புதுச்சேரி செப் 22
மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா அரசுகளின் சாதனைகளை விக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு மார்க்கட் எதிரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
33ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மேற்குவங்க அரசிற்கு மத்திய அரசு பாது உதவிகளை அளிக்க வேண்டும மவேயிஸ்ட் திரினாமுல் காங்கிரஸ் குண்டர்களின் வன்முறையை தடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
நெல்லிததோப்பு
இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு சிபிஎம் நகர கமிட்டி உறுப்பினர் மது தலைமை தாங்கினார் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம், நகர கமிட்டி பொருப்பு செயலாளர் மதிவாணன், பிரதேசக் குழு உறுப்பினர் ராம்ஜி, பிரபுராஜ் கமிட்டி உறுப்பினர்கள் ரமே~; சரவணன், மனவாளன் உள்ளிட்டடோர் பங்கேற்று பேசினார்கள்.
முத்தியாள்பேட்டை
முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில் நடந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், நகர கமிட்டி பொருப்பு செயலாளர் மதிவாணன், பிரதேசக்குழு உறுப்பினர்; பிரபுராஜ் ஆகியோர் மேற்கு வங்க கேரளா திரிபுரா அரசின் சாதனைகளை விலக்கி பேசினார்கள். நகர கமிட்டி உறுப்பினர்கள் ரமே~;, மது, மணவாளன் சேகர் உள்ளிட்ட திரளானோர பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக மணிக்கூண்டு கிழே இடது முன்னனி அரசுகளின் சதனைகளின் திட்டங்களை விளக்கி டிஜிட்டல் பேனர் கண்காட்சி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
படம் உள்ளது