Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, December 5, 2010

Red Salute to Comrade P Ramamoorthy

0 comments




மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முது பெரும் தோழரும் புதுச்சேரி பிரதேசக் குழு தோழருமான பி. ராமமூர்த்தி(79) காலமானார்.
சிபிஎம் புதுச்சேரி பிரதேசக் குழு அலுவலகத்திலேயே தனக்கான கட்சி பணியை ஆற்றி வந்த தோழர் பி. ராமமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் உடல் குன்றி காணப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அதனையடுத்து கட்சியின் பிரதேச அலுவலகமான பி. ராமமூர்த்தி நினைவகத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. செங்கொடி போற்றப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வி. பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், நிலவழகன், முருகன், உலகநாதன், ராமசாமி மற்றும் பிரதேசக்குழு உறுப்பினர்கள் பிரபுராஜ், சங்கர், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், லெனின் துரை, இடை கமிட்டி செயலாளர்கள் மற்றும் வர்க்க வெகுஜென அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மறைந்த பி. ராமமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பி. ராமமூர்த்தி மறைவையொட்டி, கட்சியின் கொடி அரைக் கம்பத்தில் மூன்று தினங்களுக்கு பறக்க விடப்படும். மேலும் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் மற்றும் வர்க்க வெகுஜென இயக்கங்களின் நிகழ்ச்சிகளும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று பிரதேச செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். மேலும் தோழர் பி. ராமமூர்த்தியின் இறுதி நிகழ்ச்சி, திங்கள் கிழமை காலை 11 மணிக்கு பவழகரஞ்சாவடி இடுகாட்டில் நடைபெற உள்ளது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com