Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, September 30, 2010

மக்கள் கோரிக்கை மாநாடு

0 comments


புதுச்சேரி செப் 30
புதுச்சேரியில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வேண்டும் என்று மார்ச்சி°ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு வலியுருத்தியுள்ளது.
மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு மதகடிப்பட்டுல் நடைபெற்றது.கட்சியின் கொம்யூன் செயாலளர் உலகநாதன் தலைமை தாங்கினார்.மாநாட்டில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவர் பாலபாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பிரதேச செயலாளர் வி.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன், ராமசாமி, ஆகியோர் மாநில காங்கிர° அரசின் செயல்படாத தன்மை விளக்கி பேசினார்கள். பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன், சங்கர் அன்புமணி ,ராமமூர்த்தி, ஆவணியப்பன், பெரியசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் மத்திய மாநில அரசுகளின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் மண்ணாடிப்பட்டு கொம்யூனில் உள்ள அரசு புறம்போக்குநிலத்தில் பல ஆண்டுகளாக வசிபவர்களுக்கு மணைப்பட்டா வழங்கவேண்டும். கிராம விரிவாக்கத்திற்கு தகுந்தாபோல் குடிநீர் தட்டுபாடு இன்றி கிடைத்திட வேண்டும், திருபுவனை மற்றும் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவ =மனைகளை நவீனப்படுத்தி 24மணி நேரமும் செயல்படக்கூடியவையாக மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இம்மாநாட்டில் நிரைவேற்றப்பட்டது.
படம்உள்ளது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com