Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, December 2, 2011

அமைப்புசாரா தொழிலாளர்களை அலட்சியப்படுத்தும் புதுச்சேரி அரசு.

0 comments

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு புதுச்சேரி விடுதலை பெற்றது.அதனால் இந்த பிரதேசம் மத்திய அரசின் மேற்பார்வையில் யூனியன் பிரதேசமாக இன்றுவரை இருந்து வருகிறது.மத்திய அரசின் நிதி உதவி அதிகம் இருந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் எந்த வித கனரக தொழிற்சாலைகள் ஏற்படுத்த வில்லை இருந்த ரோடியர்,சுதேசி,பாரதி என மூன்று பஞ்சாலைகளில் மூன்று ஷிப்ட்டுகளாக பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இதன் மூலம் புதுச்சேரியின் பொருளாதாரம் அதைச்சுற்றி சுயதொழில்களும் வளர்ந்து வந்தன உலகமயம், தாராளமயம் என்ற பெயரால் பஞ்சாலைகளில் இன்று சில நுhறு தொழிலாளர்களே வேலை செய்கிற அவள நிலை உள்ளது. இந்த பஞ்சாலைகளை நவினப்படுத்தி அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் எண்ணம் மத்திய மாநில அரசுகளுக்கு இல்லை. மறுபுறம் புதுச்சேரியில் விவசாய விலை நிலங்கள் அழிக்கப்பட்டு ரியல் எ°டேட், வீட்டு மனை என்ற பெயரால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விட்டன. சின்ன தஞ்சாவூர் என்று அழைக்கப்பட்ட பாகூர் ,கிருமாம்பாக்கம் போன்ற மூன்று போகங்கள் விலையகூடிய நிலம் உள்ள பகுதிகள் இன்றைக்கு வீட்டு மனைகளாக மாற்றபடுகிறது.
அரிசிக்கு பக்கத்து மாநிலத்தில் கையேந்துகின்ற புதுச்சேரி அரசு இந்த விவசாய்களை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை.நில பாதுகாப்பு சட்டத்தை அமுலபடுத்தி விவசாய விலை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவும், மானியவிலையில் உரங்கள் கொடுத்து இந்த விவசாய்களை பாதுகாக்க புதுச்சேரி அரசு தவறிவிட்டது.விவசாயம்,பஞ்சாலை போன்ற தொழில்கள் அழிக்கப்பட்டதால் இந்த தொழிலாளர்கள் எல்லாம் இன்று அமைப்பு சாரா தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.இந்த தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை சொல்லி மாலாது.காலை 9மணி முதல் இரவு 10 மணிவரை கடைகளில் வேலை செய்யும் இத்தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை வாரவிடுமுறையும் இல்லை சுதந்திரதினம் போன்ற நாட்களிலுல்கூட இவர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுகிறது. 50வயதானல் வீட்டிற்கு செல்ல வேண்டியது தான். எத்தனை ஆண்டுகள் வேலை செய்து இருந்தாலும் எந்த பண உதவியும் கிடையாது.புதுச்சேரியின் தொழிலாளர்துறை ஒன்று இருக்கிறது வாரவிடுமுறை இல்லை என்று சொன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்கமால் அந்த கடை உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கின்றது . இந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டுவது கடினம் தொழிற்சங்கம் என்று கேள்விபட்ட உடன் அந்த தொழிலாளிக்கு மறுநாள் வேலை கிடையாது.சுயமாக தொழில் செய்யும் நடைபாதை வியாபாரிகள், தெருவில் கூவி விற்கிற தொழிலாளிகள்,ஆட்டோ தொழிலாளர்கள் இவர்களின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது.காவல்துறை இவர்களை நாய்களை விட கேவலமாக நடத்துகிறது அன்னியர்களைப்போல இங்கே கடைபோடதே, ஆட்டோவை அங்கே நிறுத்தாதே என்று சுயமாக தொழில் செய்பவர்களை தொழில் செய்யவிடாமல் தடுத்து வருகிறது காவல்துறை.
இந்த தொழிலாளர்கள் சிஜடியு சங்கம் அமைத்து தங்களை பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள்.புதுச்சேரியில் பெரும்பகுதியான அமைப்புசாரா தொழிலாளர்களை பாதுகாக்க இந்த அரசும் தொழிலாளர் நல சட்டங்களையும் அமுலபடுத்த வில்லை. கேரளாவைப்போல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் கேட்டு போராடியதின் விலைவாக 2001ஆம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலச்சங்கம் ஏற்படுத்தப்பட்டது.இன்று 16 வகையான தொழில்செய்யகூடியவர்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.வீட்டு வேலை செய்யும் பெண்கள் நலச்சங்கத்தில் சேர்க்கபட வேண்டும் என்று சிஜடியு சங்கம் வீட்டு வேலை செய்யும் பெண்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் புதுச்சேரி அரசு அவர்களை நலச்சங்கத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து இன்று வரை அமல்படுத்தாமல் இருக்கிறது.நலச்சங்கத்தில் 62 வகையான தொழில்கள் சேர்க்கபடவேண்டும் என்று சிஜடியு தொடர்ந்து போராடி வருகிறது.நலச்சங்கதின் மூலம் இன்று சிறிதலவு நிவாரணம் பெறுகிறார்கள் கல்வி உதவிதொகை, மரணகால நிதி, குழந்தை பிறந்தால் நிதிஉதவி என்று கிடைக்கிறது.சிஜடியு சங்கத்தின் போராட்டம் மூலம் தீபாவளி ஊக்கதொகை ரூ.300ம் பிறகு ரூ.400, தற்போது ரூ.500 என பெற்றுவருகிறோம்.நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி கூடுதல் நீதி ஒதுக்க வேண்டும் என்று சிஜடியு தலைமையில் புதுவை பிரதேச உடல் உழைப்போர் சங்கம் போராடி வருகிறது.அமைப்பு சாரா நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளிக்கு வங்கி கடன்,சிகப்பு ரேஷன் கார்டு வழங்கவேண்டும்.ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாண்ய விலையில் பெட்ரோல் வழங்கவேண்டும் என தொடர்ச்சியாக போராடிவரும் சிஜடியு சங்கத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி 20வது மாநாட்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

இவன்
கே.குமார்(பொருளாளர்)
புதுவை பிரதேச உடல்உழைப்போர் சங்கம் (சிஜடியு)
புதுச்சேரி

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com