Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, November 9, 2011

புதுச்சேரி பாகூர் கொம்யூன் குழுவின் புதிய அலுவலக திறப்பு விழா

0 comments

புதுச்சேரி அக்-31
ஊழலில் திலைத்துள்ள காங்கிரஸ்-பாஜக விற்கு மாற்றாக மார்க்சி°ட் கட்சி மக்களின் துருவ நட்சத்திரமாக திகழ்கிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பாகூர் கொம்யூன் குழுவின் புதிய அலுவலக திறப்பு விழா பகூரில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கொம்யூன் குழு செயலாளர் சீ.பத்மநாபன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.பாகூர் சரஸ்வதி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள எஸ்.வீரபத்திரன் நினைவு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில்,
புதுச்சேரின் நெற்களஞ்சியமாக விலங்கும் பாகூரில் இன்றைக்கு உழைக்கும் மக்களுக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் மார்க்சி°ட் கட்சியின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் ,ஆதர்ஸ் குடியிருப்பு,அலைகற்று ஊழல் என அடுக்கடுக்கான ஊழலில் சிக்கியுள்ள மத்திய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும்,பாஜகவின் கர்நாடக முன்னால் முதல்வர் எடியூரப்பா தனக்கு சொத்து சேர்த்த வழக்கில் இன்றைக்கு சிறைக்கு தள்ளாப்பட்டுள்ளார்.ஆனால் அக்கட்சியின் தலைவர் அத்வானி ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை நடத்திவருவது யாரை ஏமாற்றுவதற்காக.இந்த இரண்டு கட்சிகளுக்கு மத்தியில் மார்க்சி°ட் கட்சி துருவ நட்சத்திரமாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
காங்கிர° கட்சியின் தவறான பொருளாதாரகொள்கையால் நாட்டில் இரண்டு லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்ட செய்தி இன்றைக்கு பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.இதில் பெரும்பாலும் விவசாயிகள் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி உள்ளது.எனவே தான் விவசாய நிலங்களை விலைநிலங்களாக மாற்றபடுவதை தடுக்க வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சி வலியுறுத்திவருகிறது.மேலும் சமிபத்தில் தமிழக முதல்வரை சந்தித்து தொழில் கொள்கைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது அரசின் சார்பில் நிலபயண்பாடு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.அதேப்போல் புதுச்சேரி அரசு நில பயண்பாட்டு கொள்கையை உருவாக்க வேண்டும்.இல்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சி அத்தகைய கொள்கையை உறுவாக்கும் என்றார்.
விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் விவசாயிகள்,தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே மத்திய ஆட்சியாளர்களின் தவறான கொள்கையை கண்டித்து நவம்பர் 1முதல் 7வரை நாடு தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.இவ்வியக்கத்தில் புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார்.
எண்.குணசேகரன்
கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைவர்கள் படத்தை திறந்து வைத்து பேசுகையில்,பல கட்சிகளின் தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்று இருப்பது மார்க்சி°ட் கட்சிக்கு தனி மரியாதை உள்ளது என்பதை எடுத்து காட்டுகிறது.இந்த நிலை தமிழகத்தில் பார்க்க முடியாது.பாகூரில் பலதரப்பட்ட மக்களிடமும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது.மக்கள் நலனை பாதுகாக்க போர் வீரரை போலவும், விவசாயிகளின் தகவல் சுரங்கமாகவும் இவ்அலுவலகம் செயல்படும்.
இத்திறப்பு விழாவில் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,புதுச்சேரி மின்சாரதுறை அமைச்சர் டி.தியாகராஜன்,முன்னால் அமைச்சர் வெங்கடசாமி,கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,கலிவரதன்,ராஜாங்கம்,ராமசாமி,முருகன், ராமச்சந்திரன்,உலகநாதன், உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்களும் பொதுமக்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com