Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, November 19, 2010

புதுச்சேரி மூர்த்திகுப்பம் கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பு

0 comments



புதுச்சேரி நவ 19
புதுச்சேரி மூர்த்திகுப்பம் கிராமத்தில் அமையவுள்ள மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மாரக்சிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர், அரசு சிறப்பு செயலாளர், மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சுற்று சூழல் துறையின் விஞ்ஞானி ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
புதுச்சேரி மாநிலம் மூர்த்திக்குப்பம் கடலோர கிராமத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க 2008 முதல் கட்டுமானப் பணிகள் நடந்துவருகிறது. மேற்படி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவது அரசும் - தனியாரும் சேர்ந்தா (அ) தனியார் நிறுவனமா என்பது தெரியவில்லை. தேங்காய்திட்டு கிராமத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைந்ததால் குருசுகுப்பம், சோலைநகர் உள்ளிட்ட பலப்பகுதிகளில் கடல் நீர்பிடிப்பு அதிகரிப்பும், தமிழகப்பகுதியான கோட்டகுப்பம், முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பும், குடியிருப்புகள் சேதமும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளை தடுத்திட தூண்டில் வளைவு வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். இதையொட்டி பாதிப்புகள் மூர்த்திக்குப்பம் மீன்பிடி துறை முகத்தால் ஏற்படுவதற்கு உள்ளது குறிததும், தேங்காய் திட்டு கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ள போது 15 கி.மீ இடைவெளியில் மற்றொறு துறைமுகம் தேவையா என்பது குறித்து தெளிவுபடுத்தாமல் - வெளிப்படைத் தன்மையில்லாமல் மீன் பிடித் துறைமுகப் பணியை துவக்குவது ஏற்புடையதல்ல. மக்கள் வாழ்வுரிமையை பலவந்தமாக பறிக்கும் அணுகுமுறையாகும்.
மூர்த்திக்குப்பம் மீன்பிடித் துறை முகத்தால் மீனவ மக்கள், விவசாய மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். நிலத்தடி நீர் மாசுபடும், சுற்றுச்சூழல் பெரும் சேதாரத்திற்கும் உள்ளாகம். மீன்பிடித் துறைமுகம் அமையப்போவதால் ஏற்படும் பயனை விடவும் பல மடங்கு ஈடுசெய்ய முடியாத நீடித்த – சரிசெய்ய இயலாத கடும் பாதிப்பு மக்களுக்கு ஏற்படும் என அறிவியல் அமைப்புகள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. இத்தகைய ஆபத்துகள் குறித்து மாநில அரசு உண்மைத் தன்மையை ஓளிவு மறைவு இல்லாமல் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
ஆகவே புதுச்சேரி அரசு மூர்த்திக்குப்பத்தில அமையப்போகும் மீன்பிடித் துறைமுகம் தொடர்பான தொழில் நுட்பசாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்திட வல்லுநர்கள் கொண்ட குழு அமைத்திட வேண்டும். அறிவியல் அமைப்புகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அளித்துள்ள புகார்கள் - பாதிப்புகள்குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிட உண்மை தன்மையை வெளியிடவும் வேண்டும். அதுவரையில் மீன்பிடித்துறைமுக கட்டுமானப் பணியை நிறுத்தி வைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கடசி வலியுறுத்துகிறது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்திடவும் மாநில அரசு முன்வரவேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com