
புதுச்சேரி செப்-27
நடைபாதை வியாபாரிகளுக்கான தேசிய கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசை சிஜடியு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுவை நகர நடைபாதை மற்றும் சன்டே மார்க்கெட் சிஜடியு வியாபாரிகள் சங்கத்தின் பேரவைக்கூட்டம் சங்க தலைவர் டி.எஸ் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இப்பேரவையில் சங்கத்தின் கவுரவத் தவைவர் தா.முருகன்,சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,இணைசெயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.சங்கத்தின் செயலாளர் அழகர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பாலாஜி,வடிவேல் உள்ளிட்ட திரளான நடைபாதை வியாபாரிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு கடந்த 2004 ஆண்டு நடைபாதைவியாபாரிகளை பாதுகாக்க தேசிய கொள்கையை வகுத்துள்ளது.அதில் இவ்வியாபாரிகளுக்கு மின்சாரம்,குடிநீர் வசதி உள்ளிட்ட அடிபடை வசதிகளை நிறைவேற்றி பாதுகாப்பு அளிக்க வேண்டும்.தொழிற்சங்க பிரதிநிதிகள்,காவல்துறை,நகராட்சி,வங்கி அதிகாரிகள் கொண்ட அமைப்புக்குழு ஏற்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது.இந்த கொள்கையின் சுற்றரிக்கையை புதுச்சேரி தலைமை செயலாளருக்கு அனுப்பட்டுள்ளது. எனவே தேசிய கொள்கையின் பரிந்துரைகளை புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளை கைவிட வேண்டும் .முறைசார தொழிலாளர்களுக்கு தீபாவளி பன்டிகைக்கான ஊக்க தொகை ரூ.2ஆயிரம் வழங்க வேண்டும்.சிஜடியு சார்பில் அக்டோபர் 11ல் சட்டமன்றம் நோக்கி நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் இப்பேரவையில் நிரைவேற்றப்பட்டது.