Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, September 30, 2010

மக்கள் கோரிக்கை மாநாடு உழவர்கரை கமிட்டி ,நகர கமிட்டி சார்பில்

0 comments


புதுச்சேரி செப்29
60 ஆண்டு விடுதலை இந்ததியாவில் உழைப்hளி மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்று மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
மார்ச்சி°ட் கட்சியின் புதுச்சேரி உழவர்கரை கமிட்டி ,நகர கமிட்டி சார்பில் லா°பேட்டையில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கட்சியின் உழவர் கரை கமிட்டி செயலாளர் எ°. லெனின் துரை தலைமை தாங்கினார். நகர கமிட்டி பொருப்பு செயலாளர் எம்.பி. மதிவாணன் வரவேற்று பேசினார். மார்க்சி°ட் கட்டசியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மாநாட்டில் பங்கேற்று பேசுகையில்
தமிழக சட்டமன்றத்தில் மே மாதம் நடந்த கூட்டத்தொடரில் தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டு மனைப்பட்டா அறிவிப்பு செய்தது. உடனே மார்க்சி°ட் கட்சியின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பாலபாரதி மார்க்சி°ட் கட்சியின் எதிர்பை பதிவு செய்ததோடு சட்டமன்றத்திற்கு வருவது வீட்டு மனை பெறுவதற்கு அல்ல என்றும் 25 லட்சம் மக்கள் மணைப்பட்டா கேட்டு விண்ணபித்து உள்ளார்களே அம்மக்களுக்கு மணைப்பட்ட வழங்குங்கள் என்று பேசியதோடு வெளிநடப்பும் செய்தார்கள். மார்க்சி°ட் கட்சி சொல்லி கொள்வதெல்லாம் அரசியலில் பங்கேற்ப்பது தொழிற்சங்க ஜனநாயகத்தில் ஈடுபடுவது மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக உள்ளோம்.
மக்கள் மன்றமான நாடாளுமன்ற சட்டமன்றங்களில் மார்க்சி°ட் கட்சியின் குரல் ஓலித்துகொண்டே இருக்கிறது அதற்கு புதுச்சேரி மக்கள் தங்களது ஓத்துழைப்பும் கொடுக்க வேண்டும்.
12லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் கட்டுமானம் சுமைப்பணி, ஆட்டோ, வீட்டு வேலை செய்யும் அமைப்புசாராதொழிலாளர்கள் 2 லட்சம் பேர் உள்ளனர். விவசாய தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேரும் எம்.ஏ. , பி.ஏ போன்றபட்டம் படித்து வேலைக்காக 2 லட்சம்பேர் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 5 லட்சம் பேர்களுக்கான வாழ்வாதரம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
விடுதலை அடைந்து 60 ஆண்டுடை கடந்தும் காங்கிர° கட்சியை பார்த்து கேட்பது உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் உயர்வு ஏற்படுத்தபட்டுள்ளதா?
புதுச்சேரியில் விலைநிலங்கள் குறைந்துகொண்டே வருகிறத ஹிதனை தடுக்க புதுவை அரசு நிலபயன்பாட்டுக்கான கொள்கை வகுக்கபட்டுள்ளதா?
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அரசின் தவறான கொள்கையால் மாதத்திற்கு 50க்கும் மேற்பட்டோர்கள் தற்கொலைகள் நடப்பதாகதகவல் வருகிறது. தமிழகத்தில் கார் தொழிற்சாலை, மொபைல் தொழிற்சாலைகள் வருகிறது என்று கூறும் கலைஞர் இந்த தற்கொலைகளை தடுக்க ஆட்சியின் கொள்கைகளை மாற்ற முன்வந்தாரா?
மத்திய அரசால் அடைக்கப்பட்ட அர்ஜீன் சென்குப்தா குழுவின் பரிந்துறையில் நாள் ஓன்றுக்கு 20 க்கும் குறைவாக சம்பளம் பெறுபவர்கள் எண்ணிக்கை 70 கோடி பேர் என்று கூறியுள்ளனர்.39கோடிபேர் நிரந்தரமற்ற வேலை செய்து வருகிறார்கள் என்பதையும் தெரிவித்துள்ளார்.
காங்கிர°, திமுக ஆட்சியில் பணம் படைத்தவர்கள் மேலும் பண்ம் படைத்தவர்களாகவும் ஏழைகள் மிகவும் ஏம்மைகளாகவும் மாற்றப்பட்டுள்ளார்கள்.
இன்றைக்கு மக்கள்ன் கோரிக்கை வலியுறுத்தி மாநாட்டை நடத்தும் மார்க்சி°ட் கட்சி மக்களுக்காக எத்தகையாக தியாகத்தையும் செய்யும் என்றார்.
என்.குணசேகரன்
மார்க்சி°ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசுகையில் சில்லரை வர்த்தகத்தில் 8கோடிபேர் ஈடுபட்டுள்ளனர் ஓர் ஆண்டுக்கு 13 லட்சம் கோடி கிடைக்கும் சில்லரை வர்த்தகத்தை அன்னிய நாட்டு வால்ரமார்ட் போன்ற பகாசுரா நிறுவணங்களுக்கு மன்மோகன் சிங் அரசு தாரை வார்த்துள்ளது. சாதாரண உழைப்பாலி சிறு வணிகர்களை பற்றி அக்கரை படாத அரசாக தான் மத்திய மாநில் அரசுகள் உள்ளது. மார்க்சி°ட் கட்சி பாதிக்கபட கூடிய மக்களைதிரட்டி புதுச்சேரி ,காரைக்கால் மக்களை திரட்டி கோரிக்கை மாநாட்டை நடத்திவருகிறது.
முன்னதாக பிரதேச செயலாளர் வி.பெருமாள் மாநிலக்குழு உறுப்பினர்தா.முருகன் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம் ,ராமச்சந்திரன் , முருகன், நிலவழகன், ராமசாமி ஆகியோர் பேசினார்கள் . இறுதியாக கமிட்டி உறுப்பினர் நடராஜன் நன்றி கூறி முடித்துவைத்தார். இம்மாநாட்டில் திரளானோர் பங்கேற்றனர்.
படம் உள்ளது

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com