

புதுச்சேரி,நவ-8
விலைவாசி உயர்வுக்கேற்றவாறு குறைந்த பட்ச ஊதியம் ரூ.10ஆயிரம் வழங்க கோரி சிஜடியு,ஏஜடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் ஏழு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நிரந்தர வேலையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிப்பதை கைவிட்டு நிரந்த தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும்.போனஸ்,வருங்கால வைப்பு நிதிக்கு ஊதிய உச்சவரம்பு நிர்ணயிப்பதை ரத்து செய்யபட வேண்டும்.அனைத்த தரப்பட்டவர்களுக்கும் உறுதி செய்யப்பட்ட ஓப்வூதியம் வழங்க வேண்டும்.விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும்.உயர்த்தியுள்ள பெட்ரோல் விலையை திரும்ப பெற வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் நடந்த மறியல் போராட்டத்தில் சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஏஜடியுசி மாநிலபொதுசெயலாளர் அபிஷேகம்,ஏஜசிசிடியு நிர்வாகி சங்கரன்,எல்பிஎப் நிர்வாகி ஆறுமுகம்,பிஎம்எஸ் நிர்வாகி இளங்கோ ஆயியோர் முன்னிலை வகித்தனர்.சிஜடியு தமிழ்மாநில செயலாளர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.சிபிஜ மாநில செயலாளர் நாரா.கலைநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் நகரசெயலாளர் பிரபுராஜ் உள்ளிட்ட 65பெண்கள் உட்பட 270 பேர் மறியலில் ஈடுபட்டவர்களை போலிஸார் கைது செய்தனர்.முன்னதாக பெரியார் சிலை எதிரே இருந்து ஊர்வலமாக வந்து கைதானர்கள்.
இராஜிவ்காந்தி சதுக்கம்
இராஜிவ்காந்தி சதுக்கத்தில் நடந்த மறியல்போராட்டத்தில் சிபிஜ தேசிய குழு உறுப்பினர் விசுவநாதன்,நகர செயலாளர் சேதுசெல்வம்,சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை உள்ளிட்ட 63பெண்கள் உட்பட 230பேரை போலிஸார் கைது செய்தனர்.இதேபோல் வில்லியனூர்,பாகூர்,கண்ணிகோயில்,அரியாங்குப்பம்,கரிகலாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடந்த மறியல்போராட்டத்தில் சிஜடியு நிர்வாகிகள் ராமசாமி,நிலவழகன்,உலகநாதன்,குணசேகரன்,சிவக்குமார்,பத்மநாபன்,தமிழ்செல்வன்,முருகையன் ஏஜடியுசி நிர்வாகிகள் கீதநாதன்,ராமமூர்த்தி,யுடியுசி தலைவர் லெனின்,டியுசிசி நிர்வாகி முத்து உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானர்கள்.இப்போராட்த்தில் ஜஎன்டியுசி கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.