில் மன்னரே என்று குறிபிட்டு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மன்னர் என்றால் முதல்வர் என்ன சக்கர வர்த்தியா? அப்போ புதுச்சேரியில் நடப்பது மக்கள் ஆட்சியா மன்னர் ஆட்சியா?
மக்கள் கோரிக்கையில் அக்கரை செலுத்தாத காங்கிரஸ் ஆட்சி சுயவிளம்பரத்தில் மட்டும் அக்கரை செலுத்தி வருகிறது.
மக்களுக்காக போராட்டம் நடத்துபவர்கள் மார்க்சிஸ்ட்டுகள் தங்களை ஒருபோதும் தலைவர்என்று அழைத்து கொள்வதில்லை மக்கள் ஊழியனே என்று அடையாளபடுத்தி கொள்பவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்.
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடிய போது அவர்கள் பெண்கள் என்று பாராமல் ஆண் காவலர்களை வைத்து இழுத்து சென்று தாக்கப்பட்ட சம்பசம் திமுக அரசால் அரங்கேறியுள்ளது.
அறவழியில் போராட்டம் நடத்தமுயன்றவர்களை காவல்துறையை வைத்து வன்முறையின் முலம் ஒடுக்க நினைக்கும் திமுக அன்றைக்கு டால்மியாபுரம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டபோது கல்லக்குடி என்ற பெயரை மாற்றம் செய்யக்கூடாது என்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது என்ன வழி என்று தமிழக முதல்வரும் திமுக தலைவரும் கூறமுடியுமா?
நாள் தோறும் மேற்குவங்க அரசை சுட்டி காட்டும் தமிழக முதல்வர் அங்கு தொழிற்சாலைகள் முடப்பட்டால் அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாதம் ருபாய் 1500 யை சிபிஎம் தலைமையிலான மேற்குவங்க அரசு வழங்கிவருகிறது, ஏன் தமிழகத்தில் நீங்கள் கொடுக்கவில்லை. கிராமப்புறத்தில் ஏழை விவசாயத்தொழிலாளர்கள் 100 நாள் வேலை உறுதிதிட்டம் எப்படி மார்க்சிஸ்ட் கட்சி போராடி பெற்றதோ அதே போல் நகரப்புறத்திலும் ஏழை மக்களுக்கும் நூறுநாள் வேலை திட்டம் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி நடத்த கூடிய முன்று மாநிலங்களில் சட்டம் கொண்டு வந்து அமல் படுத்தியுள்ளோம். எனவே தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதரனமாக திகழும் மார்க்சிஸ்ட் ஆட்சி யை முடக்குவதற்கு மாவேயிஸ்டுகளோடு கைகோர்த்து மம்தா வகையாராக்கள் செயல்பட்டு வருகின்றனர். மக்களோடு மக்களாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஓழிப்பு, நிலம் ஆக்கரமிப்பு எதிர்த்து, ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது.
என்.குணசேகரன்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசுகையில்.
மார்க்சிஸ்ட் கட்சி இன்றைக்கு மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. புதுச்சேரி சட்டமன்றத்ரிதல் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் இல்லை ஆனால் எந்த பிரச்சனையாக இந்தாலும் முதல் குரல் கொடுக்கும் கட்சி. புதுச்சேரியில் 38 வருடங்களாக நடக்காத உள்ளாட்சி தேர்தலை மார்க்சிஸ்ட் கட்சி நீதிமன்றம் வரை சென்று போராடி நடத்தி வெற்றிபெற்றது.
இன்றைக்கு உயர்கல்வி கடை சரக்காக மாற்றி உள்ள ஆட்சியாளர்கள் கோடிஸ்வர்ர்கள் மட்டுமே மருத்துவ கல்வி 30 லட்சம் 40 லட்சம் கொடுத்து படிக்கமுடியும் என்ற நிலையை எதிர்த்து போராடிவருகிறது. சாதரண ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்க அரசு மருத்துவ கல்லூரியில் மட்டுமே முடியும் எனவே தான் புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கிறது.
ஆளும் காங்கிரஸ் கட்சி மருத்துவகல்லூரி விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சாகும்வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து சாக துணிந்த கட்சி. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் 6 தோழர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே மக்களுக்கான போராட்டத்தில் எந்த தீயாகமும் செய்ய மார்க்சிஸ்ட்டுகள் தயாராக உள்ளனர். முன்னதாக மருத்துவ கல்லூரி அங்கீகாரம் பெருவதற்கு போராடிய மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு உ.வாசுகி கதர் ஆடை அணிவித்து வாழ்த்தினார்.
பிரதேச செயலாளர் வெ.பெருமாள் செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், நிலவழகன், கலிவரதன், உலகநாதன், ராமசாமி, முருகன் உள்ளிட்ட கட்சியின் பிரதேசக் குழு இடைகமிட்டி உறுப்பினர்கள் திரளாக இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...
Tuesday, September 7, 2010

BANDH FOR MEDICL COLLEGE PERMISSION FROM MEDICL COUNSEL OF INDIA – FOR DREAMS OF 150 MEDICAL STUDENTS IN PONDICHERRY

0 comments















ஆக் 24 2010





Read more...

மக்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி நடைப்பயணம்

0 comments
ஆக் 22முதல் 29 வரை



























Read more...

கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி ஆக 20மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முத்தியாள்பேட்டை கட்சி கொடிகம்பத்தை பிடிங்கிய கங்கிர° குண்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில் நடந்த இப்போரட்டத்திர்க்கு சிபிஎம் கிளைச்செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் சீனிவாசன்,பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ்ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கமிட்டி உறுப்பினர் ரமேஷ்,மதிவானன்,மணவாளன்,கலியமூர்த்தி ,மது,ராமசாமி, சேகர் வலிபர் சங்க தலைவர் க.சந்துரு உள்ளிட்ட திரளான கட்சிஊழியர்கள் போரட்டத்தில் கலந்து கொண்டு குற்றவாலிகள் மீது நடவடிக்கை கோரி =முழக்கமிட்டனர்.
Read more...

ALL PARTY DISCUSS ABOUT FUTURE ACTION ABOUT MEDICAL COLLEGE

0 comments

Read more...

Puducherry CPM Rally ,demo in front of medical college.....

0 comments






Read more...

Puducherry CPM leaders arrested for medical college struggle

0 comments



Read more...

Puducherry CPM Hunger strike 2nd day in front of medical college

0 comments

Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com