புதுச்சேரி,ஆக-18
இலாஸ்பேட்டை கொல்லிமேடு மைதானத்தை சிறுவர் விளையாட்டு மைதானமாக அமைத்து கொடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி இலாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பெத்திசெட்டிப்பேட்டையில் உள்ள கொல்லிமேடு மைதானத்தை போலியாக பத்திரம் செய்து சில தனிநபர்கள் பிளாட் போட முயற்சிப்பதை கண்டித்தும்,அவ்விடத்தை புதுச்சேரி அரசு கையகப்படுத்தி சிறுவர் விளையாட்டு பூங்காவாகவும்,விளையாட்டு மைதானமாகவும் அமைத்து தரக்கோரி இப்போராட்டம் நடைப்பெற்றது.
பெத்திசெட்டிப்பேட்டையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் முருகன்,ராஜாங்கம்,உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை,சிஐடியு உடல் உழைப்போர் சங்கத்தின் நிர்வாகிகள் ராமசாமி,குமார்,டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சரவணன்,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து மற்றும் குணசேகரன்,பாஸ்கர்,செல்வம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள் இப்போராட்டத்தில் திரளான வாலிபர்கள்,அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.