Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, September 30, 2011

பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையை கண்டித்து

0 comments

புதுச்சேரி செப்-18
பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அனுசரிக்க சென்ற தலித் மக்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தியதை கண்டித்தும்.துப்பாக்கிசூடு நடத்த காரணமான உயர் காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும். பலியான 7 தலித் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்ககோரியும் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரிகாந்தி வீதி-நேருவீதி சந்திப்பில் நடந்த இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,தீன்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவை தலைவர் ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,இடைகமிட்டி செயலாளர்கள் உலகநாதன்,முருகையன்,லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர் மணிபாலன்,மாதர் சங்க தலைவர் தெய்வானை,செயலாளர் சத்தியா உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com