புதுச்சேரி =டிச 26
மத்திய மாநில அரசுகளின் விலைவாசி உயர்வால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் குற்றம் சாட்டினார்.
சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் சார்பில் விலை வாசி உயர்வை எதிர்த்து புதுச்சேரி சாரம் கீர்த்தி மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்திற்க்கு இயக்கத்தின் தலைவர் அன்பரசி ஜூலியட் தலைமை தாங்கினார்.செயலாளர் மாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.சமம் இயக்க நிர்வாகிகள் சந்திரா,மலர்விழி,சந்தானலட்சுமி,வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று பேசுகையில் மத்திய அரசின் தவரான பொருளாதார கொள்கையால் நாளுக்கு நாள் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு அதிகரித்து கொண்டே இருக்கிறது.இவ்விலையேற்றத்தால் அன்றாடம் பெண்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் குடும்ப விரிசலும் ஏற்படுகிறது. எனவே நமக்கான ஆட்சி எது என்று தீர்மானிக்க வேண்டும்.பெண்கள் நினைத்தாள் எதுவும் செய்ய முடியும். என்று பேசினார்
முன்னதாக விலைவாசி உயர்வு குறித்து 50 க்கும் மேற்பட்ட பகுதியில் 2ஆயிரம் குடும்பங்களில் எடுக்க பட்ட சர்வே குறித்து இயக்கத்தின் துனை தலைவர் கலைச்செல்வி பேசினார்.புதுவை அறிவியல் இயக்க துனை தலைவர் தட்சணாமூர்த்தி மற்றும்பேராசிரியர் ஹேமலதா, ரமேஷ் ஆகியோர் பேசினார்கள்.கருத்தரங்கத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
படம் உள்ளது