


புதுச்சேரி டிச 19
மார்க்சிய பல்கலைகழகமாக திகழ்ந்து மறைந்த பி. ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மார்க்சி°ட் கம்யூனி°ட் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முதுபெரும் தோழரும் புதுச்சேரி பிரதேசக் குழு உறுப்பினருமான பி. ராமமூர்த்தி படத்திறப்பு விழா நவீனா கார்டனில் நடைப்பெற்றது. இப்படத்திறப்பு விழாவிற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயற்க்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தோழர் ராமமூர்த்தியின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து பேசுகையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியில் சேர்ந்த பி. ராமமூர்த்தி நிர்வாகத்தின் பழிவாங்கல் நடவடிக்கையால் வேலையை இழந்தார். 1961 ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் தோழர் பி. சீனிவாசராவ் அறைக்கூவலுக்கு இணங்க நடந்த போராட்டத்தில் 1000 கணக்கான தோழர்கள் கைதாகி சிறைக்கு சிறைக்கு சென்றனர். பி. ராமமூர்த்தியும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றார்.
தன் வாழ்நாள் முழுவதும் கட்சி பிரசுரங்களான தீக்கதிர், மார்க்சி°ட், செம்மலர் ஆகியவை மக்களிடம் கொண்டு சென்றவர். தன் நலத்தை கருதாமல் கட்சி நலனே பெரியது என்று எண்ணிய ராமமூர்த்தி அவர்கள் உயர் சாதி குலத்தில் பிறந்தாலும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக தலித் மக்களின் விடுதலைக்காக போராடியவர். மார்க்சிய பல்கலைகழகமாக திகழ்ந்த வாழ்க்கை வரலாற்றை இளம் தலமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அவருக்கு பாடப்புத்தகம் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
குணசேகரன்
மாநிலக்குழு உறுப்பினர் பேசுகையில் ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தோடு புதுச்சேரி கமிட்டி இணைந்திருந்த போது தோழர்கள் டி.பி கோவிந்தன். கோவிந்தசாமி, வீரபத்திரன் உள்ளிட்ட தலைவர்களோடு பணியாற்றியவர் தோழா ராமமூர்த்தி. கட்சி பிரசுரங்களை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமல்லாமல் தத்துவார்த்த தளங்களிலும் விவாதம் செய்தவர். புதுச்சேரி மாநிலத்தின் கட்சியின் செய்திகளை கொண்டு செல்லும் வகையில் தனி பிரசுரம் அச்சடித்து வெளியிட வேண்டும் என்று எண்ணியவர். அவரது எண்ணப்படி மாதம் இரு முறையாவது செய்தி மடலை வெளியிட வேண்டுமென்று பிரதேசக் குழுவைக் கேட்டுக் கொண்டார்.
இப்படத்திறப்பு விழாவில் இந்திய கம்யூனி°ட் மாநில செயலாளர் நாரா. கலைநாதன், புரட்சிகர சோசலி°ட் கட்சியின் மாநில செயலாளர் லெனின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் பாவாணன், சட்டமன்ற உறுப்பினர் வி°வநாதன், கவுன்சிலர் தேவசகாயம், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஆனந்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், நிலவழகன், கலிவரதன், முருகன், உலகநாதன், ராமசாமி, ராமச்சந்திரன், மறைந்த தோழரின் சகோதரர் பி. ரங்கநாதன், ஆ. தாமோதரன் உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த சிபிஎம் முதுபெரும் தலைவர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.