புதுச்சேரி ஏப் 11
இலாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மார்ச்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலமோகனனுக்கு இறுதி கட்ட பிரச்சாரத்தில் மக்கள் அமோக வரவேற்ப்பு அளித்தனர்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.அதனையொட்டி அரசியல் கட்சிகளின் இறுதி கட்ட பிரச்சாரம் திங்கள் கிழமை நடைபெற்றது.இலாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலமோகனனுக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சார ஊர்வலம் பெத்து செட்டிபேட்டையிலிருந்து துவங்கியது. கட்சியின் வேட்பாளர் பாலமோகனன், பிரதேச செயலாளர் வி.பெருமாள்,தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,கே.முருகன்,நிலவழகன்,உலகநாதன், ஆகியோர் திறந்த வாகணத்தில் வீதி வீதியாக வாக்குகள் சேகரித்தனர்.
நெசவாளர் நகர்,மஹாவீரர் நகர்,சாந்தி நகர்,அசோக்நகர்,குறிஞ்சி நகர்,கவிகுயில் வீதி,ஜீவானந்தம்புரம்,லாஸ்பேட்,மடுவுபேட்,சலவையார்நகர்,குமரன் நகர்,ஆகிய நான்கு வார்டுக்கு உட்பட்ட மக்களை பிரச்சார வேன் மூலம் வீதி வீதியாக சந்தித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர்.அப்போது மக்கள் வீட்டு வாசலில் இருந்த படியே பாலமோகனனுக்கு கைகளை அசைத்தபடி வரவேற்ப்பு கொடுத்தனர். இப்பிரச்சார ஊர்வலத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் ஊழியர்கள், பெண்கள் பொதுமக்கள் தங்கள் இரு சக்கர மோட்டார் வாகனங்களுடன் பங்கேற்றனர்.