Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, December 28, 2010

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி

0 comments

புதுச்சேரி டிச 28
சாமிபிள்ளை தோட்டதில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சிபிஎம்,சிபிஜ,அதிமுக ஆகிய கட்சிகள் சார்பில் சிவாஜி சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லெனின்நகர்,தவமணிநகர்,உள்ளிட்ட உள்புறச்சாலைகளை சீரமைக்ககோரியும்.தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புரப்படுத்த வேண்டும்.விடுபட்ட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்.தெரு விலக்குகள் எரிய நடவடிக்கை =எடுக்க வேண்டும்.என்பன கோரிக்கைகளை வலியுருத்தி இப்போரட்டம் நடைபெற்றது.
இப்போரட்டத்திர்க்கு சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை,சிபிஜ மாநிலக்குழு உறுப்பினர் சரவணன்,அதிமுக கிளை செயலாளர் சண்முகம் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,சட்டமன்ற உறுப்பினர் ஆர்.விசுவநாதன்,அதிமுக =செயலர் அன்பானந்தம், ஆகியோர் பேசினார்கள். இப்போரட்டத்தி திரளானோர் பங்கேற்றனர்.
Read more...

கொடிமரத்தை திருடி சென்றவர்கள் மீது வழக்கு பதிவு

0 comments

புதுச்சேரி டிச 28
மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் கொடிமரத்தை திருடி சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யகோரி முத்தியாள் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் கொடிமரம் முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில் அமைக்கப்பட்டு இருந்ததை சில மர்மநபர்கள் பிடுங்கி எடுத்து சென்றுள்ளனர்.இச்சம்பவத்தை கண்டித்தும் திருடிசென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யகோரி இப்போரட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் கமிட்டி உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகர கமிட்டி பொறுப்பு சயலாளர் மதிவானன்,பிரதேச குழு உறுப்பினர் பிரபுராஜ்,கிளைசெயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கமிட்டி உறுப்பினர் கலியமூர்த்தி, உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக புதிய கொடிமரத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
Read more...

பெண்கள் நினைத்தாள் எதுவும் செய்ய முடியும்

0 comments


புதுச்சேரி =டிச 26
மத்திய மாநில அரசுகளின் விலைவாசி உயர்வால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் குற்றம் சாட்டினார்.
சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் சார்பில் விலை வாசி உயர்வை எதிர்த்து புதுச்சேரி சாரம் கீர்த்தி மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்திற்க்கு இயக்கத்தின் தலைவர் அன்பரசி ஜூலியட் தலைமை தாங்கினார்.செயலாளர் மாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.சமம் இயக்க நிர்வாகிகள் சந்திரா,மலர்விழி,சந்தானலட்சுமி,வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று பேசுகையில் மத்திய அரசின் தவரான பொருளாதார கொள்கையால் நாளுக்கு நாள் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு அதிகரித்து கொண்டே இருக்கிறது.இவ்விலையேற்றத்தால் அன்றாடம் பெண்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் குடும்ப விரிசலும் ஏற்படுகிறது. எனவே நமக்கான ஆட்சி எது என்று தீர்மானிக்க வேண்டும்.பெண்கள் நினைத்தாள் எதுவும் செய்ய முடியும். என்று பேசினார்
முன்னதாக விலைவாசி உயர்வு குறித்து 50 க்கும் மேற்பட்ட பகுதியில் 2ஆயிரம் குடும்பங்களில் எடுக்க பட்ட சர்வே குறித்து இயக்கத்தின் துனை தலைவர் கலைச்செல்வி பேசினார்.புதுவை அறிவியல் இயக்க துனை தலைவர் தட்சணாமூர்த்தி மற்றும்பேராசிரியர் ஹேமலதா, ரமேஷ் ஆகியோர் பேசினார்கள்.கருத்தரங்கத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
படம் உள்ளது
Read more...
Sunday, December 19, 2010

Thousands pay last respects to Pappa Umanath

0 comments


Caption:CPI (M) Polit Bureau member and Rajya Sabha MP Brinda Karat (third from left) and Umanath (second from right), paying respects to veteran CPI (M) leader Pappa Umanath, on Saturday. Photo: R. Ashok

Members of the Communist Party of India (Marxist) and leaders of various political parties on Saturday paid respects to the veteran CPI (M) leader Pappa Umanath who passed away here on Friday.

Draped in party flag, the body of 80-year-old Pappa Umanath was kept at the CPI (M) district unit office in the city to enable general public and party functionaries to pay their homage. CPI (M) Polit Bureau member and Rajya Sabha MP Brinda Karat flew down to Tiruchi to pay respects to the departed leader who was one of the founders of the All India Democratic Women’s Association.

CPI (M) State secretary G. Ramakrishnan, party’s former State secretary N. Varadharajan, senior CPI (M) leaders T. K. Rengarajan and K. Varadharajan, party MLAs, CITU leaders and members, State Transport Minister K.N. Nehru, Tiruchi Lok Sabha MP P. Kumar, MDMK urban district secretary A. Malarmannan, AIADMK urban district secretary Manoharan, Srirangam MLA Paranjothi paid their respects to the departed leader.
Read more...

பெட்ரோல் விலை உயர்வை திரும்பபெறக்கோரி சிஜடியூ ஆட்டோ சங்கத்தின் =சார்பில் ஆட்டோவை கயிற்றால் கட்டி நூதன போரட்டம்

0 comments


புதுச்சேரி டிச 16
மத்திய காங்கிர°-திமுக அரசின் பெட்ரோல் விலை உயர்வை திரும்பபெறக்கோரி சிஜடியூ ஆட்டோ சங்கத்தின் =சார்பில் ஆட்டோவை கயிற்றால் கட்டி நூதன போரட்டம் புதுவையில் நடைபெற்றது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் மூன்று உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும் தொடர்ந்து எட்டு முறை பெட்ரோல் விலை உயர்த்தி இருப்பதை திரும்பப்பெறக் கோரியும் நூதன முறையில் இப்போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் நடந்த இப்போராட்டத்திற்கு சிஐடியூ பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். பொது செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் கௌரவத் தலைவர் த. முருகன் சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், சிஐடியூ மாவட்ட தலைவர்கள் ராமசாமி, முருகன், நிலவழகன், குணசேகரன், சிவக்குமார் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மது, மதிவாணன், சேகர், மணவாளன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆட்டோவை கயிற்றால் கட்டி இழுத்துச் சென்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
படம் உள்ளது.
Read more...

மார்க்சிய பல்கலைகழகமாக திகழ்ந்து மறைந்த பி. ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்

0 comments



புதுச்சேரி டிச 19
மார்க்சிய பல்கலைகழகமாக திகழ்ந்து மறைந்த பி. ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மார்க்சி°ட் கம்யூனி°ட் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முதுபெரும் தோழரும் புதுச்சேரி பிரதேசக் குழு உறுப்பினருமான பி. ராமமூர்த்தி படத்திறப்பு விழா நவீனா கார்டனில் நடைப்பெற்றது. இப்படத்திறப்பு விழாவிற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயற்க்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தோழர் ராமமூர்த்தியின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து பேசுகையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியில் சேர்ந்த பி. ராமமூர்த்தி நிர்வாகத்தின் பழிவாங்கல் நடவடிக்கையால் வேலையை இழந்தார். 1961 ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் தோழர் பி. சீனிவாசராவ் அறைக்கூவலுக்கு இணங்க நடந்த போராட்டத்தில் 1000 கணக்கான தோழர்கள் கைதாகி சிறைக்கு சிறைக்கு சென்றனர். பி. ராமமூர்த்தியும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றார்.
தன் வாழ்நாள் முழுவதும் கட்சி பிரசுரங்களான தீக்கதிர், மார்க்சி°ட், செம்மலர் ஆகியவை மக்களிடம் கொண்டு சென்றவர். தன் நலத்தை கருதாமல் கட்சி நலனே பெரியது என்று எண்ணிய ராமமூர்த்தி அவர்கள் உயர் சாதி குலத்தில் பிறந்தாலும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக தலித் மக்களின் விடுதலைக்காக போராடியவர். மார்க்சிய பல்கலைகழகமாக திகழ்ந்த வாழ்க்கை வரலாற்றை இளம் தலமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அவருக்கு பாடப்புத்தகம் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
குணசேகரன்
மாநிலக்குழு உறுப்பினர் பேசுகையில் ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தோடு புதுச்சேரி கமிட்டி இணைந்திருந்த போது தோழர்கள் டி.பி கோவிந்தன். கோவிந்தசாமி, வீரபத்திரன் உள்ளிட்ட தலைவர்களோடு பணியாற்றியவர் தோழா ராமமூர்த்தி. கட்சி பிரசுரங்களை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமல்லாமல் தத்துவார்த்த தளங்களிலும் விவாதம் செய்தவர். புதுச்சேரி மாநிலத்தின் கட்சியின் செய்திகளை கொண்டு செல்லும் வகையில் தனி பிரசுரம் அச்சடித்து வெளியிட வேண்டும் என்று எண்ணியவர். அவரது எண்ணப்படி மாதம் இரு முறையாவது செய்தி மடலை வெளியிட வேண்டுமென்று பிரதேசக் குழுவைக் கேட்டுக் கொண்டார்.
இப்படத்திறப்பு விழாவில் இந்திய கம்யூனி°ட் மாநில செயலாளர் நாரா. கலைநாதன், புரட்சிகர சோசலி°ட் கட்சியின் மாநில செயலாளர் லெனின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் பாவாணன், சட்டமன்ற உறுப்பினர் வி°வநாதன், கவுன்சிலர் தேவசகாயம், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஆனந்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், நிலவழகன், கலிவரதன், முருகன், உலகநாதன், ராமசாமி, ராமச்சந்திரன், மறைந்த தோழரின் சகோதரர் பி. ரங்கநாதன், ஆ. தாமோதரன் உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த சிபிஎம் முதுபெரும் தலைவர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read more...

ஊழல்களைக் கண்டித்து தெருமுனை பிரச்சாரம்

0 comments



மத்திய காங்கிர° - திமுக அரசின் °பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டி ஊழல்களைக் கண்டித்து மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
புதுச்சேரி காங்கிர° அரசு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வேட்டி சேலையினை கொள்முதல் செய்வதில் ஊழல் நடைப்பெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். °பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் நடைப்பெற்றது.
முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு கட்சியின் நகர கமிட்டி உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் தா. முருகன், செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ், கிளை செயலாளர் சரவணன் ஆகியோர் பேசினார்கள். நகர கமிட்டி செயலாளர் சீனுவாசன், கமிட்டி உறுப்பினர்கள் மதிவாணன், மது உள்ளிட்ட திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதேப்போல் சுதேசி மில் எதிரில் நடந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் பிரதேச செயலாளர் வெ. பெருமாள், சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்ற பேசினார்கள்.
படம் உள்ளது
Read more...
Wednesday, December 15, 2010

மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு அறிவித்த ரூபாய் ஆயிரமும் உடனே வழங்கக் கோரி இப்போராட்டம் நடைப்பெற்றது

0 comments
Read more...

பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி டிச 14
மழையால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 15 ஆயிரம் வழங்ககோரி மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி - காரைக்காலில் பெய்த தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரி பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு *ரூபாய் பதினைந்தாயிரமும், வீடு இழந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு அறிவித்த ரூபாய் ஆயிரமும் உடனே வழங்கக் கோரி இப்போராட்டம் நடைப்பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், பிரதேசக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, கலியன். முத்துலிங்கம், கலைச்செல்வி. சேகர், இளவரசி, சரவணன் உள்ளிட்ட கிளை செயலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் திரளாக போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...
Saturday, December 11, 2010

Rainfall Benefit scheme used for voting projection

0 comments


Here in Puducherry state Rainfall Benefit scheme used for voting projection. All MLA's are distributing application in his own and they used for Advertisement purpose.
Read more...
Monday, December 6, 2010

தோழர் பி.ராமமூர்த்தி

0 comments

தோழர் பி.ராமமூர்த்தி 1955ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலையில் பணிபுரிந்த அவர், பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் கட்சியிலும், விவசாய அரங்கத்திலும் அரும்பணியாற்றினார். 1957ம்ஆண்டு ஒன்றுபட்ட தென்னாற்க்காடு மாவட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல் மாநில அரசு கொண்டுவந்த பாதகமான நிலச்சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி ஐந்து மாத காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறையில் தன்னுடன் இருந்த சில தலித் தோழர்களுக்கு சிறையிலிருந்து விடுதலையான பின்னர் பாராட்டுவிழா நடத்தி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதால் சாதி விலக்கம் செய்யப்பட்டார். அதன் விளைவாக அவரது சகோதரி திருமணத்தில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.

புதுச்சேரி பிரதேசத்தில் 1974லிருந்து தீக்கதிர், செம்மலர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, சிந்தா, தேசாபிமானி போன்ற பத்திரிகைகளின் விற்பனை பொறுப்பை ஏற்று தனது கடைசிகாலம் வரை அதனை சிறப்புறச் செய்து வந்தார். தோழர் பி.ராமமூர்த்தி திருமணம் செய்துகொள்ளவில்லை. தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மற்றும் தனக்கு கிடைத்த கணிசமான நிதியை கட்சியின் வளர்ச்சிக்காக புதுச்சேரி பிரதேச குழுவிற்கும் விழுப்புரம் மாவட்டக்குழுவிற்கும் வழங்கியுள்ளார்.

ஒன்றுபட்ட தென்னாற்க்காடு மாவட்டத்திலும், பின்னர் புதுச்சேரி பிரதேசத்திலும் கட்சி வளர்ச்சிக்காக அர்ப்பணிபோடு செயல்பட்டவர் தோழர் பி.ராமமூர்த்தி.அவரது மறைவு மார்க்சிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்.
Read more...

டாக்டர் அம்பேத்கரின் 54 வது நினைவு தினம்

0 comments

புதுச்சேரி டிச 6
டாக்டர் அம்பேத்கரின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மார்க்சி°ட் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகம் எதிரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் தமிழ்மாநில ஜி. ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் என். குணசேகரன், பிரதேச செயற்குழு உறுப்பினர் எல். கலிவரதன், புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி, நிர்வாகி கொளஞ்சியப்பன், அருந்ததியர் சங்க நிர்வாகிகள் தவமணி, வாழுமுனி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆர். வி°வநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
(படம் உள்ளது)
Read more...

தோழர் பி. ராமமூர்த்தி உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்

0 comments


புதுச்சேரி டிச 6
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முழுபெரும் தோழர் பி. ராமமூர்த்தி உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக் குழு உறுப்பினரும், முதுபெரும் தோழருமான பி. ராமமூர்த்தியின்(79) மறைவையொட்டி, ரெட்டியார்பாளையம் கட்சி அலுவலகமான தோழர் நல்லசிவம் நினைவகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், மாநில குழு உறுப்பினர் என். குணசேகரன், தா. முருகன், தனசேகரன், ஆர். ராமமூர்த்தி, கடலுhர், விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் டி. ஆறுமுகம், ஜி. ஆனந்தன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சிஐடியூ அகில இந்திய தலைவர் ஏ.கே. பத்மநாபன், தமிழ்மாநில நிர்வாகி கே. வைத்தியநாதன், சுகுமாறன், ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதா சுந்தர்ராமன் ஆகியோர் கைபேசி மூலம் பிரதேச செயலாளர் பெருமாளிடம் தங்களது இரங்களை தெரிவித்தனர்.
மேலும் சிபிஐ புதுவை சட்டமன்ற உறுப்பினர் ஆர். வி°வநாதன், அக்கட்சி நிர்வாகிகள் கீதநாதன், அபிஷேகம், சேது செல்வம், முன்னால் முதல்வர் என். ரங்கசாமி, காங்கிர° பிரதேசத் தலைவர் ஏ. வி. சுப்ரமணியன், பார்வர்டு கட்சியின் தலைவர் முத்து, குடியரசுக் கட்சி தலைவர் லயோன், அதிமுக செயலர் அன்பழகன், பாமக நிர்வாகி பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் தேவசகாயம். பா°கரன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வர்க்கவெகுஜென இயக்கங்களை சேர்ந்தவர்களும் அவரது உறவினர்களும் பி. ராமமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
ரெட்டியார்பாளையம் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பி.ராமமூர்த்தி உடல், பவழகரஞ்சாவடி சுடுகாட்டில் இறுதி நிகழ்ச்சி நடைப்பெற்றது. மறைந்த தோழரது விருப்பப்படி கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், அவரது உடலுக்கு தீ மூட்டினார்.
பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மறைந்த தோழருக்கு புகழாரம் சூட்டினார்கள். (படம் உள்ளது)
Read more...
Sunday, December 5, 2010

Red Salute to Comrade P Ramamoorthy

0 comments




மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முது பெரும் தோழரும் புதுச்சேரி பிரதேசக் குழு தோழருமான பி. ராமமூர்த்தி(79) காலமானார்.
சிபிஎம் புதுச்சேரி பிரதேசக் குழு அலுவலகத்திலேயே தனக்கான கட்சி பணியை ஆற்றி வந்த தோழர் பி. ராமமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் உடல் குன்றி காணப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அதனையடுத்து கட்சியின் பிரதேச அலுவலகமான பி. ராமமூர்த்தி நினைவகத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. செங்கொடி போற்றப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வி. பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், நிலவழகன், முருகன், உலகநாதன், ராமசாமி மற்றும் பிரதேசக்குழு உறுப்பினர்கள் பிரபுராஜ், சங்கர், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், லெனின் துரை, இடை கமிட்டி செயலாளர்கள் மற்றும் வர்க்க வெகுஜென அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மறைந்த பி. ராமமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பி. ராமமூர்த்தி மறைவையொட்டி, கட்சியின் கொடி அரைக் கம்பத்தில் மூன்று தினங்களுக்கு பறக்க விடப்படும். மேலும் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் மற்றும் வர்க்க வெகுஜென இயக்கங்களின் நிகழ்ச்சிகளும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று பிரதேச செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். மேலும் தோழர் பி. ராமமூர்த்தியின் இறுதி நிகழ்ச்சி, திங்கள் கிழமை காலை 11 மணிக்கு பவழகரஞ்சாவடி இடுகாட்டில் நடைபெற உள்ளது.
Read more...
Thursday, December 2, 2010

தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் திருக்காஞ்சி கிராமத்தில் இருந்து, வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் நோக்கி சவப்பாடை ஊர்வலம் நடத்தும் போராட்டம்

0 comments



புதுச்சேரி டிச 1
சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி தர முடியாதது தான் தலித் மக்கள் உரிமையை பாதுகாக்கும் புதுச்சேரி அரசா? என்று சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியை அடுத்து வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சி, அக்ரகாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலனி மற்றும் ஊர் மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என்றால் கிராமத்தை ஒட்டியுள்ள சங்கராபரணி ஆற்றைக் கடந்து அடக்கம் செய்ய வேண்டும். ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் நீச்சல் தெரிந்த 4 இளைஞர்கள் பிணத்தை வாழை மரத்தில் வைத்து அக்கரைக்கு இழுத்துச் சென்று இறுதி நிகழ்ச்சி செய்ய வேண்டும். எனவே கிராமத்திலேயே சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று பல நாள் கோரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தது.
இத்தகைய அவல நிலையை கண்டித்தும், ஆற்றில் மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன் வைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் திருக்காஞ்சி கிராமத்தில் இருந்து, வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் நோக்கி சவப்பாடை ஊர்வலம் நடத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையல் புதன்கிழமை(டிச 1) திருக்காஞ்சி கிராமத்தில் கொட்டும் மழையில் தாரைத் தப்பட்டத்துடன் துவங்கிய போராட்டத்திற்கு சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா தலைமை தாங்கி பேசுகையில்,
தீண்டாமை ஒழிப்பு முன்னனி, தமிழகம் மற்றும் புதுவையில் பல ஆய்வுகளை நடத்தி வருகிறது. இப்பகுதியில் நீண்ட காலமாக சுடுகாடு இல்லாதது தெரிய வந்தது. சுடுகாட்டுக்கு பாதை இருக்கு, சுடுகாடு இருக்கிறது என்றே இன்றைய ஆட்சியாளர்கள் கூறிவரும் நிலையில் ஆற்றுக்கு அந்தப்பக்கம் சுடுகாடு உள்ள இடத்தில் கே° நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கி தர முடிகிறது. ஆனால் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் தலித் மக்களுக்கு சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி தர முடியாதது தான் தலித் மக்கள் உரிமையை பாதுகாக்கும் அரசா? என்று புதுச்சேரி அரசை குற்றம் சாட்டினார்.
முன்னதாக இப்போராட்டத்திற்கு முன்னனியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி, சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் தலித் சுப்பையா, தவமணி, கொளஞ்சியப்பன், கலிவரதன், மணிபாலன்,இன்னரசு,ஜானகி, வாலிபர் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சரவணன் சிஐடியூ நிர்வாகிகள் நிலவழகன், சிவக்குமார், குணசேகரன், விவசாய சங்க நிர்வாகிகள் உலகநாதன், முருகையன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட துணை ஆட்சியர் உறுதி
புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியர் அருணாச்சலத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னனி நிர்வாகிகள் சந்தித்து பேசுகையில்: திருக்காஞ்சி குடியிருப்பு மக்களுக்கு மனைப்பட்டா வழங்கவும், சுடுகாட்டுக்கு ஆற்று மேம்பாலம் கட்டுவதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு சில மாதங்களில் அதற்கான பணிகள் செய்ய ஆவண செய்யப்படும் என்றும் துணை ஆட்சியர் அருணாச்சலம் உறுதியளித்தார்.
இப்போரட்டத்தை யொட்டி திருக்காஞ்சி கிராமம் முழுவதும் போலிஸார் குவிக்கபட்டு இருந்தனர்.
படம் உள்ளது
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com