Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, December 6, 2010

தோழர் பி. ராமமூர்த்தி உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்

0 comments


புதுச்சேரி டிச 6
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முழுபெரும் தோழர் பி. ராமமூர்த்தி உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக் குழு உறுப்பினரும், முதுபெரும் தோழருமான பி. ராமமூர்த்தியின்(79) மறைவையொட்டி, ரெட்டியார்பாளையம் கட்சி அலுவலகமான தோழர் நல்லசிவம் நினைவகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், மாநில குழு உறுப்பினர் என். குணசேகரன், தா. முருகன், தனசேகரன், ஆர். ராமமூர்த்தி, கடலுhர், விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் டி. ஆறுமுகம், ஜி. ஆனந்தன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சிஐடியூ அகில இந்திய தலைவர் ஏ.கே. பத்மநாபன், தமிழ்மாநில நிர்வாகி கே. வைத்தியநாதன், சுகுமாறன், ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதா சுந்தர்ராமன் ஆகியோர் கைபேசி மூலம் பிரதேச செயலாளர் பெருமாளிடம் தங்களது இரங்களை தெரிவித்தனர்.
மேலும் சிபிஐ புதுவை சட்டமன்ற உறுப்பினர் ஆர். வி°வநாதன், அக்கட்சி நிர்வாகிகள் கீதநாதன், அபிஷேகம், சேது செல்வம், முன்னால் முதல்வர் என். ரங்கசாமி, காங்கிர° பிரதேசத் தலைவர் ஏ. வி. சுப்ரமணியன், பார்வர்டு கட்சியின் தலைவர் முத்து, குடியரசுக் கட்சி தலைவர் லயோன், அதிமுக செயலர் அன்பழகன், பாமக நிர்வாகி பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் தேவசகாயம். பா°கரன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வர்க்கவெகுஜென இயக்கங்களை சேர்ந்தவர்களும் அவரது உறவினர்களும் பி. ராமமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
ரெட்டியார்பாளையம் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பி.ராமமூர்த்தி உடல், பவழகரஞ்சாவடி சுடுகாட்டில் இறுதி நிகழ்ச்சி நடைப்பெற்றது. மறைந்த தோழரது விருப்பப்படி கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், அவரது உடலுக்கு தீ மூட்டினார்.
பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மறைந்த தோழருக்கு புகழாரம் சூட்டினார்கள். (படம் உள்ளது)

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com