Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, September 5, 2013

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கு புதிய பொறுப்புகளை வழங்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்.

0 comments
புதுச்சேரி,செப்-3
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கு புதிய பொறுப்புகளை வழங்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு,

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழம் இந்திய பல்கலைக்கழகங்களில் முன்னணி கல்வி நிறுவனமாக இயங்கிவருகிறுது.புதுச்சேரி பல்கலைக்கழத்தில் 2002 நிர்வாக இயல்துறையில் பேராசிரியாக சேர்ந்த டாக்டர் அரிகரன் 2008ல் கல்வியாளர் பயிற்சி கல்லூரியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் வல்லுநர் குழுவின் உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.அப்போது சென்னையைச் சேர்ந்த ஜேஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி துவங்கிட முறைகேடான வழிகளில் அனுமதியளிக்க பரிந்துரை செய்துள்ளார்.அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் பல விதிமுறைகளை கடுமையாக மீறி அனுமதிவழங்ப்பட்டுள்ளது.அதற்கு மேற்படி பேராசிரியர் டாக்டர் அரிகரன் முககியப் பங்காற்றியுள்ளார்.இது குறித்து புகார் மீது விசாரணை மேற்கொண்ட மத்திய புலனாய்வுக்குழு டாக்டர் அரிகரன் மற்றும் சிலர் மீது கிரிமனல் வழக்கு பதிவு செய்துள்ளது.
டாக்டர் அரிகரன் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அனுமதி கோரியுள்ளது.முந்தைய துணைவேந்தர் தரினும்,தற்போதைய துணைவேந்தரக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் சந்திராகிருஷ்ணமூர்த்தி அவர்களும் அனுமதியளிக்கவில்லை.மாறாக பேராசிரியர் டாக்டர் அரிகரனுக்கு பல்கலைக்கழக வளர்ச்சிக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வழங்கி கவுரத்துள்ளது கண்டனத்திற்குறியதாகும்.ஊழல்,கிரிமினல் குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கு புதிய பதவிகளை அளிப்பதன் மூலம் பல்கலைக்கழக துனைவேந்தரின் செயல்பாடு ஆழ்ந்த சந்தேகங்களை எழுப்புகிறது.
எனவே டாக்டர் அரிகரன் மீது சிபிஐ வழக்கு தொடர அனுமதி  வழங்கிடவும்,அவருக்கு அளித்த வளர்ச்சிக் கவுன்சில் டீன் பொறுப்பை ரத்துசெய்திட வேண்டும்.நிர்வாகத்திலும்,கல்வி வளாகத்திலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திட மாணவர் பேரவைத் தேர்தலை நடத்திடவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பிரச்சனை மீது விரைவான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வாயில் முன்பு மக்களையும்,மாணவர்களையும் திரட்டி போராட்டத்தை நடத்தும் என எச்சரிக்கிறது.
இவ்வாறு பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com