புதுச்சேரி பிப் 8
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில காங்கிர°-திமுக கூட்டனி அரசுகளைக் கண்டித்து அதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் கண்டன முழக்க போராட்டம் நடைப்பெற்றது.
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் ஊக வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். பொது விபியோக திட்டத்தை பரவலாக்க வேண்டும். இந்திய உணவுக் கிடங்குகளில் மிகதியாக உள்ள உணவுத் தானியங்களை குறைந்த விலையில் விநியோகம் செய்ய வேண்டும். விவசாய உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயிக்க வேண்டும். அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த கண்டன போராட்டத்திற்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ தலைமைத் தாங்கினார். அதிமுக அவைத்தலைவர் பாண்டுரங்கன், சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், நிலவழகன், கலிவரதன், முருகன், ராமசாமி, ராமச்சந்திரன், உலகநாதன், சிபிஐ மாநில செயலாளர் நாரா.கலைநாதன், நிர்வாகிகள் கீதநாதன், ராமமூர்த்தி, அபிஷேகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓம்சக்தி சேகர், வி°வநாதன், மதிமுக மணிமாறன், கபிரியேல், பிஎ°பி-தங்கக்கலைமாறன், ஆர்எ°பி-லெனின், பார்வர்டு பிளாக்-வெங்கடேசப் பெருமாள், ஆர்பிஐ- லயோன், லோக் ஜனசக்தி உமாசுதன் உள்ளிட்ட கூட்டனி கட்சித் தலைவர்கள் உள்படஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து முழக்கமிட்டனர்.
இதேப்போல் காரைக்காலிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.