புதுச்சேரி,நவ-26
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி சிறப்பு மாநாடும்,வழக்கை வாதாடி உரிய தீர்ப்பை பெற்றுதந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யுவிற்கு பாராட்டு விழா லெனின்வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் நடைபெற்றது.இச்சிறப்பு மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிராதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை
தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் அனைவரையும் வரவேற்றார்.
என்.குணசேகரன்
சிபிஎம் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் சிறப்பு
அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,அடிமட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கின்ற அமைப்பாக திகழும் உள்ளாட்சி அமைப்பை கொண்டு வரவேண்டும் என்று மகாத்மாகாந்தி அன்றைக்கே வலியுறுத்தியுள்ளார்.கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெறும் தலைவர் ஈஎம்எஸ் அவர்களும் சுய உரிமையை நிலைநாட்டும் உள்ளாட்சி அமைப்பை கொண்டு வரவேண்டும் என்று பதிவு செய்தார்.
உள்ளாட்சி மூலம் மக்களுக்கு உரிய திட்டங்களை அமல்படுத்துவதில் மேற்குவங்கம் திகழ்ந்ததால், இச்சட்டம் கொண்டுவருவதற்கு முன்னூதாரமாக திகழ்ந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் போராட்டம் நடத்திய பிறகே உள்ளாட்சி அமைப்பின் உரிமைக்கான அதிகாரம் பெறப்பட்டு அதற்கான சட்டதிருத்தங்களுடன் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் பஞ்சாய்த்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது.
உள்ளாட்சியின் ஜனநாயக நன்மைகள் மக்களுக்கு கிடைக்க இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதோடு,நீதிமன்றத்தில் நடத்திய போராட்டத்தை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
இம்மாநாட்டில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீமாராவ் எம்எல்ஏ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,ஹோப் தொண்டு நிறுவனர் ஜோசப்விக்டர்ராஜ்,சமூக ஆய்வாளர் ஆர்.தட்சணாமூர்த்தி,வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யு ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். முன்னதாக என்.குணசேகரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யுவை பாராட்டி கதராடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
தீர்மாணம்
இச்சிறப்புமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதின் விளைவாக வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பின் படி, மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்.ஒரு சில அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக வழக்கு தொடுத்து இருப்பதை காரணம் காட்டி தேர்தலை தள்ளி போடக்கூடாது.மாநில அரசும் தேர்தலை நடத்திட முன்வர வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியுள்ளது.