புதுச்சேரி டிச 6
டாக்டர் அம்பேத்கரின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மார்க்சி°ட் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகம் எதிரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் தமிழ்மாநில ஜி. ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் என். குணசேகரன், பிரதேச செயற்குழு உறுப்பினர் எல். கலிவரதன், புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி, நிர்வாகி கொளஞ்சியப்பன், அருந்ததியர் சங்க நிர்வாகிகள் தவமணி, வாழுமுனி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆர். வி°வநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
(படம் உள்ளது)