Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, August 28, 2010

இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments
புதுச்சேரி ஆக 27
புதுச்சேரி அரசு மருததுவ கல்லூரிக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதுச்சேரி கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள இந்திரகாந்தி அரசு மருத்துவ கல்லூரி கடந்த 2006 ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இது நாள் வரை þரூ.140 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் கடந்த 2008 ஆம் ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அப்போதைய முதல்ர் ரங்கசாமி அறிவித்தார்.
இடையில் முதல்வர்,அமைச்சர் மாற்றம் ஏற்பட்டால் கல்லூரி துவங்குவதில் காலதாமதம் எற்பட்டது இதனால்அரசு இக்கல்லூரியை ஈஎ°ஐயிடம் ஓப்படைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டது.
அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராட்டம் நடத்தினார்கள் உடனே தனது முடிவை திரும்பபெற்றுக் கொண்டது. இந்நிலையில் மாணவர் சேர்க்கை 2010 ஆம் கல்வி ஆண்டில் துவங்கும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அகில இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் இக்கல்லுரிக்கு கிடைக்கவில்லை.அரசும் இதில் போதிய முயறுச்சி எடுக்கவில்லை இதனால் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிகள், அதிமுக அகிய கட்சிகளின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் மாநிலக்குழு உறுப்பினர் தா முருகன் ஆகியோர் மருத்துவ கல்லூரி முன்பு கால வரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆக°ட் 24ல் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
இக்கட்சிகளின் நிர்பந்தத்தால் புதுச்சேரி அரச சென்னை உயர்நீதி மன்றத்தில் அங்கீhரம் கோரி வடிக்கு பதிவு செய்தது நீதிமன்ற உத்தரவை அடுத்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் புதுச்சேரிக்கு வந்து கல்லுரியை பார்வையிட்டு சென்றது.
இந்நிலையில் ஆக°ட் 26ல் புதுச்சேரி அரச மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் வழங்க ஓப்புதல் அளித்தது. அதற்க்கான சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜிடம அளிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அங்கீராம் கிடைத்ததின் மூலம் ஆண்டுக்கு 150 மாணவர்கள் சேர்க்கபடுவார்கள். தலா ரூ10ஆயிரத்திற்கும் குறைவாக கட்டணம் செலுத்தி படிகக முடியும்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com