Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, December 20, 2011

உடல் உழைப்போர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா

0 comments

புதுச்சேரி,டிச-18
உடல் உழைப்போர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி பிரதேச உடல் உழைப்போர் சங்கம் சிஜடியு- வின் புதிய பெயர்பலகை திறப்பு விழா காந்திவீதி, முத்துமாரியம்மன் கோவில்வீதி சந்திப்பில் நடைபெற்றது.சங்கத்தின் பொருளாளர் கே.குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில் சங்கத்தின் கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஏற்றிவைத்து பேசினார்.புதிய பெயர்பலகையை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் தா.முருகன் திறந்து வைத்தார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.சிஜடியு மாவட்ட துணைத்தலைவர் ராஜாங்கம்,ஆட்டோ சங்க நிர்வாகிகள் மணவாளன்,மாதிவானன்,சிபிஎம் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.சங்க செயலாளர் ராமசாமி,நிர்வாகிகள் நாகமாணிக்கம்,சாதிக்பாஷா,சபாபதி,பாலையா,சரவணன்,பஸ்கர்,சங்கர்,மாலா உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக சங்கத்தின் அடையாள அட்டையும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.
Read more...
Friday, December 9, 2011

பெறுகியுள்ள வன்முறை சீரழிவுகளை தடுக்ககோரி

0 comments

புதுச்சேரி,டிச-9
பெறுகியுள்ள வன்முறை சீரழிவுகளை தடுக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவல்துறை பாதுகாப்பில் இருந்த இளம் பெண் காணாமல் போன சம்பவத்திற்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் .இவ்வழக்கு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இளம் பெண்ணை பாலியலுக்கு உட்படுத்திய சம்பவத்தில் ஜி தங்கும் விடுதியின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். இரவு நேரக் சலையோர டிபன் கடைகளை இரவு ஒரு மணிவரை நடத்திவதற்கு அனுமதிக்க வேண்டும்.புதுச்சேரியில் அதிகரித்துள்ள கொலை,கொள்ளைகளை தடுக்கதவரிய காவல்துறையை கண்டித்தும்,சட்டம் ஒழுங்கு பிரச்சனைகுறித்து அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக முதல்வர் கூட்ட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
நேருவீதி காந்திவீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்த பேசினார்.இருதியாக போராட்டத்தை முடித்து வைத்து மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் பேசினார்.இப்போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நிலவழகன்,கலிவரதன்,சுமதி,ராமசாமி,முருகன் இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,தமிழ்செல்வன்,சரவணன்,முருகையன், உள்ளிட்ட பிரதேசக்குழு ,இடைகமிட்டி உறுப்பினர்கள்,மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



புதுச்சேரி டிச-9
ஜிப்மர் மருத்துவனையின் புதிய இயக்குநராக டாக்டர். ரவிக்குமார் பொறுப்பேற்று கொண்டார்.புதுச்சேரி கோரிமேட்டில் தன்வந்திரி நகரில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனை மத்திய சுகாதாரதுறையின் கீழ் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையின் இயக்குநராக இருந்த டாக்டர்.சுப்பாராவ் ஓய்வு பெற்றதை தொடர்ந்து டாக்டர்.ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் மருத்துவகல்லுhரியில் பணிபுர்ந்தவர்.மருத்துவத்துறையில் பல்வேறு புத்தகங்களை எழுதி விருதுகளை பெற்றுள்ளார்.புதனன்று (டிச-7) டாக்டர்.ரவிக்குமார் ஜிப்மர் இயக்குநராக பொறுப்பேற்று கொண்டார்.இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...

தோழர் பி ஆர் நினைவு அஞ்சலி

0 comments

புதுச்சேரி டிச-8
அந்நிய பல்கலைகழகத்தை இந்திய நாட்டில் அனுமதிப்பதை எதிர்த்து பாலிக்டெக்னிக் மாணவர்கள் புதுச்சேரியில் வகுப்புகளை புறக்கனித்து போராட்டம் நடத்தினர்.
இந்திய உயர்கல்வியில் அந்நிய நாட்டு பல்கலைகழகத்தை அனுமதிக்கும் மசோதாவை மத்திய அரசு திரும்பபெறவேண்டும்.இந்திய பல்கலைகழகங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.அடிப்படை கல்வி வளர்சிக்கு போதுமான நிதியை ஒதுக்கி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு இலா°பேட் மோதிலால்நேரு பாலிடெக்னிக் சங்க கிளை தலைவர் வினோத் தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித்குமார்,இணைசெயலாளர் பார்த்தசாரதி, பாலிடெக்னிக் கிளை நிர்வாகிகள் கலைவாணன்,வேல்முருகன்,பாரதிராஜ,அருண்,சூர்யா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக வாகுப்புகளை புறக்கனித்து ஊர்வலாமாக சென்ற மாணவர்கள் நேதாஜி சுபா° சந்திரபோ° சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் உள்ளது.

புதுச்சேரி,டிச-8
இளம் பெண் கணாமல் போனது குறித்து புதுச்சேரிஅரசு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் வருமாறு,
புதுச்சேரி மாநிலத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும், சீண்டல்களும் அதிகரித்து வருகிறது.மாநில அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு அதிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நட்சத்திர ஓட்டல் கட்டினால் ஒருகோடி மானியம் அளித்து வருகிறது.ஒருபுறத்தில் சொர்க்கபுரி போன்ற தோற்றமும், மறு புறத்தில் வளர்ந்து வருகிற வறுமையும், சீரழிவு கலாச்சாரத்திற்கு அடிப்படை காரணமான அமைந்துள்ளன.இதன் வெளிப்பாடாக அண்ணாசாலையில் உள்ள ஜி தங்கும் விடுதியில் ரம்யா (எ)க°துhரி 16-வயது நிரம்பிய இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழிலுக்கு கட்டாயபடுத்திய விவகாரத்தில் விடுதிமேலாளர் உள்ளிட் 4பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்நிலையில் காவல்துறை கட்டுபாட்டில் இருந்த ரம்யாவிற்கு மருத்துவபரிசோதனை செய்ய அரசு மருத்துவனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.அப்போது திடிரென்று ரம்யா வை காணவில்லை என்று காவல்துறை சேர்ந்த பெண் காவலர் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இச்சம்பத்தில் பாதிக்கப்பட்ட ரம்யா எங்கு உள்ளார் என்பது கேள்விகுறியாக உள்ளது.எனவே இவ்வழக்கு குறித்து நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.இளம் பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் சார்பில் முதுநிலை கண்கானிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.தற்போது மூன்று மாதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் தேர்தல் துறை ஆனையர் நியமிக்கபடாதது புதுச்சேரி அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா?என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய போரட்டம் நடத்தபடும்.
மேலும் புதுச்சேரி அரசுக்கு வரவேண்டிய பல்வேறு திட்ட நிதியை மத்திய காங்கிர° ஆட்சி =தடுத்து வருகிறது.எனவே இதுகுறித்து மாநில முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் .இவ்வாறு கூறினார்கள்.உடன் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,மாதர் சங்க செயலாளர் இ.சத்யா ஆயியோர் உடன் இருந்தார்.

புதுச்சேரி,டிச-8
துணைத்திட்ட நிதியின் கோரிக்கை சாசனத்தை நிறைவேற்றக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் முதல்வர் என்.ரங்கசாமியிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தல்.
தலித் மக்களுக்கே துணைத்திட்ட நிதியை முழுவதும் செலவு செய்ய வேண்டும்.தலித் மாணவர்கள் விடுதியை உரிய முறையில் பாரமரிக்க வேண்டும்.தலித்மாணவர்களுக்கு உயர்கல்விக்கான மாண்யம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் தலித்சுப்பையா,பொதுசெயலாளர் ராமசாமி,பொருளாளர் கொளஞ்சியப்பன்,நிர்வாகிகள் கலிவரதன்,நிலவழகன்,முருகன்,நடராஜன்,சரவணன்,தவமணி உள்ளிட்டோர் முதல்வர் என்.ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை சாசனத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர்.மேலும் அமைச்சர்கள் சந்திரகாசு,ராஜவேலு,பன்னீர்செல்வம்,ஆகியோரையும் சந்தித்து வலியுறுத்தினர்.
படம் உள்ளது
Read more...
Friday, December 2, 2011

பெண்கள் மீது பாலியல் கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனை வழங்ககோரி

0 comments

புதுச்சேரி,நவ-30,
பெண்கள் மீது பாலியல் கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனை வழங்ககோரி மார்க்சி°ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள ஜி தங்கும் விடுதியில் இளம் பெண்ணை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு முயற்சித்த உண்மை குற்றவாலிகளை கைது செய்ய வேண்டும்.விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து மாவட்ட ஆட்சியர் தலமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும்.புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகளை கண்கானித்து பாலியல் வண்முறைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரசெயலாளர் எ°.லெனின்துரை தலமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.நகர கமிட்டி செயலாளர் பிரபுராஜ்,கமிட்டி உறுப்பினர்கள் நடராஜ்,சந்துரு,குப்புசாமி,பா°கர்,மாதர் சங்க நிர்வாகி ஜெயலக்°மி உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...

அமைப்புசாரா தொழிலாளர்களை அலட்சியப்படுத்தும் புதுச்சேரி அரசு.

0 comments

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு புதுச்சேரி விடுதலை பெற்றது.அதனால் இந்த பிரதேசம் மத்திய அரசின் மேற்பார்வையில் யூனியன் பிரதேசமாக இன்றுவரை இருந்து வருகிறது.மத்திய அரசின் நிதி உதவி அதிகம் இருந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் எந்த வித கனரக தொழிற்சாலைகள் ஏற்படுத்த வில்லை இருந்த ரோடியர்,சுதேசி,பாரதி என மூன்று பஞ்சாலைகளில் மூன்று ஷிப்ட்டுகளாக பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இதன் மூலம் புதுச்சேரியின் பொருளாதாரம் அதைச்சுற்றி சுயதொழில்களும் வளர்ந்து வந்தன உலகமயம், தாராளமயம் என்ற பெயரால் பஞ்சாலைகளில் இன்று சில நுhறு தொழிலாளர்களே வேலை செய்கிற அவள நிலை உள்ளது. இந்த பஞ்சாலைகளை நவினப்படுத்தி அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் எண்ணம் மத்திய மாநில அரசுகளுக்கு இல்லை. மறுபுறம் புதுச்சேரியில் விவசாய விலை நிலங்கள் அழிக்கப்பட்டு ரியல் எ°டேட், வீட்டு மனை என்ற பெயரால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விட்டன. சின்ன தஞ்சாவூர் என்று அழைக்கப்பட்ட பாகூர் ,கிருமாம்பாக்கம் போன்ற மூன்று போகங்கள் விலையகூடிய நிலம் உள்ள பகுதிகள் இன்றைக்கு வீட்டு மனைகளாக மாற்றபடுகிறது.
அரிசிக்கு பக்கத்து மாநிலத்தில் கையேந்துகின்ற புதுச்சேரி அரசு இந்த விவசாய்களை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை.நில பாதுகாப்பு சட்டத்தை அமுலபடுத்தி விவசாய விலை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவும், மானியவிலையில் உரங்கள் கொடுத்து இந்த விவசாய்களை பாதுகாக்க புதுச்சேரி அரசு தவறிவிட்டது.விவசாயம்,பஞ்சாலை போன்ற தொழில்கள் அழிக்கப்பட்டதால் இந்த தொழிலாளர்கள் எல்லாம் இன்று அமைப்பு சாரா தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.இந்த தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை சொல்லி மாலாது.காலை 9மணி முதல் இரவு 10 மணிவரை கடைகளில் வேலை செய்யும் இத்தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை வாரவிடுமுறையும் இல்லை சுதந்திரதினம் போன்ற நாட்களிலுல்கூட இவர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுகிறது. 50வயதானல் வீட்டிற்கு செல்ல வேண்டியது தான். எத்தனை ஆண்டுகள் வேலை செய்து இருந்தாலும் எந்த பண உதவியும் கிடையாது.புதுச்சேரியின் தொழிலாளர்துறை ஒன்று இருக்கிறது வாரவிடுமுறை இல்லை என்று சொன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்கமால் அந்த கடை உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கின்றது . இந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டுவது கடினம் தொழிற்சங்கம் என்று கேள்விபட்ட உடன் அந்த தொழிலாளிக்கு மறுநாள் வேலை கிடையாது.சுயமாக தொழில் செய்யும் நடைபாதை வியாபாரிகள், தெருவில் கூவி விற்கிற தொழிலாளிகள்,ஆட்டோ தொழிலாளர்கள் இவர்களின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது.காவல்துறை இவர்களை நாய்களை விட கேவலமாக நடத்துகிறது அன்னியர்களைப்போல இங்கே கடைபோடதே, ஆட்டோவை அங்கே நிறுத்தாதே என்று சுயமாக தொழில் செய்பவர்களை தொழில் செய்யவிடாமல் தடுத்து வருகிறது காவல்துறை.
இந்த தொழிலாளர்கள் சிஜடியு சங்கம் அமைத்து தங்களை பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள்.புதுச்சேரியில் பெரும்பகுதியான அமைப்புசாரா தொழிலாளர்களை பாதுகாக்க இந்த அரசும் தொழிலாளர் நல சட்டங்களையும் அமுலபடுத்த வில்லை. கேரளாவைப்போல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் கேட்டு போராடியதின் விலைவாக 2001ஆம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலச்சங்கம் ஏற்படுத்தப்பட்டது.இன்று 16 வகையான தொழில்செய்யகூடியவர்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.வீட்டு வேலை செய்யும் பெண்கள் நலச்சங்கத்தில் சேர்க்கபட வேண்டும் என்று சிஜடியு சங்கம் வீட்டு வேலை செய்யும் பெண்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் புதுச்சேரி அரசு அவர்களை நலச்சங்கத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து இன்று வரை அமல்படுத்தாமல் இருக்கிறது.நலச்சங்கத்தில் 62 வகையான தொழில்கள் சேர்க்கபடவேண்டும் என்று சிஜடியு தொடர்ந்து போராடி வருகிறது.நலச்சங்கதின் மூலம் இன்று சிறிதலவு நிவாரணம் பெறுகிறார்கள் கல்வி உதவிதொகை, மரணகால நிதி, குழந்தை பிறந்தால் நிதிஉதவி என்று கிடைக்கிறது.சிஜடியு சங்கத்தின் போராட்டம் மூலம் தீபாவளி ஊக்கதொகை ரூ.300ம் பிறகு ரூ.400, தற்போது ரூ.500 என பெற்றுவருகிறோம்.நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி கூடுதல் நீதி ஒதுக்க வேண்டும் என்று சிஜடியு தலைமையில் புதுவை பிரதேச உடல் உழைப்போர் சங்கம் போராடி வருகிறது.அமைப்பு சாரா நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளிக்கு வங்கி கடன்,சிகப்பு ரேஷன் கார்டு வழங்கவேண்டும்.ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாண்ய விலையில் பெட்ரோல் வழங்கவேண்டும் என தொடர்ச்சியாக போராடிவரும் சிஜடியு சங்கத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி 20வது மாநாட்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

இவன்
கே.குமார்(பொருளாளர்)
புதுவை பிரதேச உடல்உழைப்போர் சங்கம் (சிஜடியு)
புதுச்சேரி
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com