புதுச்சேரி,அக்-8
புதுச்சேரி அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ஜனவரி 15 தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று இறுதி கெடுவிதிப்பு.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அத்தேர்தலுக்கு பிறகு 38 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் பேரில் உள்ளாட்சி தேர்தல் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மூன்று கட்டங்களாக நடைப்பெற்றது.அதன் படி தேர்ந்தெடுக்கப்பட்டோர் பதவி காலம் கடந்த 2011 ஜூலை மாதம் முடிவடைந்ததை யொட்டி மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை.அதனை தொடர்ந்து மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சார்பில் 29.7.2011 ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தல் நடத்தகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் 2012 பிப்ரவரி 22தேதிக்குள் (6மாதத்திற்குள்) தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.இக்காலகெடு முடியும் இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அம்மனுவில் தேர்தல் ஆனையர் நியமிக்கபடவில்லை,வாக்காளர் தேர்வு சரிபார்க்கவேண்டும் எனவே மேலும் 6 மாத கால அவகாசம் அரசு சார்பில் கேட்கப்பட்டது.இம்மனு மீதான விசாரணை முடிவடைந்து கடந்த 15.3.2012 மேலும் 6 மாதகால அவகாசம் அளித்த நீதிபதிகள் தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

புதுச்சேரி அரசின் மனு நிராகரிப்பு
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தலை நடத்தாத புதுச்சேரி அரசு மிக தாமதமாக வாக்காளர் சரிபார்க்கும் பணியை தொடங்கியது.மேலும் புதுச்சேரி அரசு சார்பில் தேர்தலை நடத்த 5மாத கால அவகாசம் வேண்டும் என்று செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்தது.இந்நிலையில் திங்களன்று (அக்-8) தலைமை நீதிபதி இக்பால்,நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் அரசு தாக்கல் செய்த மனுமீதான விசாரணை நடைபெற்றது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகேசன் உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பணியும்,வாக்காளர் சரிபார்க்கும் பணியும் நடைபெற்று கொண்டு இருக்கிறது எனவே மேலும் 5 மாதகால அவகாசம் வேண்டும் என்று வாதிட்டார்.உடனே மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யு ஆஜராகி வாதாடுகையில் ஏற்கனவே இரண்டு முறை 6மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.அப்போதும் தேர்தல் நடத்தாமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்கின்றனர். எனவே கால அவகாசம் வழங்ககூடாது என்று வாதிட்டார்.இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் இக்பால்,சிவஞானம் ஆகியோர் கொண்ட பென்ச் புதுச்சேரி அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு,உள்ளாட்சி தேர்தலை 2013 ஜனவரி 15 ஆம்தேதிக்குள் நடத்தி முடித்தி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று இறுதி உத்தரவு பிறபித்தனர்.
மக்களுக்கு கிடைத்த வெற்றி
இத்தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கூறுகையில்,இத்தீர்ப்பு ஜனநாயகத்திற்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி.நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து மாநில அரசு உடனடியாக தேர்தலை நடத்தி அனைத்து முடிவுகளையும் அறிவிக்க வேண்டும் என பெருமாள் கேட்டுகொண்டுள்ளார்.