
புதுச்சேரி,நவ-30,
பெண்கள் மீது பாலியல் கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனை வழங்ககோரி மார்க்சி°ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள ஜி தங்கும் விடுதியில் இளம் பெண்ணை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு முயற்சித்த உண்மை குற்றவாலிகளை கைது செய்ய வேண்டும்.விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து மாவட்ட ஆட்சியர் தலமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும்.புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகளை கண்கானித்து பாலியல் வண்முறைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரசெயலாளர் எ°.லெனின்துரை தலமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.நகர கமிட்டி செயலாளர் பிரபுராஜ்,கமிட்டி உறுப்பினர்கள் நடராஜ்,சந்துரு,குப்புசாமி,பா°கர்,மாதர் சங்க நிர்வாகி ஜெயலக்°மி உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.