

புதுச்சேரி செப்-24
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீவிரபடுத்தும் என்று பி.சம்பத் பேசினார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி முதல் மாநில மாநாடு நவீனா கார்டன் திருமான நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு தலைக்குழு உறுப்பினர்கள் எல்.கலிவரதன்,தலித்சுப்பையா,பூ.மூர்த்தி,கே.முருகன்,எல்.லெயோன்,ஆனந்தராசன்,என்.வத்சலா ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.மாநாட்டு வரவேற்ப்புக்குழு தலைவர் வி.பெருமாள் பிரதிநிதிகளையும்,தலைவர்களையும் வரவேற்று பேசினார். தீண்டாமை ஒழிப்பு +முன்னணியின் தமிழ்மாநில தலைவர் பி.சம்பத் பட்டியலின துணைத்திட்ட நிதி கோரிக்கை சாசனத்தை வெளியிட்டும் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில்,
எங்கெல்லாம் தலித் மக்கள் பாதிக்கபடுகிறார்களோ அங்கெல்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலைநாட்டி வருகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்களை முன்னணி நடத்தி வந்துள்ளது.சிதம்பரத்தில் நந்தனார் கோவிலில் நடந்து சென்ற பாதையை இன்னும் ஆதிக்கசாதியினர் அடைத்து வைத்துள்ளனர்.தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நந்தனாரை ஆதிக்கசாதியினர் தீயில் எரித்துவிட்டு அவர் ஜோதியில் கலந்து விட்டார் என்று கூறினார்கள்.ஆதிக்கசாதியினரால் மூடப்பட்ட நந்தனார் சென்ற கோவில் பாதையை திறக்ககோரி போராட்டம் நடத்திவரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அப்பாதையை ஆட்சியாளர்கள் திறக்க வில்லை என்றால் இடித்து நொருக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
சாதிய சமூகத்தில் இந்திய சமூகம் சிக்கியுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சித்தர்கள் வாழ்ந்த தமிழகத்தில் அப்போதே சாதிக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்தார்கள்.இந்திய நாடு விடுதலைக்கு பிறகு நம்மை ஆண்ட காங்கிர° கட்சியும் பெரியார் வழியில் வந்த திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் இன்னும் சாதிய கொடுமைகள் நடந்துதான் வருகிறது. தாழ்த்தபட்ட மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும் சாதிய ஒடுக்குமுறைகளுக்குள்ளாவது இன்னும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. எனவே சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னேடுத்து செல்லும் என்று பேசினார்.
மாநாட்டின் அறிக்கை அமைப்பாளர் ஜி.ராமசாமி வாசித்தார்.பொருளாளர் என்.கொளஞ்சியப்பன் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். பல்வேறு அமைப்புகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
Read more...