Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, January 5, 2011

பொய் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையை கண்டித்து

0 comments

புதுச்சேரி ஜன 3
புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையை கண்டித்து சிஜடியூ உள்ளிட்ட அனைத்து ஆட்டோ சங்கங்களின் சார்பில் நேருவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை ஏர்போர்ட்டில் உளவு பிரிவு அதிகாரியாக பணியாற்றுபவர் ஈ°வர் சந்திரபெகரா. இவர் குடும்பத்துடன் டிசம்பர் 30ல் அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றிப் பார்ப்பதற்கு புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து ஆட்டோ மூலம் ஆசிரமம் செல்வதற்கு பாக்குமுடையான் பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் ஆட்டோவை சவாரி பேசியுள்ளார். ரூ. 60க்கு சவாரி பேசி ஆசிரமம் சென்று இறங்கிய ஈ°வர் சந்திரபெகரா ரூபாய் 50 ஐ மட்டும் கொடுத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் மீதி தொகை ரூபாய் 10ஐ கேட்டதற்கு தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்ததில் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் மீதே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் உண்மை நிலையை விசாரிக்காமல் வெங்கடேசன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ஈ°வர் சந்திரபெகரா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆசிரமத்திற்கு துணை போகும் காவல்துறையைக் கண்டித்து இப்போராட்டம் நடைப்பெற்றது. போராட்டத்திற்கு சிஐடியூ ஆட்டோ சங்க பிரதேசத் தலைவர் ராஜாங்கம் தலைமைத் தாங்கினார். சங்கத்தின் கவுரவத் தலைவர் முருகன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் நிலவழகன், ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனுவாசன் மற்றும் அனைத்து ஆட்டோ சங்கத் தலைவர்கள் சந்திரசேகர், மணிவண்ணன், ஏழுமலை, பிராக்ளின், வேலு, மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஏஐடியூசி, தொமுச, ஏடியூ, புமாஆச, காமராஜர் ஆட்டோ சங்கங்களைச் சேர்ந்த திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com