Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, March 25, 2011

சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

0 comments
சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
சென்னை, மார்ச் 25-

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெள்ளியன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மதுரவாயல் தொகுதி வேட் பாளர் க.பீம்ராவ் பொன்னேரி வரு வாய் கோட்டாட்சியர் கந்தசாமியி டம் வெள்ளியன்று வேட்பு மனு தாக் கல் செய்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பெரம்பூர் தொகுதியில் போட்டி யிடும் அ.சவுந்தரராசன், பெரம்பூர் வட்டாட்சியர் சையது ஹூமா யூனியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

சிதம்பரம் தொகுதியில் போட்டி யிடும் கே.பாலகிருஷ்ணன் கோட் டாட்சியர் இந்துமதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி யில் போட்டியிடும் ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள மாவட்ட வழங்கல் அதிகாரி சண்முகத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அரூர் (தனி) தொகுதி வேட்பாளர் பி.டில்லிபாபு, கோட்டாட்சியர் சுப்புலெட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளர் ஏ.லாசர், கோட்டாட் சியர் இளங்கோவனிடமும், திண் டுக்கல் தொகுதி வேட்பாளர் கே. பாலபாரதி, கோட்டாட்சியர் அலு வலகத்திலும், விளவங்கோடு தொகுதி வேட்பாளர் ஆர்.லீமா றோஸ் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள பிற்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் இரா.அண்ணாதுரை, மதுரை மாநக ராட்சி கிழக்கு மண்டல அலுவல கத்தில் உதவி ஆணையர் ஆறு முக நயினாரிடமும், கீழ்வேளூர் (தனி) தொகுதிவேட்பாளர் நாகை மாலி என்ற வி.பி.மகாலிங்கம், கீழ் வேளூர் வட்டாட்சியர் அலுவலகத் திலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் கே.தங்கவேல் மற்றும் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் வீ.பழனி ஆகியோர் வியாழனன்றே வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர்.
Read more...

சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

0 comments



புதுச்சேரி மார்ச் 25
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தங்கள் மனுக்களை தாக்கள் செய்தனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாஹே நிங்களகாக புதுச்சேரியில் 3 தொகுதிகளை ஒதுக்கித்தர வேண்டும் என்று வலியுருத்தியிருந்தனர். இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பிய லாஸ்பேட்டை,பாகூர் ,திருபுவனை(தனி) ஆகிய தொகுதிகளில் வெட்பாளர்கள் மனு தாக்கள் செய்ய கட்சியின் பிரதேசக்குழு முடிவு செய்தது.
லா°பேட்டைதொகுதி
அதனை யோட்டி அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமேகனன் லா°பேட்டை தொகுதியில் போட்டியிட கட்சியின் செயற்க்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை ,நகர கமிட்டி செயலாளர் சீனுவாசன்,பிரபுராஜ்,உள்ளிட்டோர் முன்னிலையில் சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.முன்னதாக லா°பேட்டை பெத்துசெட்டிபேட்டை சிபிஎம் அலுவலகத்திலிருந்து கட்சி ஊழியர்கள்,போதுமக்கள்ளோடு பாலமோகனன் ஊர்வலமாக சென்று மனு தாக்கள் செய்தார்.
பாகூர் தொகுதி
பாகூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்போட்டியிடும் கட்சியின் கொம்யூன் செயலாளர் எஸ்.பத்மநாபன் கட்சியின் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,வில்லியனுhர் கொம்யூன் செயலாளர் முருகையன் பிரதேசக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,கமிட்டி உறுப்பினர்கள் கலியன்,வடிவேல்,ராமசாமி,சரவணன் ஆகியோருடு சென்று முதலியார் பேட்டையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருபுவனை(தனி)
திருபுவனை(தனி) தொகுதியில் போட்டியிட கட்சியின் செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன் வில்லியனுhர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,கொம்யூன் செயலாளர் உலகநாதன், பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன்,சங்கர்,மணிபாலன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பெரியசாமி,ராமமூர்த்தி,விநாயகம்,வடிவேல், ஆகியோர் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார்.
மாஹே
மாஹேதொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கட்சியின் கேரளா கமிட்டி அறிவித்திருந்த டி.கே.கங்காதரனும் வியாழனன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...

அரியாங்குப்பம் - வீராம்பட்டின கிராமத்து மக்களின் இயல்பு வாழ்கை திரும்பிட புதுச்சேரி அரசு தலையிட வேண்டும்

0 comments
புதுச்சேரி மார்ச் 23
அரியாங்குப்பம் - வீராம்பட்டின கிராமத்து மக்களின் இயல்பு வாழ்கை திரும்பிட புதுச்சேரி அரசு தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுருத்தி உள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,அரியாங்குப்பம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.பொதுவாக இதுபோல காலச்சார சீரழிவு கலை நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பு இருந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் விரும்ப தகாத மோதலுக்கு வழிவகுத்துள்ளது.இம்மோதல் ஏற்பட்ட போது காவல் துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்து இருந்தாக தெரிகிறது.
அதனை யொட்டி வீராம்பட்டினம்,அரியாங்குப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பிரச்சனையால் தொடர்சியாக ஏற்பட்ட சேதாரங்களும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.இரண்டு கிராம மக்களிடையே இருந்து வருகிற பாரம்பரிய உறவில் விரிசலும் ஏற்பட்டுவிட்டது.இதனால் வீராம்பட்டினம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.ஆண்கள்,இளைஞர்கள் அணைவரும் தலைமறைவாக உள்ளனர்.அம் மீனவமக்கள் சொல்லொன்னா துயரத்திலும்,பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் அறிவிக்கபடாத உணவு முற்றுகையை சந்தித்து வருகின்றனர்.மொத்தத்தில் அம் மக்கள் கிராமத்திலேயே முடங்கியும் நல்லது ,கெட்டது நிகழ்ச்சிக்குகூட வெளியில் வரமுடியாத நிலை உள்ளது.
எனவே புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு சேதமடைந்த வீடுகள்,கார்கள்,இருசக்கர வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும்,விராம்பட்டினம்-அரியாங்குப்பம் கிராம மக்களிடையே பொது அமைதியை ஏற்படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுருத்துகிறது.மேலும் இரண்டு கிராமமக்கள் பொது நியதி சார்ந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட மார்க்சிஸ்ட் கட்சி உள்ளார்ந்த வெண்டுகோளை விடுக்கிறது.
இவ்வாறு பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Read more...
Wednesday, March 23, 2011

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாஹே சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக டி.கே.கங்காதரன்

0 comments

புதுச்சேரி மார்ச் 19
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாஹே சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக டி.கே.கங்காதரன் (62)அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட மாஹே சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநிலக்குழு பொறுப்பில் உள்ளது.மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாஹே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக டி.கே.கங்காதரன் பெயரை கேரளா மாநில செயலாளர் பினராயிவிஜயன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அரசு ஊழியர் சம்மேளனத்தின் மாஹே பகுதி முன்னாள் பொதுச்செயலாளராகவும், பணியாற்றிய காங்காதரன் கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் மாஹே, பல்லுhர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதியில் ஓரு தொகுதியான பல்லுhரில் காங்கிர° வேட்பாளர் ஸ்ரீதரனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டார்.அத்தேர்தலில் 1300 வாக்குவித்தியாசத்தில் கங்காதரன் தோல்வியடைந்தார்.அதனை தொடர்ந்து மாஹே நகராட்சி உறுப்பினர் தேர்தலில் பந்தக்கல் வார்டில் பேட்டியிட்டு வெற்றிபெற்றார்.மாஹே பகுதி மக்களின் பிரச்சனைக்களுக்காக தொடர்ந்து பல போரட்டங்களை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரேமா என்ற மணைவியும்,சரத்,ஆதர்ஸ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
மாஹே,பல்லுhர் ஆகிய இரண்டு தொகுதிகள் தற்போது தொகுதி மறுசீரமைப்பின்படி ஒரு தொகுதியாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...

The Communist Party of India (Marxist) on Tuesday announced the names of its candidates for the 12 Assembly constituencies

0 comments
TIRUCHI: The Communist Party of India (Marxist) on Tuesday announced the names of its candidates for the 12 Assembly constituencies allotted to it by the AIADMK-led alliance for the April 13 elections.

The list includes three sitting MLAs — K. Balabharathi, P. Dilli Babu and R. Leema Rose and four State secretariat members.

The names of the candidates were finalised at the meeting of CPI (M)'s State Committee here. The constituencies and candidates are: Perambur- A. Soundararajan; Chidambaram – K. Balakrishnan ; Tirupur (South) – K. Thangavel; Periyakulam (reserved) – A. Lasar; Dindigul – K. Balabharathi; Harur (reserved) P. Dilli Babu; Vilavancode – R. Leema Rose; Vikkravandi – R. Ramamurthy ; Palayamkottai – V. Pazhani; Madurai South R. Annadurai; Maduravoyal – K. Beem Rao and Keezhvelur (reserved) Nagai Maali alias V.P. Mahalingam.

Announcing the candidates' names at the CPI (M) district unit office here, its State secretary G. Ramakrishnan said that all 12 candidates had worked for the party and had been consistently raising issues concerning people.

The party's Perambur constituency candidate A. Soundararajan is the CITU State general secretary. K. Balakrishnan is the Kisan Sabha State president.

A. Lasar is State president of the Agricultural Labourers Union. Ms. Balabharathi is the party State committee member.

Another sitting MLA P. Dilli Babu is the party's Dharmapuri district secretary. R. Leema Rose is the party's Nagercoil district secretariat member. The CPI (M) has fielded a Dalit, K. Beem Rao, from the Maduravoyal Assembly constituency, Mr. Ramakrishnan said.
Read more...
Thursday, March 10, 2011

இப்படியும் ஓரு எம்.எல்.ஏ இருக்க முடியுமா ?

0 comments

இந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த பத்தாம் தேதி யோடு முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண்டர்கள் புடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு முன் னாலும் குறைந்தது ஐம்பது, அறுபது பேர் ‘தேவ்டு’ காத்து நிற்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவான நன்மாறனின் அறை மட்டும் ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது. உள்ளே ஒரு உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளை ஒரு பையில் எடுத்து அழுத்திக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம்எல்ஏ.

‘எம்எல்ஏவுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதா ரம்” என்று எளிமையாய் சிரிக்கிறார்.

நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எஸ்சி படித்துவிட்டு வேலைபார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் வீட் டுப் பெண்!

‘பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமை யாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத் துக்கு முன்னாடி வாங்கினது.184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து’ என்கிறார்.

நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.

அம்மா, அப்பா: கூலி வேலை மகள் : எம்எல்ஏ

இவரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித் துக் கொண்டிருந்தார். யாரும் அவரு டன் இல்லை. தனி மனுஷி!

“ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடை யாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க” என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர்.

‘எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக் கிறாங்க.

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்’ என்று சொல்லும் லீமாரோஸ்(மார்க்சிஸ்ட் கட்சி) பணபலம் இல் லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

‘உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?’ என்றால், பெரியதாக சிரித்த வர்... ‘ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து’ என்று நம்மை பதற்றப் பட வைக்கிறார்.

கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

“சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார் கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?” என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?

நன்றி : குமுதம் (2.3.2011)
Read more...
Wednesday, March 9, 2011

உத்தபுரம் ஆலய நுழைவு போராட்டம்

0 comments





தமிழக அரசுக்குச் சொந்தமான புறம் போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உத் தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் துவக்க காலம் தொட்டே தலித் மக்கள் வழிபாடு செய்யவில்லை என்பது போன்ற ஆணை யை பேரையூர் வட்டாட்சியர் வடிவமைத் துள்ளது தலித் மக்களிடையே பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் தலித் மக்க ளுக்கு வழங்கிய அரசியல் சட்ட உரிமை யைப் பாதுகாக்க மதுரை உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தி வரும் போராட்டத்தின் தொடர்ச்சி யாக ஜனவரி 31ந்தேதி முத்தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தவிருக்கிறது.

இப்போராட்டத்திற்கு முன்பே அரசு இப்பிரச்சனையில் தலையீடு செய்ய வேண் டும் என தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடிதம் எழு தினார். அதற்கு இதுவரை பதில் இல்லை.

ஆலயநுழைவுப்போராட்டம் என அறி வித்த பின் அரசு நிர்வாகம் மிக வேக வேக மாக தலித் மக்களின் உரிமைகளைத் தடுக்க அனைத்து வேலைகளிலும் இறங்கி யுள்ளது. சட்டம்- ஒழுங்கு எனச்சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களைத் தேடித்தேடி ஒரு ஆணையை வழங்கி வருகிறது. அந்த ஆணையை பேரையூர் வட்டாட்சியர் ஆர். மங்களராமசுப்ரமணியன் பிறப்பித்துள்ளார். அடுத்து அந்த ஆணையில், “முத்தாலம் மன் கோயில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது” எனக்குறிப்பிட்டுள்ளது.

உத்தப்புரத்தில் காலகாலமாக முத்தா லம்மன் கோவிலில் எழுமலை, சீல்நாயக் கன்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, தங்ககவுண் டன்பட்டி, தச்சம்பட்டி, கோட்டைப்பட்டி, நல் லது நாயக்கன் பட்டி உள்ளிட்ட 18 கிரா மங்களைச் சேர்ந்த தலித் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு நடத்தியுள்ளனர்.ஆனால் கடந்த 1989 ஆம் ஆண்டு எழுமலையில் நடந்த கட்டப்பஞ் சாயத்தில் தலித் மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது, அரசமரத்தை வழிபடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு “முடி வுகளை” எடுத்தனர். இதன் பிறகு தான் தலித் மக்களைப் பிரிக்கும் வகையில் தீண் டாமைச் சுவர் கட்டப்பட்டது.

தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆய்வின் ஒருபகுதி யாக உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. இச்சுவரை இதுவரை முழுமையாக அகற்ற மனமில்லாத தமிழக அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர்-8 ந்தேதி ஒருபகுதியை அகற்றியது. அந்த வழியாக இதுவரை தலித் மக்கள் வாகனத் தில் செல்லமுடியவில்லை. மிக கவனமாக காவல்துறை அப்பாதையில் தலித் மக்கள் செல்வதைத் தடுத்து தனது பணியை “ சிறப்பாக” செய்து வருகிறது.

இந்த நிலையில் தலித் மக்கள் தங்களது வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த சூழலில் ஜனவரி28 ந்தேதி பேரையூர் வட்டாட்சியர் ஆர்.மங்களராம சுப்ரமணியன் பிறப்பித்த ஆணையைப் படித்தால் மிகச்சிரிப்பாக இருக்கும். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உத் தப்புரம் மக்களுக்காக சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதை கூட அறியாமல் அவர் பிறப்பித்த ஆணையில், “எழுமலை காவல் ஆய்வாளரின் அறிக் கையில், கடந்த 30.12.2010 அன்று சென்னை பனகல் பூங்காவில் இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை முழக்கப்போராட் டம் நடத்திய தாகவும், எதிர்வரும் 31.1.2011 அன்று உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் தலித் மக்களின் ஆலய நுழைவுப்போராட்டம் நடைபெறும் என்றும்” அறிவித்துள்ளன எனக்குறிப்பிட் டுள்ளார்.

இதில் இருந்தே எதையும் முழுமையாக விசாரிக்காமல் ஒரு தரப்பாகத்தான் அதி கார வர்க்கத்தினர் செயல்படுகின்றனர் எனத் தெரிந்து கொள்ளலாம்.

தலித் மக்கள் தங்கள் உரிமையைக் கேட் டால், அதை ஒடுக்குவதற்காக ஆதிதிராவி டர்களுக்கும், பிற இனத்தவர்களுக்கும் இடையேயுள்ள பகைமை உணர்வு தணிந்து விட்டதாக கருத இயலாத சூழ்நிலையே தற் போதும் நிலவி வருவதாகவும் தனது ரகசிய விசாரணையில் தெரியவந்ததாகக் கூறி 144 தடையாணை பிறப்பித்தல் ஆணை யில் பேரையூர் வட்டாட்சியர் கூறியுள்ளார்.

மதுரையில் உத்தப்புரத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சமீபத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கூட, தலித் மக்களுக்கும், எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். உரிமை கேட்பவர்களை பகையாளியாக பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்த போது வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தார் ஒரு பிரசுரத்தை வெளியிட்டனர். “கோவில் தரிசனம் செய்பவர்களும், செய்து வைப்ப வர்களும், அனுமதிப்பவர்களும் மகத்தான அபசாரத்திற்கு ஆளாகி நீண்டகாலம் நரக வாசம் செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் முறையிடுகின்றன. சுருதி, ஸ்மிருதி, இதி ஹாஸ, ஆகம சாஸ்திரங்களில் நம்பிக்கை யுள்ள ஆஸ்திக மகாஜனங்களுக்கு இது விஷயம் ஞாபகப்படுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அது போல இருக் கிறது உத்தப்புரத்தில் ஆலயநுழைவுப் போராட்டம் நடத்த முடிவு செய்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள அரசு அதிகாரி 144 ன் கீழ் தடை யாணை பிறப்பிப்பு ஆணை.
Read more...
Sunday, March 6, 2011

மருத்துவமனையின் பணி இடங்களை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து அதிமுக,சிபிஎம், சிபிஜ,மதிமுக, உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி மார்ச் 1
புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் பணி இடங்களை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து அதிமுக,சிபிஎம், சிபிஜ,மதிமுக, உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தேவையான பணி இடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். மருத்துவமனை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக, கூட்டனி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவமனை முன்பு நடந்த போராட்டத்திர்க்கு சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ,சிபிஜ மாநிலசெயலாளர் நாரா.கலைநாதன்,மதிமுக-மணிமாறன்,பார்வர்டு பிளாக்-முத்து,ஆர்எ°பி-லெனின்,ஆர்பிஜ-லெயோன்,எல்ஜெபி-உமாசுதன், பிஎ°பி-சோமசுந்தரம், நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முன்னதாக இப்போரட்டத்தில் ஆயிரத்திர்க்கும் மேற்பட்ட கூட்டணிகட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
Read more...

அரசைக் கண்டித்து அதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 21ல் கண்டன ஆர்ப்பாட்டம்

0 comments

புதுச்சேரி பிப் 11
புதுச்சேரி அரசு குழந்தை மருத்துவமனையின் காலி பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் காங்கிர° அரசைக் கண்டித்து அதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 21ல் கண்டன ஆர்ப்பாட்டம்
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் புதுவை பிரதேசக்குழு அலுவலகத்தில் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, அவைத் தலைவர் பாண்டு ரங்கன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் முருகன், சிபிஐ மாநில செயலாளர் நாரா. கலைநாதன் எம்எல்ஏ, ஆர்எ°பி மாநிலத் தலைவர் லெனின், குடியரசு கட்சித் தலைவர் லெனின், பிஎ°பி தலைவர் சோமசுந்தரம், எல்ஜேபி உமாசுதன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நவீன முறையில் கட்டமைக்கப்பட்டுள்ள அரசு குழந்தைகள் மற்றும் பெண்கள் மகப்பேறு மருத்துவமனையின் 2000க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வழங்காமல், தனியார் நிறுவனங்களிடம் தான்தோன்றித் தனமாக ஒப்படைத்துள்ள காங்கிர° அரசை இக்கூட்டம் கண்டிப்பதோடு மக்கள் விரோத காங்கிர° ஆட்சியைக் கண்டித்தும், மத்திய திமுக - காங்கிர° அரசின் மெகா ஊழல்களைக் கண்டித்தும் பிப்ரவரி 21ல் எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்வு 9 கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காங்கிர° அரசைக் கண்டித்து நடைபெறும் இப்போராட்டத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள என்.ஆர் காங்கிர° கட்சியும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தனர். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read more...

குண்டும் குழியுமான சாலைகளை சரி செய்யக்கோரி

0 comments

புதுச்சேரி பிப் 20
இலா°பேட்டையில் குண்டும் குழியுமான சாலைகளை சரி செய்யக்கோரி மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலா°பேட்டை ஆரம்ப சுகாதாரநிலையத்தை 24மணிநேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெத்துசெட்டிபேட்டை,அசோக்நகர்,குறிஞ்சிநகர்,ஆகிய வார்டுகளில் தேங்கியுள்ள குப்பைகளை துhர்வாரவேண்டும்.சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்கவேண்டும்.வீடற்ற மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி இப்போரட்டம் நடைபெற்றது.
கல்லுhரி சாலையில் நடந்த ஆர்பாட்டத்திற்க்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள்,செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,ராமச்சந்திரன்,உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன்,சந்துரு,குப்புசாமி,உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Read more...

குழந்தைகள் மருத்துவமனையின் பணி இடங்களை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து

0 comments
புதுச்சேரி பிப் 26

புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் பணி இடங்களை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து சிபிஎம், சிபிஐ, அதிமுக உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தேவையான பணி இடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். மருத்துவமனை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1-ல் மருத்துவமனை முன்பு சிபிஎம், சிபிஐ, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை விளக்கி நெல்லித்தோப்பில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு அதிமுக வார்டு செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள், அதிமுக நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர், சிபிஐ -சலீம், பார்வர்டு பிளாக்-முத்து, ஆர்பிஐ-லயோன் ஆகியோர் பேசினார்கள்.
இதே போல் நேரு வீதியில் நடந்த பிரச்சாரத்திற்கு சிபிஎம் பிரதேசக் குழு உறுப்பினர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், முருகன், சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் வி°வநாதன், நகர செயலாளர் ஆனந்து உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். புதுச்சேரி, நெல்லித்தோப்பு, பாக்குமுடையான்பேட் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் நடைப்பெற்றது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com