Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, February 22, 2011

பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி பிப் 12
அரசு மருத்துவமனை பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்காத காங்கிர° அரசைக் கண்டித்து மார்க்சி°ட் கட்சி சார்பில் புதுவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலையில் கோதுமை தவிடு உள்ளிட்ட தீவினங்களை அரசு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு அறிவித்த பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ. 2.50 மானியம் வழங்க வேண்டும். பால் தட்டுப்பாட்டை போக்கி, தரமான பால் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது. காந்தி வீதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர கமிட்டி செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை, பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் திரளான பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Read more...
Tuesday, February 8, 2011

புதுச்சேரியில் கண்டன முழக்க போராட்டம்

0 comments

புதுச்சேரி பிப் 8
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில காங்கிர°-திமுக கூட்டனி அரசுகளைக் கண்டித்து அதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் கண்டன முழக்க போராட்டம் நடைப்பெற்றது.
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் ஊக வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். பொது விபியோக திட்டத்தை பரவலாக்க வேண்டும். இந்திய உணவுக் கிடங்குகளில் மிகதியாக உள்ள உணவுத் தானியங்களை குறைந்த விலையில் விநியோகம் செய்ய வேண்டும். விவசாய உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயிக்க வேண்டும். அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த கண்டன போராட்டத்திற்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ தலைமைத் தாங்கினார். அதிமுக அவைத்தலைவர் பாண்டுரங்கன், சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், நிலவழகன், கலிவரதன், முருகன், ராமசாமி, ராமச்சந்திரன், உலகநாதன், சிபிஐ மாநில செயலாளர் நாரா.கலைநாதன், நிர்வாகிகள் கீதநாதன், ராமமூர்த்தி, அபிஷேகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓம்சக்தி சேகர், வி°வநாதன், மதிமுக மணிமாறன், கபிரியேல், பிஎ°பி-தங்கக்கலைமாறன், ஆர்எ°பி-லெனின், பார்வர்டு பிளாக்-வெங்கடேசப் பெருமாள், ஆர்பிஐ- லயோன், லோக் ஜனசக்தி உமாசுதன் உள்ளிட்ட கூட்டனி கட்சித் தலைவர்கள் உள்படஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து முழக்கமிட்டனர்.
இதேப்போல் காரைக்காலிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
Read more...
Monday, February 7, 2011

விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையம்

0 comments

புதுச்சேரி பிப் 3
தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையம் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சியின் மாநில செயலாளர்ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மைய கட்டிடத் திறப்பு விழா லா°பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள் தலைமைத் தாங்கினார். மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எ°. ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். சிபிஎம் தமிழ்மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தும், கணினி பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசுகையில், ஆலை முதலாளிகள், பன்னாட்டு தொழில் அதிபர்கள் நாங்கள் சேவை செய்கிறோம் என்று சொல்லி, தொழிலாளர்களின் உழைப்பை ஒருபுறத்தில் சுரண்டியும், மறுபுறத்தில், தொண்டு நிறுவனங்களை துவக்கி வருவதுதான் இன்றைக்கு இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு மாறாகவும் ஒடுக்கப்பட்ட தலித், மீனவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கல்வி, வேலை உள்ளடக்கிய எதிர்கால அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு நம்முன் உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற மையங்களை துவங்குவதற்கு புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையம் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
என். குணசேகரன்
தமிழ்நாடு மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளையின் தலைவர் என். குணசேகரன் பேசுகையில், தாழ்த்தப்பட்ட, சமூக ரீதியாக பின்தங்கியவர்களை மேம்படுத்துவதற்காக, இம்மையம் துவங்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரூர் பகுதி தீர்த்த மலையில் இதுபோன்ற மையம் துவங்கப்பட்டு. 1000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு இலவச கணினி பயிற்சி மையத்தை நடத்தி வருகிறோம். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களை திறமைப்பெற்றவர்களாகவும், தனித்துவம் பெற்றவர்களாக மாற்றுவதே இம்மையத்தின் நோக்கமாக அமையவேண்டும். அரசியல் சார்பற்றவையாக இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மையம் செயல்படும் என்று பேசினார். இவ்விழாவில் சமூக நல தொடக்க கல்வி இயக்கத்தின் நிறுவனர் ஆஸீய° தாம°, எல்ஐசி புதுவை முதன்மை மேலாளர் உத்தராபதி, தெரசா மருத்துவ மையத்தின் மருத்துவர். ஈவ் பீஷ், சூழலியல் மற்றும் ஊரக வளர்ச்சி மைய அதிகாரி ரகுநாத், இம்மைய அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தலைவர். ராமசாமி, சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் நடராசன், ஆர். எம். ராம்ஜி, கொளஞ்சியப்பன் உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விழவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Read more...
Friday, February 4, 2011

அரசின் செயல்பாட்டை எதிர்த்து குரல் எழுப்ப அனைத்து ஜனநாயக இயக்கங்களும் முன்வர வேண்டும்

0 comments
புதுச்சேரி பிப் 4
புதுச்சேரி காங்கிர° அரசின் இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, வளர்ச்சி திட்டங்கள் இல்லாத ஏமாற்றும் பட்ஜெட் என்று மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சி°ட் கட்சியின் செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில துணைநிலை ஆளுநர் உரையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் முந்தைய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டதையே மீண்டும் புதிய திட்டங்களாக அறிவித்துள்ளனர். காமராஜர் கல்வி உதவி நிதி, ஊனமுற்றோர்களுக்கான இலவச அரிசி, சமையல் எரிவாயு மானியம், இலவச துணி வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. 2010-2011 பட்ஜெட்டில் 4430 கோடி ரூபாய்க்கு வரவு-செலவு திட்டம் அறிவிக்கப்பட்டது. திட்டம் சார்ந்த ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் நடைமுறையில் இருந்து வந்த பல திட்டங்களையும் செயல்படுத்தாமல் போனது காங்கிர° அரசின் நிதி நிர்வாகம், ஆட்சிநிர்வாகம் என அனைத்து துறைகளிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதித்துள்ளது. மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் 2010 ++ஜூலை 29ல் மாநில முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சமூக நலத்துறையால் நிதித்துறைக்கு தெரியாமல், திட்ட மதிப்பீட்டிற்கு மேல் கூடதலாக பணம் எடுத்தது, மாநில வருவாயை அதிகரிக்காமல் கடன் பெறுவது போன்ற, நிதி கையாளுமை குறித்து, உறுதியான நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவைத் தலைவர் இராதாகிருஷ்ணன் மக்களுக்காக திட்டங்கள் இல்லை. கமிஷனுக்காக தான் திட்டம் என்றும், இலவச துணி வழங்கும் திட்டத்தில் ஏற்படும் தாமதல் கமிஷனுக்காக தான் என்று பேசியதும் புதுச்சேரி காங்கிர° அரசின் நேர்மையற்ற, திறமையற்ற ஆட்சி நிர்வாகத்திற்கு சான்றாகும். ஆகவே புதுச்சேரி காங்கிர° அரசின் இடைக்கால பட்ஜெட் வெளிப்படை தன்மையற்ற, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, மக்களை ஏமாற்றும் மோசடியான பட்ஜெட் ஆகும். ஆளுநர் உரையும், உப்பு சப்பில்லாத கொள்கை அறிவிப்பாகவே உள்ளது என மார்க்சி°ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. காங்கிர° அரசின் செயல்பாட்டை எதிர்த்து குரல் எழுப்ப அனைத்து ஜனநாயக இயக்கங்களும் முன்வர வேண்டும் என மார்க்சி°ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு பெருமாள் அறிக்கையில் கூறியுள்ளா

massive rally

0 comments

CITU conducted massive rally in Puducherry for demand of all rights for unorganized sector workers nearly 1500 more members where participated.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com