
புதுச்சேரி டிச 28
மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் கொடிமரத்தை திருடி சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யகோரி முத்தியாள் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் கொடிமரம் முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில் அமைக்கப்பட்டு இருந்ததை சில மர்மநபர்கள் பிடுங்கி எடுத்து சென்றுள்ளனர்.இச்சம்பவத்தை கண்டித்தும் திருடிசென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யகோரி இப்போரட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் கமிட்டி உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகர கமிட்டி பொறுப்பு சயலாளர் மதிவானன்,பிரதேச குழு உறுப்பினர் பிரபுராஜ்,கிளைசெயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கமிட்டி உறுப்பினர் கலியமூர்த்தி, உள்ளிட்ட திரளான கட்சி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக புதிய கொடிமரத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.