புதுச்சேரி,அக்-10
இண்டேன் லாரி ஓட்டுநரை தாக்கிய சமூக குற்றவாளி மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
சிஐடியு இண்டேன் லாரி ஓட்டுநர்கள் சங்கத்தின் புதுச்சேரி கௌரவ தலைவர் குணசேகரன் வில்லியனுhர் காவல் நிலைய ஆய்வாளருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரி ஒதியம்பட்டு அடுத்துள்ள திருக்காஞ்சியில் இயங்கிவரும இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை இயங்கிவருகிறது.எரிவாயு நிரப்பட்ட சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்று ஏஜென்சிகளின் குடோனுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளைச் 50க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் செய்துவருகின்றனர்.சம்பவத்தன்று இப்பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநர் டி.முருகன் என்பவரை ஒதியம்பட்டு அருகே சமூக விரேத சக்திகள் வழிமறித்து தாக்கியுள்ளனர்.மேலும் முருகன் வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயைப் பறித்து கொண்டு மிரட்டியுள்ளனர்.ஏற்கனவே லாரியின் கண்ணாடிகளை உடைப்பது,பணத்தை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.இந்த தாக்குதலில் ஈடுபட்ட சமூகவிரோத சக்திகளை உடணடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு இன்டேன் லாரி ஓட்டுநர்கள் சங்கம் கேட்டுகொள்கிறது.
இதே நிலை நீடீத்தால் லாரி ஓட்டுநர்களின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.இவ்வாறு வில்லியனுhர் காவல்நிலைய ஆய்வாளருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி,அக்-10
சிஐடியு மினிலோடு கேரியர் சங்கத்தின் புதிய கிளை உதயம்.
புதுச்சேரி தவளகுப்பத்தில் சிஐடியு புதுச்சேரி பிரதேச மினிலோடு கேரியர் சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.சங்கத்தின் கிளைத்தலைவர் ரவி தலைமை தாங்கினார்.கிளைசெயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.சங்கத்தின் கொடியை சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் ஏற்றிவைத்தார்.சிஐடியு ஆட்டோ சங்க கவுரவத்தலைவர் தா.முருகன் சங்கத்தின் புதிய பெயர்பலகையை திறந்து வைத்து பேசினார்.மினிலோடு கேரியர் சங்கத்தின் பிரதேச செயலாளர் மதிவாணன்,சிஐடியு மாவட்ட பொருளாளர் மது,ஆட்டோ சங்க நிர்வாகிகள் சீனிவாசன்,சேகர் மற்றும் மாகலிங்கம்,சுதாகர்,ரவிந்தர்,விஸ்வநாதன் உள்ளிட்ட திரளான மினிலோடு கேரியர் ஓட்டுநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.