புதுச்சேரி செப் 19
உயர் கல்வியில் பிராந்திய இட ஓதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரியில் நடந்த கல்வி பாதுகாப்பு கருத்தரங்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
மார்க்சி;ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச க்குழுவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவும் இனைந்து கல்விபாதுகாப்பு கருத்தரங்கம் ஓட்டல் ராம் இன்டர் நே~னலில் நடைபெற்றது.
இக்;கருத்தரங்கத்திற்கு சிபிஐ புதுவை மாநில செயலாளர் நாரா.கலைநாதன் தலமை தாங்கினார். சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் வரவேற்புரையாற்றினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சிபிஐ தேசிய குழு உறுப்பினர் ஆர்.விசுவநாதன் எம்எல்ஏ மதிமுக மாநில அமைப்பாளர் மணிமாறன் பார்வர்டு கட்சி செயலாளர் முத்து ஆர்எஸ்பி மாநில தலைவர் லெனின் இந்திய குடியரசு கட்சி தலைவர் லெயோன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள் சிபிஎம். சிபிஐ கட்சி யின் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன் ராமச்சந்திரன் கலிவரதன் ராமசாமி உலகநாதன் முருகன் கீதநாதன் அபிN~கம் ராமமூர்த்தி சேது செல்வம் உள்ளிட்ட திரளான கல்வி ஆர்வலர்;கள். எழுத்தாளர்கள். மாணவர்கள் கருத்தரங்கத்தில பங்கேற்றனர்.
கருத்தரங்கத்தில்பங்கேற்று பேசிய தலைவர்கள் அரசு மற்றும தனியார் சுயநிதி தொழில் கல்லூரிகளில் சென்டாக் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் . இதனால் கிரமாப்புற பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக இருந்தது. இந்நிலையில் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கவுன்சிலிங் நடைபெற்று கிராமப்புற மணவர்களும் பயன்டைந்து வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசு அரசியல் நோக்கத்திற்காக பிராந்திய இடஓதுக்கீடு கொள்கையை அறிவித்துள்ளது. இதனால்ஓன்றுபட்ட மாநிலத்தில பிராந்தியங்களுக்கு இடையிலான மோதலும் மக்கள் ஓற்றுமையில் பிளவும் ஏற்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளி கல்லூரிகள் மீது சமூக கட்டுப்பாட்டை ஏற்படுத்த சட்டம் இயற்றுவது. பிராந்திய இடஓதுக்கீட்டை ரத்து செய்வது தனியார் பள்ளி மற்றும தொழில் கல்லூரிகளில் அரசு கட்டணத்தை நிர்ணயிக்கவும் கண்காணிக்கவும் குழு அமைக்கவேண்டும என்று கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
படம் உள்ளது
Thursday, September 23, 2010
கல்விபாதுகாப்பு கருத்தரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)