புதுச்சேரி பிப் 4
புதுச்சேரி காங்கிர° அரசின் இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, வளர்ச்சி திட்டங்கள் இல்லாத ஏமாற்றும் பட்ஜெட் என்று மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சி°ட் கட்சியின் செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில துணைநிலை ஆளுநர் உரையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் முந்தைய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டதையே மீண்டும் புதிய திட்டங்களாக அறிவித்துள்ளனர். காமராஜர் கல்வி உதவி நிதி, ஊனமுற்றோர்களுக்கான இலவச அரிசி, சமையல் எரிவாயு மானியம், இலவச துணி வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. 2010-2011 பட்ஜெட்டில் 4430 கோடி ரூபாய்க்கு வரவு-செலவு திட்டம் அறிவிக்கப்பட்டது. திட்டம் சார்ந்த ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் நடைமுறையில் இருந்து வந்த பல திட்டங்களையும் செயல்படுத்தாமல் போனது காங்கிர° அரசின் நிதி நிர்வாகம், ஆட்சிநிர்வாகம் என அனைத்து துறைகளிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதித்துள்ளது. மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் 2010 ++ஜூலை 29ல் மாநில முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சமூக நலத்துறையால் நிதித்துறைக்கு தெரியாமல், திட்ட மதிப்பீட்டிற்கு மேல் கூடதலாக பணம் எடுத்தது, மாநில வருவாயை அதிகரிக்காமல் கடன் பெறுவது போன்ற, நிதி கையாளுமை குறித்து, உறுதியான நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவைத் தலைவர் இராதாகிருஷ்ணன் மக்களுக்காக திட்டங்கள் இல்லை. கமிஷனுக்காக தான் திட்டம் என்றும், இலவச துணி வழங்கும் திட்டத்தில் ஏற்படும் தாமதல் கமிஷனுக்காக தான் என்று பேசியதும் புதுச்சேரி காங்கிர° அரசின் நேர்மையற்ற, திறமையற்ற ஆட்சி நிர்வாகத்திற்கு சான்றாகும். ஆகவே புதுச்சேரி காங்கிர° அரசின் இடைக்கால பட்ஜெட் வெளிப்படை தன்மையற்ற, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, மக்களை ஏமாற்றும் மோசடியான பட்ஜெட் ஆகும். ஆளுநர் உரையும், உப்பு சப்பில்லாத கொள்கை அறிவிப்பாகவே உள்ளது என மார்க்சி°ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. காங்கிர° அரசின் செயல்பாட்டை எதிர்த்து குரல் எழுப்ப அனைத்து ஜனநாயக இயக்கங்களும் முன்வர வேண்டும் என மார்க்சி°ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு பெருமாள் அறிக்கையில் கூறியுள்ளா
Friday, February 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)