புதுச்சேரி,நவ-24
மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசை எதிர்த்து புதுச்சேரி,காரைக்கால்,பாகூர்,திருக்கனூர் ஆகிய பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் டிசம்பர் 15ஆம்தேதிக்குள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய,மாநில அரசுகள் குறைந்த விலையில் அனைத்து அத்தியாவசிய பண்டங்களை பொதுவினியோக முறையில் நியாயவிலை கடைகளில் வழங்க வேண்டும்.பொருட்களுக்கு மாற்று பணம் தரும் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும்.தீபாவளி பண்டிகையொட்டி குறைந்த விலையில் 5மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இத்திட்டத்தை மாநில அரசு நீடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.
உள்ளாட்சி தேர்தல்
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை ஜனவரி 15 க்குள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் முன்றாவது முறையாக காலஅவகாசம் வழங்கியுள்ளது.சுயோட்சையான அதிகாரம் கொண்ட மாநில தேர்தல் ஆணையம் இதுநாள் வரை தேர்தல் தேதி அறிவிக்காதது, மாநில என்.ஆர் காங்கிர° அரசுக்கு ஆதரவாக செயல்படுவது போல் உள்ளது.எனவே உள்ளாட்சி தேர்தல் தேதியை உடனே அறிவிக்க வேண்டும்.மாநில அரசும் உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நடத்தக்கோரி மார்க்சஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் 26 ஆம்தேதி காலை 10மணிக்கு லெனின்வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் சிறப்பு மாநாடும் நடைபெறுகிறது.
புதுச்சேரி கவர்னர்
புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மகன் மற்றும் உறவினர்கள் பெயரில் மருத்துவகல்லுhரி துவங்குவதற்கு முயற்சி மேற்கொண்டார்.இச்சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் கவர்னர் உயர்பதவியில் இருப்பதால் அவர்மீதான நடடிக்கைக்கு மத்திய அரசை அனுகலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டது.இதனை எதிர்த்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கு கடந்த 19 ஆம்தேதி விசாரணைக்கு வந்தது, அப்போது கவர்னர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதாக ஒப்பு கொள்ளப்பட்டது.அதே நேரத்தில் பெறப்பட்ட சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கப்ட்டுவிட்டது எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவர்னருக்கு தன்டனை வழங்க இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய 5பேர் கொண்ட இந்தியாவின் உயரிய பீடமான அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வழக்கின் மூலம் அதிகாரத்தில் உயர்ந்த பொருப்பில் உள்ள யாராக இருந்தாலும் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு முற்று புள்ளி வைக்கப்படும்.அதேப்போல் சுனாமி மறுவாழ்வுக்கு புதுச்சேரி அரசுக்கு வந்த 800கோடியில் ரூ.204கோடி மட்டுமே செலவு செய்ததற்கான கணக்கு காட்டப்பட்டுள்ளது.மீதி தொகையில் பெறும் ஊழல் நடைபெற்றுள்ளது.இதேப்போல் பாதாளசாக்கடை திட்டத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது.இதன்மீது உரிய விசாரணை நடத்த விரைவில் மார்க்சஸ்ட் கட்சியின் சார்பில் நீதிமன்றம் செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.