

மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக் குழு சார்பில் அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம் லா°பேட்டையில் நடைப்பெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு சிபிஎம் செயற்க்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் உழவர்கரை கமிட்டி செயலாளர் லெனின் துறை வரவேற்புரை ஆற்றினார். நகர கமிட்டி செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். சிபிஎம் தமிழ்மாநில செயற்க்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், நாட்டு மக்களை விலைவாசி உயர்வில் சிக்க வைத்துள்ள காங்கிர° கட்சி ஆந்திராவைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் இரண்டாக பிளவு ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனையை மறந்து, தங்களின் பதவிக்காக சண்டைப் போட்டுக் கொள்ளும் நிலை தான் தற்போது புதுச்சேரியில் ஏற்பட்டுள்ளது.
126 ஆம் ஆண்டு விழாக் கொண்டாடும் காங்கிர° கட்சி, பல மாநிலங்களில் மக்களால் தோற்கடிக்கப் பட்டு வருகிறது. இந்தநிலை புதுச்சேரியிலும் விரைவில் ஏற்படும் என்றார். அன்றாடம் மூட்டைத் தூக்கம் தொழிலாளிக்கு தெரிகின்ற விலைவாசி உயர்வு, ஏன் உலக வங்கியில் பணியாற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார். தற்போது ஊழலில் சிக்கியுள்ள காங்கிர° - திமுக °பெக்ட்ரம் அலைக்கற்று ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து ஏன் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க முன் வரவில்லை. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சிகளை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றார். முன்னதாக கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள், மாநில காங்கிர° ஆட்சியின் அவல நிலையை எடுத்துரைத்து பேசினார். செயற்க்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், நிலவழகன், முருகன், கலிவரதன், ராமசாமி, உலகநாதன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...