புதுச்சேரி,ஆக-3
உணவு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த கோரி இடதுசாரிகட்சிகள் சார்பில் புதுச்சேரியில் ஏழு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வரும் உணவு பாதுகாப்பு மசோதாவில் உரிய திருத்தங்களுடன் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய அரிசி,கோதுமை,மண்ணெண்ணைய் அளவை குறைப்பதை கைவிட வேண்டும்.புதுச்சேரி அரசு இலவச அரிசி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி,அத்தியாவசிய பண்டங்களை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மறியல்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கும் துறை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஐ தேசிக்குழு உறுப்பினர் நாhரா.கலைநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்து ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,மதிவாணன்,சிபிஐ நிர்வாகிகள் சலீம்,சேதுசெல்வம் உள்ளிட்ட 20பெண்கள் உட்பட 300பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.முன்னதாக காவல்துறையினரின் தடையை மீறி அலுவலகம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருக்கனுhர்
திருக்கனுhர் பிஎ°என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர் அன்புமணி,சிபிஐ தொகுதி செயலாளர் அருள் உள்ளிட்ட 30பெண்கள் உட்பட 102பேர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவித்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் கடலுhர் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் அபிஷேகம்,பார்வர்டு கட்சி நிர்வாகி தர்மராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.சிஐடியு இணை செயலாளர் சிவக்குமார்,ஜெகதீசன்,சிபிஐ நிர்வாகிகள் பூபதி,ஏழுமலை உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட 50 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாகூர்
பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம்செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,சிபிஜ நிர்வாகிகள் கலியமூர்த்தி,மாசிலாமணி உள்ளிட்ட 50 பெண்கள் உட்பட 98பேர்களை காவல்துறை கைது செய்தனர்.
வில்லியனுhர்
வில்லியனுhர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் கீதநாதன் ஆகியயோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை,சிபிஜ தொகுதி நிர்வாகிகள் அந்தோனி,பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 65 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்டார் கோவில்
திருவண்டார் கோவில் மத்திய உணவு கிடங்கு முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் சரளா ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,சங்கர்,சிபிஐ நிர்வாகி டி.பி.ரவி உள்ளிட்ட 15 பெண்கள் உட்பட 65 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் வட்டசெயலாளர் வின்சென்ட்,சிபிஐ காரைபிரதேச செயலாளர் ராஜேந்திரன் கூட்டாக தலைமை தாங்கினர்.சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர் கலியபெருமாள்,இராமர்,சிபிஐ நிர்வாகிகள் தங்கராசு,முரளி உள்ளிட்ட 100பெண்கள் உட்பட 190 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி முழுவதும் ஏழு மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.