புதுச்சேரி செப் 4
புதுச்சேரியில் நடப்பது மக்களாட்சியா? மன்னர்ஆட்சியா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் பெற போராடிய மர்க்சிஸ்ட் கட்சியின் பிரதேசக் குழுவுக்கும் போராட்டதிதிற்கு ஆதரவலித்த ஜனநாயக இயக்கங்களுக்கும் பொது மக்களுக்கும் பாராட்டு தெரிவிக்கின்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டம் அண்ணாசாலையில் நடைபெற்றது,
சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று பேசுகையில்
மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் நல கோரிக்கையை முன்வைத்து இந்தியா முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்திவருகிறது புதுச்சேரியில் அத்தகைய போராட்டங்களின் ஒரு பகுதியாக சமிபத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவக்குவதற்கு போராட்டம் நடத்தி வெற்றி பெற்று இருக்கிறது. புதுச்சேரியில் ஆளுகின்ற காங்கிரஸ் அமைச்சர் ஒருவருக்கு பிறந்தநாள் தட்டியில் மன்னரே என்று குறிபிட்டு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மன்னர் என்றால் முதல்வர் என்ன சக்கர வர்த்தியா? அப்போ புதுச்சேரியில் நடப்பது மக்கள் ஆட்சியா மன்னர் ஆட்சியா?
மக்கள் கோரிக்கையில் அக்கரை செலுத்தாத காங்கிரஸ் ஆட்சி சுயவிளம்பரத்தில் மட்டும் அக்கரை செலுத்தி வருகிறது.
மக்களுக்காக போராட்டம் நடத்துபவர்கள் மார்க்சிஸ்ட்டுகள் தங்களை ஒருபோதும் தலைவர்என்று அழைத்து கொள்வதில்லை மக்கள் ஊழியனே என்று அடையாளபடுத்தி கொள்பவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்.
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடிய போது அவர்கள் பெண்கள் என்று பாராமல் ஆண் காவலர்களை வைத்து இழுத்து சென்று தாக்கப்பட்ட சம்பசம் திமுக அரசால் அரங்கேறியுள்ளது.
அறவழியில் போராட்டம் நடத்தமுயன்றவர்களை காவல்துறையை வைத்து வன்முறையின் முலம் ஒடுக்க நினைக்கும் திமுக அன்றைக்கு டால்மியாபுரம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டபோது கல்லக்குடி என்ற பெயரை மாற்றம் செய்யக்கூடாது என்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது என்ன வழி என்று தமிழக முதல்வரும் திமுக தலைவரும் கூறமுடியுமா?
நாள் தோறும் மேற்குவங்க அரசை சுட்டி காட்டும் தமிழக முதல்வர் அங்கு தொழிற்சாலைகள் முடப்பட்டால் அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மாதம் ருபாய் 1500 யை சிபிஎம் தலைமையிலான மேற்குவங்க அரசு வழங்கிவருகிறது, ஏன் தமிழகத்தில் நீங்கள் கொடுக்கவில்லை. கிராமப்புறத்தில் ஏழை விவசாயத்தொழிலாளர்கள் 100 நாள் வேலை உறுதிதிட்டம் எப்படி மார்க்சிஸ்ட் கட்சி போராடி பெற்றதோ அதே போல் நகரப்புறத்திலும் ஏழை மக்களுக்கும் நூறுநாள் வேலை திட்டம் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி நடத்த கூடிய முன்று மாநிலங்களில் சட்டம் கொண்டு வந்து அமல் படுத்தியுள்ளோம். எனவே தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதரனமாக திகழும் மார்க்சிஸ்ட் ஆட்சி யை முடக்குவதற்கு மாவேயிஸ்டுகளோடு கைகோர்த்து மம்தா வகையாராக்கள் செயல்பட்டு வருகின்றனர். மக்களோடு மக்களாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஓழிப்பு, நிலம் ஆக்கரமிப்பு எதிர்த்து, ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது.
என்.குணசேகரன்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசுகையில்.
மார்க்சிஸ்ட் கட்சி இன்றைக்கு மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. புதுச்சேரி சட்டமன்றத்ரிதல் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் இல்லை ஆனால் எந்த பிரச்சனையாக இந்தாலும் முதல் குரல் கொடுக்கும் கட்சி. புதுச்சேரியில் 38 வருடங்களாக நடக்காத உள்ளாட்சி தேர்தலை மார்க்சிஸ்ட் கட்சி நீதிமன்றம் வரை சென்று போராடி நடத்தி வெற்றிபெற்றது.
இன்றைக்கு உயர்கல்வி கடை சரக்காக மாற்றி உள்ள ஆட்சியாளர்கள் கோடிஸ்வர்ர்கள் மட்டுமே மருத்துவ கல்வி 30 லட்சம் 40 லட்சம் கொடுத்து படிக்கமுடியும் என்ற நிலையை எதிர்த்து போராடிவருகிறது. சாதரண ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்க அரசு மருத்துவ கல்லூரியில் மட்டுமே முடியும் எனவே தான் புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கிறது.
ஆளும் காங்கிரஸ் கட்சி மருத்துவகல்லூரி விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சாகும்வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து சாக துணிந்த கட்சி. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் 6 தோழர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே மக்களுக்கான போராட்டத்தில் எந்த தீயாகமும் செய்ய மார்க்சிஸ்ட்டுகள் தயாராக உள்ளனர். முன்னதாக மருத்துவ கல்லூரி அங்கீகாரம் பெருவதற்கு போராடிய மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு உ.வாசுகி கதர் ஆடை அணிவித்து வாழ்த்தினார்.
பிரதேச செயலாளர் வெ.பெருமாள் செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், நிலவழகன், கலிவரதன், உலகநாதன், ராமசாமி, முருகன் உள்ளிட்ட கட்சியின் பிரதேசக் குழு இடைகமிட்டி உறுப்பினர்கள் திரளாக இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.