புதுச்சேரி பிப் 11
புதுச்சேரி அரசு குழந்தை மருத்துவமனையின் காலி பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் காங்கிர° அரசைக் கண்டித்து அதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 21ல் கண்டன ஆர்ப்பாட்டம்
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் புதுவை பிரதேசக்குழு அலுவலகத்தில் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, அவைத் தலைவர் பாண்டு ரங்கன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் முருகன், சிபிஐ மாநில செயலாளர் நாரா. கலைநாதன் எம்எல்ஏ, ஆர்எ°பி மாநிலத் தலைவர் லெனின், குடியரசு கட்சித் தலைவர் லெனின், பிஎ°பி தலைவர் சோமசுந்தரம், எல்ஜேபி உமாசுதன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நவீன முறையில் கட்டமைக்கப்பட்டுள்ள அரசு குழந்தைகள் மற்றும் பெண்கள் மகப்பேறு மருத்துவமனையின் 2000க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வழங்காமல், தனியார் நிறுவனங்களிடம் தான்தோன்றித் தனமாக ஒப்படைத்துள்ள காங்கிர° அரசை இக்கூட்டம் கண்டிப்பதோடு மக்கள் விரோத காங்கிர° ஆட்சியைக் கண்டித்தும், மத்திய திமுக - காங்கிர° அரசின் மெகா ஊழல்களைக் கண்டித்தும் பிப்ரவரி 21ல் எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்வு 9 கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காங்கிர° அரசைக் கண்டித்து நடைபெறும் இப்போராட்டத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள என்.ஆர் காங்கிர° கட்சியும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தனர். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.