Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, December 15, 2010

பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி டிச 14
மழையால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 15 ஆயிரம் வழங்ககோரி மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி - காரைக்காலில் பெய்த தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரி பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு *ரூபாய் பதினைந்தாயிரமும், வீடு இழந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு அறிவித்த ரூபாய் ஆயிரமும் உடனே வழங்கக் கோரி இப்போராட்டம் நடைப்பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், பிரதேசக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, கலியன். முத்துலிங்கம், கலைச்செல்வி. சேகர், இளவரசி, சரவணன் உள்ளிட்ட கிளை செயலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் திரளாக போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com