புதுச்சேரி,ஜுலை-19
மின்சார கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி வாயில் கருப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
மின்சார கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி வாயில் கருப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
300கோடிக்கு மேல் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.பொதுவினியோக முறையை சீர்குலைக்கும் உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடி திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தை 100சதவீதம் முறையாக அமல்படுத்த வேண்டும்.தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.நடைபெறும் சட்டமன்றக்கூட்டத்தில் மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னூரிமை கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்றம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் சுமதி,ராஜாங்கங்,நிலவழகன்,கலிவரதன்,ராமசாமி,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் சரவணன்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,லெனின்துரை,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக பழைய பேரூந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர்.
