புதுச்சேரி,நவ-5
ஏனாமில் தொழிற்சங்கத் தலைவர் லாக் அப் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த கோரி சிபிஎம் தர்ணா.
ஏனாம் ரீஜென்சி செராமிக் தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் படுகொலை சம்பவங்கள் உள்ளிட்ட விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடிகிருஷ்ணராவையும் சேர்க்க வேண்டும்.ஏனாம் மண்டலத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிபடுத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்.இத்தொடர் சம்பவங்களின் விசாரணை அறிக்கை,சிபிசிஐடி விசாரணை அறிக்கைகளை அரசு வெளியிடவேண்டும்.காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட முரளிமோகன் குடும்பத்திற்கு ரூ.10லட்சமும்,துப்பாக்கிசூட்டால் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.தொழிலாளர் நல உரிமைகளை பாதுகாக்கவும்,தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளடக்கிய கொள்கையை புதுச்சேரி அரசு ஏற்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இத்தர்ணா போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தலைமை தாங்கினார்.தர்ணா போராட்டத்தை செயற்குழு உறுப்பினர் தா.முருகன் துவக்கி வைத்து பேசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் இறுதியாக போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.இப்போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,ராமச்சந்திரன்,சுமதி,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,உலகநாதன்,மதிவாணன்,சங்கர் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.